ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் தாக்குதல்

ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க. பார்த்தீபன் மீது நேற்றைய தினம் கிராம சேவகரொருவர் தாக்குதல் நடத்தியதியதாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் அலியார் மருதமடு குளத்தின் கிழ் செய்;கை பண்ணப்படும் வயல் நிலங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரின் தலைப்பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (28.2)அலியார் மருதமடு குளத்தின் கிழுhன வயல் நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பிலான கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபன் குறித்த கிராமத்தின் கிராம சேவகரை கூட்டத்தில் இருக்க கூடாது எனவும் அவரே கிராமத்தில் பிரச்சனைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்ததுடன் அவர் ஊடகங்களுக்கு எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கிராம சேவகருக்கும் ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பார்த்தீபன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் இருவரும் சபையினருக்கு முன்பாக பிரதேச செயலாளருக்கு முன்பாகவே தள்ளுப்பட்டுள்ளனர்.

இதன்போது பார்த்தீபனின் தலையில் சுவர்ப்பகுதி பட்டமையினால் காயமேற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கிராம சேவகரும் தக்கும் பார்த்தீபன் தாக்கினார் என தெரிவித்து வைத்தியசாலையில் வைத்திசாலையில் சிகிச்சைக்காக சென்றபோது அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,
அலியாமடுகுள சிறுபோக நெற்செய்கை தொடர்பாக நேற்றையதினம் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இக்கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் க.பார்த்தீபன் கிராமசேவையாளருடன் தன்னால் இருக்க முடியாதுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் போது கிராமசேவகரும் பார்த்தீபனும் எனது சொல்லை செவிமடுக்காது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் இருவரும் தள்ளுப்பட்டுக்கொண்டிருந்தனர். இதன் போது யார் முதலில் அடித்தது என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.