Home Blog Page 2422

போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம் ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளது.

யுத்தத்தினால் பொருளாதார ரீதியாக நொந்து போயுள்ள மக்களுக்கு பப்பாசி செய்கை வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. குறிப்பாக  வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் வாழும் மக்கள் பலர் மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றனர்.

நெடுங்கேணிப் பகுதியில் உள்ள சன்னாசிபரந்தன், சின்னடம்பன், ஒலுமடு, மாறாஇலுப்பைக்குளம், துவரங்குளம், பட்டிக்குடியிருப்பு, புளியங்குளம் வடக்கு, கனகராயன்குளம் வடக்கு உள்ளிட்ட பல கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.7 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு பகுதியில் பப்பாசி செய்கையை செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று விவசாய திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆரம்பத்தில் உதவி செய்திருந்தது. தற்போது பல கிராமங்களில் மக்கள் தாமாகவே இப் பயிர் செய்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். இதேவேளை, அவர்களது உற்பத்தியை சந்தைப்படுத்தும் நோக்கிலும் அவர்களது பிரச்சனைகளை கலந்தாலோசிக்கும் நோக்கிலும் பழப் பயிர்ச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

200 பயிர் செய்கையாளர்கள் இணைந்து இந்த சங்கத்தை அமைத்திருந்தனர். இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளத்தினால் 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதைப் பெற்றுள்ள இந்தச் சங்கம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பப்பாசிப் பழத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

கையில் ஒரு பையுடன் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் மீள்குடியேறிய மக்கள், இன்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு இப் பயிர்செய்கை பெரிதும் உதவியுள்ளது.

கணவனை யுத்தத்தில் காவு கொடுத்து விட்டும், தமது கணவன்மாரை காணாமல் போனோர் வரிசையில் இணைந்து விட்டும் வாழ்வதற்கு வழி தெரியாது தவித்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பலவற்றுக்கும் பப்பாசி செய்கையே வாழ்வாதாரத்தை கொடுத்துள்ளது.

கணவனை இழந்த நிலையில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளுடன் துவரங்குளம் பகுதியில் வாழும் தாயார் ஒருவர் கூறுகையில்,

என்னுடைய கணவன் யுத்தத்தில் இறந்து விட்டார். மூன்று பிள்ளைகளையும் கல்வி கற்க வைக்க முடியாமல் மிகவும் கஸ்ரப்பட்டேன். தோட்டம் செய்து அதில் வரும் வருமானத்தில் என்றாலும் குடும்பத்தை கொண்டு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் அது கூட சாதகமாக அமையவில்லை. கூலி வேலைக்குச் சென்றேன். கணவன் இல்லை என்பதால் பலரும் பலவிதமாக சிந்தித்தார்கள்.5 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

என்னாலே எதுவுமே முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து பிள்ளைகளுடன் செத்திடலாமோ என்று கூட நினைத்தேன். ஆனால் பப்பாசி பயிர்ச் செய்கை பற்றி அறிந்து அதையும் ஒரு தடவை செய்து பார்ப்போம் என முடிவெடுத்து அதனைச் செய்தேன். தற்போது வருமானம் கிடைக்கிறது. அதன் பாராமரிப்புக்கான செலவுகள் போக கிடைக்கும் வருமானத்தில் எனது பிள்ளைகளை நான் நல்ல படியாக கல்வி கற்க வைக்கின்றேன் என்றார்.

இவ்வாறு கடந்த பல மாதங்களாக தமது வாழ்வாதரத்தை கொண்டு நடத்துவதற்கு பப்பாசிச் செய்கையே உதவியது என்கின்றனர் செய்கையாளர்கள். பப்பாசி கன்று நாட்டப்பட்டு 6 மாதங்களில் இருந்து பயன் பெறக் கூடியதாக இருப்பதுடன், இதற்கான உற்பத்திச் செலவும் மிகக் குறைவாகவே உள்ளது.

ஆரம்பத்தில் பப்பாசி விதைகளை அல்லது கன்றுகளை வாங்கி நடுவதற்கும், வாரத்தில் மூன்று தடவை தண்ணீர் பாய்சுவதற்குமே செலவு. ஆறு மாதங்களில் காய் பிடிக்கத் தொடங்கியதும் 10 ஆம் மாதத்தில் இருந்து வருமானத்தைப் பெற முடியும்.

