Home Blog Page 2369

சுவிஸ் போதகரைச் சந்தித்தவருக்கு கொரோனா! உறுதிப்படுத்திய அதிகாரிகள்

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வந்து திரும்பிய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய ஆண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வரும் இவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுவிஸ் போதகர் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை அவருடன் பழகியவர்கள், ஆராதனையில் பங்கேற்றவர்கள் ஆகியோரைத் துரித கதியில் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.

இவ்வாறானவர்களை உடனடியாகத் தேடிப்பிடித்து தனிமைப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடாகியியுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களிலும் சமுக வைலைத்தளங்களிலும் பரவியதை அடுத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகர் சென்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இதனால் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் மக்கள் அச்சப்படவேண்டியதில்லை என்றும், வீடுகளுக்குள் இருந்து தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் நோய் தொற்றில் இருந்து விடுபடமுடியும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிஸ் போதகர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவரது ஆராதனையில் பங்கேற்ற 137 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போதகர் யாழ்ப்பாணத்தில் இருந்தவேளை அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த போதகர் போல் சற்குணராசாவால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் ஒருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பில்உள்ள வைத்தியசாலைக்கு இன்று மாலை மாற்றப்படவுள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி தாவடியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரர் எனத் தெரிவிக்கப்பட்டது.

வடக்கில் ஊரடங்கு செவ்வாய் காலை வரை நீடிப்பு

வடமாகாணத்தில் நாளை காலை 6 மணி முதல் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டமையை அடுத்து வட மாகாணத்தை அரசாங்கம் முற்றாகச் ‘சீல்’ செய்திருக்கிறது.

இம்மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம்செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.

ஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தரத்தை இழந்தன உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்கள்

கொங் கொங், சிங்கப்பூர் மற்றும் ஒசகா ஆகிய நகரங்களே உலகின் மனிதர்களின் வாழ்க்கைச் செலவுகள் மிகவும் உயர்வாக உள்ள நகரங்களாகும்.

ஆனால் கொரோனா வைரஸ் இந்த நிலையை மாற்றியுள்ளது. இந்த நகரங்கள் தமது வருமானத்தின் பெரும்பகுதியை சுற்றுலாப் பயணத்துறை மூலமே பெற்றுவந்தன. ஆனால் தற்போது இந்த துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அவை வருமானத்தை இழந்துள்ளன.

எனவே அங்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளதால் அவை தற்போது செலவுமிக்க நகரங்கள் என்ற நிலையை இழக்க ஆரம்பித்துள்ளதாக த எக்கொனொமிக்ஸ் இன்ரெலியன் புனிற் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடக்கம்-500,000 பேர் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடங்கியுள்ளதுடன் 500,000 மக்கள் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடம்பர விடுதிகள் உட்பட 2500 இற்கு மேற்பட்ட விடுதிகள் சிறீலங்காவில் மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் நாள் வரையில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எமது பணி வீட்டில் இருந்து செய்ய முடியாத பணி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வெளியேறி வருவதுடன், பெருமளவான பயணிகள் தமது பயணத்தை நிறுத்தியும் வருகின்றனர் என சிறீலங்கா விடுதிகள் சபையின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்தனர்.

சிறீலங்கா நாணயம் பெரும் வீழ்ச்சி- இறக்குமதிக்கு தடை

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறீலங்கா நாணயம் தொடர் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் சிறீலங்கா அரசு பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளது.

வாகனங்கள், கணணிகள், வாசைன திரவியங்கள், வாகன உதிரிப்பாகங்கள் உட்பட பெருமளவான பொருட்களின் பட்டியலை சிறீலங்கா அரசு கடந்த வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ளது. இந்த தடை எதிர்வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வீடுகளில் இருந்து மக்கள் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு கணணிகளின் இறக்குமதியை தடைசெய்துள்ளது எதிர்மறையான செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறீலங்கா நாணயத்தின் பெறுமதி 188 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்திருந்தது.

