Home Blog Page 2408

ஒரு நாளில் அதிகமானோர் கொரொனவைரஸினால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா மாறியுள்ளது

அங்கு நாள் ஒன்றுக்கு 594 புதிய கொரோனவைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்

இதன் அடிப்படையில் அங்கு தற்போது 2931 கொரோனவைரஸ் தொற்றாளர்கள் சிசிக்சைப் பெற்று வருகின்றனர்

17பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்

தற்போதைக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவே அதிகமான கொரோனவைரஸ் தொற்றாளர்களை கொண்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அனுப்பப்பட்டு கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

சிறிலங்கா பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்கு காலம் தாழ்த்தாது பாரப்படுத்தப்படல் வேண்டும்

சிறிலங்கா பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்கு காலம் தாழ்த்தாது பாரப்படுத்தப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் விடயம் 2 இன் கீழ் நேற்று (28) உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது.

இந்த பிரேரணையின் உள்ளடக்கமானது , மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப் பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்ட போதிலும், இந்த 30/1 பிரேரணையானது, சிறிலங்கா அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது இந்த ஐ.நா மனித உரிமை சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது.

இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு (Hybrid) குற்றவியல் பொறிமுறையை கொண்டிருக்கும் என்று, தமிழர்களிற்கு சொல்லப்பட்ட போதும் (தமிழர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்ட போதும்) அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும் , தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பரில் சிறிலங்கா வில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது.

இங்கு இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

இந்த புதிய அரசாங்கமானது , எதிர்பார்க்கப்பட்டபடியே, 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக , உத்தியோகபூர்வமாக இந்த மன்றிற்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது .

நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றார்.

விமானம் மீது லேசர்கதிர் தாக்குதல் முயற்சி;அமெரிக்கா குற்றச்சாட்டு

தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானம் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக சீன கடற்படை மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘பி8ஏ போசிடான்’ என்ற கண்காணிப்பு விமானம் கடந்த வாரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. பிலிப்பைன்சின் குவாம் பகுதியில் சுற்றி வந்தபோது, அதன் மீது சீன கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து லேசர் கதிர்களை பாய்ச்சி சிதைக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் நேற்று குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக பசிபிக் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போசிடான் கண்காணிப்பு விமானம் மீது சேதத்தை ஏற்படுத்தக் கூடிய லேசர் (ஒளிக்கற்றைகள்) பாய்ச்சப்பட்டது சென்சார் கருவிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த லேசர் கற்றைகளை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. சீன கடற்படை இந்த லேசர் கற்றைகளை ஆயுதமாக பயன்படுத்தி விமானத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இந்த லேசர் காரணமாக, விமானத்துக்கும், அதில் இருந்த கடற்படையினருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல்,’ என்று கூறப்பட்டுள்ளது.

வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்க எனக் கூறி கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் க அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டன.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.இருந்தும் தாலிபான்களை அமெரிக்க வல்லரசால் வெற்றிகொள்ள முடியவில்லை. அமெரிக்க கூட்டுப்படையினர் அங்கு பாரிய இழப்புகளை சந்தித்துவருகின்றனர்.694940094001 6033173018001 6033178176001 vs வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

இதுவரை ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 3,500 அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா தாலிபான்களை
அமைதி பேச்சுக்கு அழைத்தது.

அதைத்தூடர்ந்து இருதரப்புக்கும் பொதுவான கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த வாரம் ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா, தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.p03bhrr4 வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

அப்போது ரஷ்யா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் இந்திய சார்பில் கத்தார் தூதர் குமரன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று காலை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

இதன் போது கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, இந்நூல்களின் அறிமுக உரையினை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் உபபீடாதிபதி பொ.சத்தியநாதனால் நிகழ்த்ததப்பட்டதோடு, நூல்களின் நயவுரைகளை கலாநிதி தமிழ்மணி அகளங்கன், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி நேலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ச.பவானந்தன் ஆகியோரால் நிகழ்தப்பட்டதுடன், ஏற்புரையினை நூலாசிரியர் காரைக்கவி கந்தையா பத்மானந்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
DSC09355 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

DSC09291 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

DSC09296 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தி.ஜெயகாண்டீபன் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ஜெகநாதன் சுதாநாதன், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் பெருந்தலைவர் வே.இறைபிள்ளை மற்றும் கல்வியளாளர்கள், கலைஞர்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய வீடு! சிக்கலில் ரிசாத் பதியூதீனின்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிசாத்தின் மனைவி மற்றும் அவரின் சகோதரர்களுள் ஒருவரான ரியாஜ் பதியுதீனின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆவணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை வீடு தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியாக மாறிவருவதாக நளின் பண்டார சாடல்

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

“சேவை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுகின்றது.

போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நிலைப்பாட்டியேலே அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.

எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன், மஹிந்த தரப்பினர் 2015 இற்கு முன்னராக நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று வருகின்றது” என்றார்.

நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னர் வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நடமாடும் நீதிமன்றம் இயங்கியது. ஆனால் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாதத்தில் இரண்டு நாட்கள் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை ஏற்படுத்தி தருமாறு கிராம மட்ட பொது அமைப்புக்கள் உதவிப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானத்திற்காக முன்வைக்கப்பட்ட போது இது தொடர்பான கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், அதனை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இத் தீர்மானத்தின் அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகளுடன் பேசி குறித்த விடயத்தை முன்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

பூநகரியில் பாரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.

323 கிலோ எடைகொண்ட 117 கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக இன்று (29) அதிகாலை 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் தாக்குதல்

ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க. பார்த்தீபன் மீது நேற்றைய தினம் கிராம சேவகரொருவர் தாக்குதல் நடத்தியதியதாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் அலியார் மருதமடு குளத்தின் கிழ் செய்;கை பண்ணப்படும் வயல் நிலங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரின் தலைப்பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (28.2)அலியார் மருதமடு குளத்தின் கிழுhன வயல் நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பிலான கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபன் குறித்த கிராமத்தின் கிராம சேவகரை கூட்டத்தில் இருக்க கூடாது எனவும் அவரே கிராமத்தில் பிரச்சனைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்ததுடன் அவர் ஊடகங்களுக்கு எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கிராம சேவகருக்கும் ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பார்த்தீபன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் இருவரும் சபையினருக்கு முன்பாக பிரதேச செயலாளருக்கு முன்பாகவே தள்ளுப்பட்டுள்ளனர்.

இதன்போது பார்த்தீபனின் தலையில் சுவர்ப்பகுதி பட்டமையினால் காயமேற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கிராம சேவகரும் தக்கும் பார்த்தீபன் தாக்கினார் என தெரிவித்து வைத்தியசாலையில் வைத்திசாலையில் சிகிச்சைக்காக சென்றபோது அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,
அலியாமடுகுள சிறுபோக நெற்செய்கை தொடர்பாக நேற்றையதினம் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இக்கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் க.பார்த்தீபன் கிராமசேவையாளருடன் தன்னால் இருக்க முடியாதுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் போது கிராமசேவகரும் பார்த்தீபனும் எனது சொல்லை செவிமடுக்காது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் இருவரும் தள்ளுப்பட்டுக்கொண்டிருந்தனர். இதன் போது யார் முதலில் அடித்தது என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.