பப்பாசி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு கால் ஏக்கருக்கு மாதாந்தம் 30,000 ரூபாய் தொடக்கம் 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் இதனைக் கொண்டு குடும்பத்தைக் கொண்டு நடத்தக் கூடியதாகவும் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழப்பயிர் செய்கையாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் கூறுகையில், எங்களுடைய செய்கையாளரின் உற்பத்தியை சந்தைப்படுத்த தனியார் கம்பனி ஒன்றிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் கிழமையில் ஒரு தடவை வந்து கிலோவுக்கு 30ரூபாய் படி பப்பாசியை கட்டிக் கொண்டு போய் எங்கள் சங்கத்தின் மூலம் பணத்தை தருகிறார்கள்.

அவர்கள் கட்டிக் கொண்டு போன பின் தனியார் சந்தைகளில இருந்து வந்து பப்பாசிப் பழங்களை 20 ரூபாய் படி கட்டுவார்கள். தற்போது எல்லோருக்கும் வருமானம் வருகிறது என்கிறார்.3 2 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

இவ்வாறு பப்பாசி செய்கையில் வருமானம் வருகின்ற போதும் வவுனியா வடக்கின் சில கிராமங்களில் ஊடுவுரும் யானைகள் இப் பப்பாசி பயிர்களை நாசப்படுத்தி அக் குடும்பங்களின் பொருளாதாரத்தை அழித்து விடுகின்றது. இதனால் பலர் மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.

வாழ்வதற்கு வழிகாட்டும் தமது பயிர்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும் என்பது பயிர் செய்கையாளரின் கோரிக்கையாகவுள்ளது.

இது தவிர, யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் பல குடும்பங்கள் வாழ்வதற்கு வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இப் பப்பாசி செய்கையில் ஈடுபட ஆர்வமாகவும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை. பப்பாசி பயிர்ச் செய்கைக்கான விதைகளைப் பெறுவதற்கும், அதனை முதல் 6 மாதங்கள் வாரத்தில் மூன்று தடவையாவது நீர் இறைந்து பராமரிப்பதற்கும் உரிய மூலதன வசதி இன்மையே.

எனவே, வடக்கின் அபிவிருத்தி, தொழில் முயற்சி உதவிகள் என கூறிக் கொள்ளும் அரசாங்கமும், தாயக உறவுகளுக்காக உதவி செய்யும் புலம்பெயர் உறவுகளும் இவ்வாறான பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிப்பதன் மூலம் மீள்குடியேறிய நிலையில் அவலத்துடன் வாழும் பல குடும்பங்களின் வீடுகளில் விளக்கு ஒளிரும் என்பதே உண்மை.

 

“இது இந்தியா இல்லை;இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்”

“இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்” என பிணை மனு ஒன்றின் விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாகிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன் போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையின்போது போராட்டக்காரர்களை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ், “இது இந்தியா அல்ல பாகிஸ்தான். இங்கே அனைவரின் சட்ட உரிமையும் காக்கப்படும்” எனக் கூறி அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த மனு விசாரணையின் போது, “ஜனநாயக நாடு மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது. நீதிமன்றம் மக்களின் உரிமையைக் காக்கவே இருக்கிறது. இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும். அதனால் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அனுமதி கேளுங்கள், கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள்” என கூறினார் நீதிபதி அதஹர் மினால்லாஹ்.

நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  பல்வேறு அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கோரி தமிழக சட்டமன்றம் இன்று முற்றுகையிடப்படும் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

போராட்ட அமைப்பாளர்களை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை தங்களுக்குப் பொருந்தாது என்று குறித்த அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையில் நடத்திய போராட்டத்தின்போது நடந்த தடியடி மற்றும் கைதுக்கு பிறகு தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கின.

சனிக்கிழமை முதல் வண்ணாரப்பேட்டையில் பெண்கள் திரளாக ஒன்றுகூடிப் போராடத் தொடங்கினர்.

வெள்ளியன்று நடந்த போராட்டத்தின்போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்ததாகவும், மூன்று காவலர்கள் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

பின்னர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை, பின்னர் சுமார் 120 பேரை கைது செய்தது.

இந்த செய்தி பரவியதும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் போரட்டம் தொடங்கியது.

 

சிறீலங்கா சுற்றுலாத்துறையின் இழப்பீடு 800 மில்லியன் டொலர்கள்

சிறீலங்காவின் சுற்றுலாத்துறை கடந்த வருடம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் அதனால் 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரு-மானத்தை சிறீலங்க இழந்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு 4,381 மில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறை கடந்த வருடம் 3,592 மில்லியன் டொலர்களையே பெற்றதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 2.3 மில்லியன் பயணிகள் வருகைதந்த போதும், 2019 ஆம் ஆண்டு 1.9 மில்லியன் பயண-pகளே வருகைதந்ததாகவும், இது 18 விகித வீழ்ச்சி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவேன். பவீந்திரன் தெரிவிப்பு

ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இளைஞர்களது வாழ்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பேன் என்று இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான குணபாலசிங்கம் பவீந்திரன் தெரிவித்தார்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து அவர்…….

