Home Blog Page 2398

அரிசி வாங்குபவர்களா நீங்கள்? அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

அரிசிப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் நிறை குறைக்கப்பட்டுள்ளதால் சுப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் நேற்று முன்தினம் (05) கண்டியில் உள்ள Arpico மற்றும் Keellsகீல்ஸின் சுப்பர் மார்க்கெட்டுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் Keells,அரலிய, ஆசிரி ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்படும் அரிசி மூடைகளில் தோராயமான எடையில் குறைப்பு உள்ளது, மேலும் இந்த உற்பத்தியாளர்கள் நிகர எடையை தவிர்த்து சட்டவிரோதமாக குறைந்த எடை மூலம் பொதியிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் துறையின் பொறுப்பாளர் துலித் அசோகா கூறுகையில், ‘உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது 5 கிலோ, 10கிலோ அரிசி மூடைகளே சோதனை செய்யப்பட்டுள்ளன.

இதன் போது குறித்த அரிசி மூடைகளில் இடப்பட்டுள்ள நிறை, அந்த மூடையை எடையிட்டு பார்க்கும் பொழுது மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் இம்முறை நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை மாத்திரமே விடுத்துள்ளோம், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம்

2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வன்னி மாவட்டத்தில் மூன்று பேரும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவருமாக நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

விபரங்கள் ….1583555598 Media Release 02 வடக்கில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம்

யாழில் அதிர்ச்சி சம்பவம்!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், கடந்த 05 ஆம் திகதியும் தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவுடன், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், யாழ் நீதிவான் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழி வழக்கு சர்ச்சை; நீதிமன்றத்தின் முடிவு 10 ஆம் திகதி!

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதிட முடியுமா,இல்லையா என்ற சர்ச்சை தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூலச் சமர்ப்பணம் நேற்று முன்தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த மாதம் 25ஆம் திகதி மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அந்த வழக்கு தொடர்பான எழுத்து மூலச் சமர்ப்பணத்தை இம்மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள்
முன்வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே நேற்று முன் தினம் இந்த எழுத்து மூலசமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் 10ஆம் திகதி இவ்விடயம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் வடக்கு வேட்பாளர்கள் தெரிவு பூர்த்தி; கிழக்கில் இழுபறி நீடிப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாணத்தின் வேட்பாளர் தெரிவு இறுதி செய்யப்படவில்லை. வடக்கு மாவட்டங்களின் வேட்பாளர்களும் சிக்கலின்றி இறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் வேட்பாளர் நியமனக் குழுவின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறிய இழுபறியில் இருப்பதாகத் தெரிகின்றது,

யாழ்ப்பாணத்தில் – புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ரெலோ சார்பில் சுரேன் குருஸ்வாமி ஆகியோர் பங்காளிக்கட்சிகள் சார்பில் களமிறங்கவுள்ளனர். தமிழ் அரசுக் கட்சியின் ஏனைய ஏழு வேட்பாளர்கள் வெள்ளியிரவு இறுதி செய்யப்பட்டனர். தற்போது எம்.பிக்களாக உள்ள மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோருடன் புதிய வேட்பாளர்களாக வேதநாயகன் தபேந்திரன், சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் தெரிவு செய்
யப்பட்டனர்.

வன்னி மாவட்டத்தில் – புளொட் சார்பில் ஜி.ரி.லிங்கநாதன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் ஒருவர் களமிறங்கவுள்ளனர். தமிழ் அரசு கட்சி சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன், குகதாசன், இளங்கோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு மாவட்டமே பெரும் இழுபறியில் இருந்தது. தமிழ்அரசு கட்சி சார்பில் ஐவர் களமிறக்கப்படவிருக்கிறார்கள். முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், நிலோஜினி ஆகியோர் இறுதிசெய்யப்பட்டனர். இருந்த பொதிலும் மட்டக்களப்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

சுயேட்சைக் குழுவாக யாழில் களமிறங்குகின்றார் ஐங்கரநேசன்

பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச்
செலுத்தியுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில், நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர் சுயாதீனக் குழுக்களாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயில்வாகனம் விமல்தாஸ், பொன்னுத்துரை ஐங்கரநேசன், விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான
மூன்று சுயாதீனக் குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் உடவத்தகே மஹிந்த சில்வா என்பரின் சுயாதீனக் குழு கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான், அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் தங்கள் சுயாதீனக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர்

ரெலோ தலைமைக் குழு கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெறுகின்றது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழு கூட்டம் இன்று காலை திருகோணமலையில் இடம்பெறுகிறது.