யாழில் கொரோனா தொற்று உறுதி;மன்னாரில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்.மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டிருக்கின்றாா். அாியாலை பிலதெபிய தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதுபோதகரை யாழ்ப்பாணம் அழைத்துவந்து மீண்டும் கொழும்பு அழைத்து சென்றவா்.யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய பாிசோத னை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க,

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி தெரிவித்தார்.சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மத போதனைக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த போதகர் மீண்டும் சுவிஸ் நாட்டிற்குச் சென்ற நிலையில் குறித்த போதகருக்கு ´கொரோனா´ நோய்த் தொற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தேடி வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிய வந்த நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்தும் பலர் அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார்கள் என்று சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட மடுக்கரை மற்றும் அச்சங்குளம் கிராமங்களில் 5 குடும்பங்களும் , மடுப்பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களது வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த 11 குடும்பங்களும் அவர்களுடைய வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குறித்த குடும்பந்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த 11 குடும்பத்தினரும் அவர்களுடைய வீடுகளில் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மருத்துவம், சுகாதாரம் , உலர் உணவு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-“தனிமையில் இறப்பது என்பது கொடுமை”

”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா.

இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செவிலியராக இருக்கிறார் பாலோ மிரண்டா. இத்தாலியை பொறுத்தவரை லம்போர்டி பகுதியில் உள்ள சிறய நகரம்தான் கொரோனா தொற்றின் மையப்பகுதியாகும். அங்கு 2,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செவிலியர்களைப் போல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து 12 மணி நேரம் உழைக்கிறார் பாலோ.

”நாங்கள் அனைவரும் செவிலியர் சேவையில் இருக்கிறோம். ஆனால் நாங்களும் அவ்வப்போது சோர்வாக உணர்கிறோம். ஆனால் இப்போது ஏதோ பாதாளத்தில் இருப்பது போல் உள்ளது. எங்களுக்கும் அச்சமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

புகைப்படங்கள் எடுக்க அதீத ஆர்வம் கொண்ட பாலோ, இந்த இக்கட்டான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சூழலை புகைப்படங்கள் எடுத்து அதை ஆவணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.111360629 8 கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-"தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

”என்ன நடக்கிறது என்பதை நான் மறக்க விரும்பவில்லை. இது நாளைய வரலாறு. வார்த்தைகளை விட புகைப்படங்களே வலுவானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் பாலோ.

இந்த புகைப்படங்களில் அவர் தன் சக ஊழியர்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்ட விரும்புகிறார்.

”ஒரு நாள் என்னுடைய சக ஊழியர் ஒருவர் மருத்துவமனையின் நடை பாதையில் குதித்து கொண்டும் கத்தி கொண்டும் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என முடிவானதுதான் அதற்கு காரணம். பொதுவாக அவர் மிகவும் அமைதியானவர். ஆனால் மிகுந்த அச்சத்தில் இருந்த அவரால் தனக்கு கொரோனா இல்லை என்ற செய்தியை கேட்டதும் அந்த நிம்மதியை கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் சாதாரண மனிதர் தானே”, என்றார் பாலோ.”

இது பாலோவுக்கும் அவருடைய குழுவுக்கும் மிகவும் சோதனைக்குரிய காலம். ஆனாலும் குழுவில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு ஒரு பிணைப்போடு உள்ளார்கள்.

”சில நேரங்களில் எங்களில் சிலர் சோர்வடைவோம், வெருப்புக்குள்ளாவோம், பயனில்லாதவர்கள் போல நினைப்போம். அழுவோம். ஏனென்றால் நாங்கள் கவனித்து கொள்ளும் சில நோயாளிகளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது” என்று பாலோ தெரிவிக்கிறார்.111364729 6e12894b e3bb 4db4 ad0f 505dad2cb36c கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-"தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

ஆனால் அப்படி சோர்வாக இருக்கும் செவிலியரை, மற்ற செவிலியர்கள் பார்த்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ஏதாவது நகைச்சுவை செய்து அவரை சிரிக்க வைப்போம். இல்லையென்றால் நாங்கள் எங்களை இழந்துவிடுவோம் என்கிறார் பாலோ.

இதுவரை இத்தாலியில் நான்கு வாரத்தில் சுமார் 3000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

35,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நாட்டில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கடினமான நிலையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வடக்கு பகுதியில் இருப்பவர்கள் பெரிதும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

பாலோ செவிலியர் 9 ஆண்டுகளாக இருக்கிறார். மக்கள் உயிரிழப்பதை அவர் பார்த்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் இவ்வளவு மக்கள் யாருமே உடன் இல்லாமல் இறப்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.111360636 e5906d8b 1778 4a53 bcb7 b5995ccf881e கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-"தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

“தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழக்கும்போது பொதுவாக அந்த நோயாளியை சுற்றி அவர்களது உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக ஏதாவது பேசுவோம். இது நாங்கள் வழக்கமாக செய்வதில் ஒன்று”

ஒருவர் உயிரிழக்கும் நிலையில் இருந்தால், அவரை பார்க்க உறவினர்களும் நண்பர்களும் அங்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காக குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களால் மருத்துவமனைக்கு கூட வர முடியாது.