எதிர்வரும் இளைஞர்பாராளுமன்ற தேர்தலில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் போட்டியிடுகின்றேன் நான் வெற்றி பெறுவதற்கு அனைவரது ஆதரைவினையும் கேட்டுநிற்கின்றேன்.இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பலருக்கு விழிப்புணர்வு இல்லாத நிலைதற்போது காணப்படுகின்றது. எனவே நான் வெற்றிபெறும் பட்சத்தில் அது தொடர்பாக இளைஞர்களிற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவேன்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சேவைமன்றங்களிற்குள் உள்வாங்கி அதனூடாக கிடைக்கபெறும் தொழில்வாய்புக்கள் மற்றும் ஏனையவேலைதிட்டங்களை அவர்களிற்கு பெற்றுக்கொடுத்து அதன்மூலம் வாய்புக்களை உருவாக்கி;கொடுப்பேன்.

வவுனியாவை பொறுத்தவரைகலாசாரம் சார்ந்தவிடயங்கள் ஊக்குவிக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது.அதற்கு முன்னுரிமை கொடுத்து இன மத மொழி பேதமின்றி கலாசாரத்தைஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.

அத்துடன் ஒடுக்குமுறைகளிற்குள்ளாக்கப்படும் இளைஞர்களது முன்னேற்றத்திற்கு பங்களிப்பேன்.இம்முறை வுவுனியாவில்; ஐந்துபேர தேர்தலில்;போட்டி இடும் நிலையில் நான் வெற்றிபெற்றாலும் தோல்விஅடைந்தாலும் எனது சேவைகள் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவே உங்கள் வாக்குகள் மூலம் என்னை வெற்றிபெற செய்யுங்கள்.இளைஞர்களது வாழ்கையை ஒளிஊட்டகூடிய நல்ல இளைஞர் தலைவரை உருவாக்குங்கள்.என்றார்.

வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

IMG 1c2030a4c84709274d5f3334f91ea080 V வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

IMG 05c8046869c5b1b4b2b151d0d19c279d V வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படுகாயம்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது-ஹட்டன்- டிக்கோயா நகரசபை

அண்மைக்காலங்களில், குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அரசாங்க பேருந்துகளிலும் தமிழ்மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினருமான எஸ்.கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகருக்குள் வரும், வெளியேறும் அரசாங்க பேருந்துககள் அனைத்திலும், தமிழ்மொழியிலான பெயர்ப் பலகைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என இது தொடர்புடைய பிரேரணையொன்றை, ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் முன்வைத்து உரையாற்றினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்குக்கு​ வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டமாக நுவரெலியா காணப்படுவதாகவும் அதிலும் ஹட்டன் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே, அதிகளவான தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.​

இந்நிலையில், பஸ்களில் காட்சிப்படுத்தப்படும் பெயர்கள், மும்மொழியிலும் சம அளவில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் எனவே, இது குறித்து ஹட்டன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போவுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இந்நிலையில், இந்தப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழரை சுட்டுக் கொன்ற படையினன்;10 வருட சிறை தீர்ப்பளித்த இளஞ்செழியன்

திருகோணமலை – மூதூர் பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் படையினனுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிலாவெளி – இக்பால் நகர் ஏழாம் கட்டை பகுதியைச் சேர்ந்த மொஹிதீன் முகம்மது நிபாஸ் (50 வயது) படையினனுகே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூதூர் 58 ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இவர் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை நிரூபணமான நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மூதூர் – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா மனோகரனின் (41 வயது) குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் அதனை செலுத்த தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

5 நாட்கள் காணாமல் போன தொழிநுட்ப உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கடந்த 5 நாட்களாக காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு புங்குடுதீவு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் இன்றையதினம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே சடலம் மீதான சந்தேகம், மற்றும் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது தொடர்பில் தெரிவிக்க முடியும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

இரட்டை குடியுரிமை! அவையில் வெடித்தது சர்ச்சை

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இதன்மூலம், பேரவையில் தவறான தகவலை அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

இதனையடுத்து, இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு இதற்கு முன்பு இந்திய குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால்,

இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரின் பதில் மற்றும் சபாநாயகரின் முடிவு திருப்தியில்லை எனக் கூறி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : #India #Refugee #Sri Lanka