செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள “விடா முயற்சி“

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ள புதிய ரோவர் இயந்திரத்திற்கு “விடா முயற்சி“ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து ஜுலை 17ஆம் திகதி காலை 9 மணியளவில் அலையன்ஸ் அட்லஸ் வி ரொக்கெட் மூலம் புதிய ரோவர் இயந்திரம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அனுப்பும் இந்த 5ஆவது ரோவர் இயந்திரத்திற்கு, மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணாக்கர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி மூலம் பெர்சிவெரன்ஸ் (Perseverance) அதாவது “விடா முயற்சி“ என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

7மாதங்களுக்கு நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த பின் அடுத்த ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் ரோவர் இயந்திரத்தை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.