கடந்த பல மாதங்களாகக் கட்சியில் செயலாளர், தவிசாளர் இல்லாமல் ரெலோ இயங்கி வரும் நிலையில், இன்று தற்காலிக செயலாளர், தவிசாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. அத்துடன், வேட்பாளர்களும் இறுதி செய்யப்படவுள்ளனர்.

அத்துடன், பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து நிதியை பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா ராஜினாமா; யாழில் களமிறங்குகிறார்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரேயயாரு தமிழ் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தானும் சேர்ந்து அனுசரணைப் பணி வகித்து நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமையை ஆட் சேபித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அவர் பதவி விலகினார் எனக் கூறப்பட்டது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின்
இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.

பதவி துறந்திருக்கும் அம்பிகா நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் வெட்பாளராகப் களமிறங்கவிருப்பதாக தெரியவந்திரக்கின்றத. தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்ட பெண் வேட்பாளர்களில் இவரும் ஒரவர் எனத் தெரிகின்றத. இத குறித்த உத்தியொகபூர்;வ அறிவிப்பு பின்னர் வெளியாகம்.

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள “விடா முயற்சி“

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள புதிய ரோவர் இயந்திரத்திற்கு “விடா முயற்சி“ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து ஜுலை 17ஆம் திகதி காலை 9 மணியளவில் அலையன்ஸ் அட்லஸ் வி ரொக்கெட் மூலம் புதிய ரோவர் இயந்திரம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பும் இந்த 5ஆவது ரோவர் இயந்திரத்திற்கு, மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணாக்கர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி மூலம் பெர்சிவெரன்ஸ் (Perseverance) அதாவது “விடா முயற்சி“ என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

7மாதங்களுக்கு நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த பின் அடுத்த ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் ரோவர் இயந்திரத்தை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் கோத்தபாயா ராஜபக்ஸ

ஜெனீவா ஆலோசனை நாட்டின் இறைமைக்கான சவால் என சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கோத்தபாயா ராஜபக்ஸ,

ஜெனீவா யோசனை நாட்டின் இறைமைக்கும் அபிமானத்திற்குமான சவாலாகும். தமது பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக் கொண்ட வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதுவே நாம் இணை அனுசரணையிலிருந்து விலகியதற்கான காரணமாகும். நாம் இப்பிரச்சினையின் ஆரம்பத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதார பின்னடைவை பற்றிக் கூறியவண்ணமே உமா மகேஸ்வரன் தமது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்திருந்தார். பின்னர் அந்த உண்மையை மறைத்து பிரிவினைவாதத்தை முன்னெடுத்திருந்தார். நாம் உண்மையான பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்.

நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வேலைத் திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் காலத்தில் தனது பிரதான எதிர்த் தரப்பு வேட்பாளரின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் குறிப்பிடவில்லை. எதிரான கருத்துக்களை விமர்சிக்கவில்லை.

எனக்கு கொள்கையே முக்கியம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்துள்ளது. அதன் இரண்டு இடைக்கால அறிக்கைகள் எனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இறுதி அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய அவசியமான நடவடிக்கைகள் எடுக்க முடியும். தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலும் முக்கிய பல முன்மொழிவுகள் உள்ளடங்கி உள்ளன. அவை அனைத்தையும் கருத்திற் கொள்ளவுள்ளோம். தற்போது இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பாக பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகையும் திருப்தியடைந்துள்ளார்.

பல நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு வழங்கிய நியமனங்கள் தொடர்பாக திருப்தி கொள்ள முடியும். சில நியமனங்கள் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் பெற்றவர்கள் குறித்த காலத்திற்குள் சிறந்த பெறுபேறுகளை காட்ட வேண்டும். அப்படியில்லை எனில் அவர்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும்.

மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வதில்லை. அதன் பொறுப்பு முழுமையாக மக்களிடமே உள்ளது. அவர்கள் மிகத் தகுதியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.