“பொதுவாக அனைவரையும் விட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டவர்களுகே நாங்கள் சிகிச்சை செய்கிறோம். தனிமையில் இறப்பது என்பது மோசமான விஷயம். யாருக்கும் அது நடக்கக்கூடாது”, என்கிறார் பாலோ.

கிரெமொனா மருத்துவமனை இப்போது கொரோனா வைரஸ் மருத்துவமனையாக மாறிவிட்டது. இப்போது மற்ற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சுமார் 600 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.111364731 19c53757 939c 4a8a aaef 1f38bdcad9f5 கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-"தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

மேலும் புதிய நோயாளிகள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

“மருத்துவமனையின் எல்லா மூலைகளிலும் தற்போது நாங்கள் படுக்கைகளை போடுகிறோம். மருத்துவமனையில் கூட்டம் அந்தளவிற்கு அதிகமாகி விட்டது” என்கிறார் பாலோ.

மருத்துவமனையின் நுழைவாயில் வெளியே தற்காலிகமாக கள மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார்கள். அதில் 60 படுக்கைகள் இருக்கும். ஆனால், அதுவும் போதாது.

நன்றி-பிபிசி தமிழ்

கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

ஊரடங்கு சட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இரானுவத்தினரும் பொலிஸ் பிரிவினரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்ததும் அவதானிக்கமுடிந்தது.

மட்டக்களப்பின் சகல வீதிகளும் வெறிச்சோடிக்கிடந்தமை அவதானிக்க முடிந்தது எல்லா வீதிகளும் இரானுவம் பொலிஸாரி நடமாட்டங்களும் அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்களையும் ஆங்காங்கு அவதானிக்கமுடிந்தது.
995 1 கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

996 1 கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

997 கடுமையாக அமுலாகும் ஊரடங்கு: வெறிச்சோடிய மட்டக்களப்பு

யாழில் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை; யாழ் அரச அதிபர்

அரியாலையில் மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், நேற்றுப் பிற்பகல் ஒரு மணிவரை அந்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளாஅவை வருமாறு: –

“யாழ். மாவட்டத்தில் கோரோனா தொடர்பான பலதரப்பட்ட செய்திகளை சில ஊடகங்கள் தெரிவித்து வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் தேவையற்ற பீதிகளையும் ஏற்படுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் தொற்றினை மாவட்டத்தில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலம் ஒன்றில் பங்குகொண்ட மதபோதகருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் இருந்தமையால் அந்த வழிபாட்டு நிகழ்வில் பங்குகொண்ட ஏனையோருக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த மத வழிபாட்டில் பங்குகொண்ட இருவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நேற்று பிற்பகல் ஒரு மணி வரை அந்த இருவருக்கும் கோரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அவர்களது முற்பாதுகாப்பினையும் மற்றும் சமூகப் பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக அந்தப் பிரதேசத்துக்குரிய சுகாதாரப் பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அல் லது 021 2217278 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட இடர்முகாமைத்துவப் பிரிவினரால் உடனுக்குடன் வழங்கப்படும் என்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பொது நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் என்பவற்றை சமூகப் பொறுப்புக் கருதி கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்றுள்ளது.

சுவிஸில் வேகமாக பரவும் கொறோனா;6,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு;ஒரேநாளில் 1180 பேரைத் தாக்கியது.

சுவிற்சர்லாந்தில் கொறோனா தோற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.இன்று இந்த செய்தி எழுதப்படும்வரை 6,113 பேர் இன்று தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.இதுவரை 58 பேர் உயிரிழந்துதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய நாளில் மட்டும் (20.03.2020) 1180 பேருக்கு கொரோனா தொற்றியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா அங்கு பரவ ஆரம்பித்தது முதல் நேற்றைய தினத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

மிக கூடுதலாக வோ மாநிலத்தில் 1212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்ததாக ஜெனிவாவில் 873 பெரும்,திசினோவில் 834 பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சூரிச் மாநிலத்தில் 773,பேரன் மாநிலத்தில் 377 என்றவகையில் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை காணப்படுகிறது.

இன்றைய நாளில் இச்செய்தி எழுதப்படும்வரை 569 பேர் தொற்றுக்குள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.