சிறீலங்கா நாணயம் பெரும் வீழ்ச்சி- இறக்குமதிக்கு தடை

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறீலங்கா நாணயம் தொடர் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் சிறீலங்கா அரசு பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளது.

வாகனங்கள், கணணிகள், வாசைன திரவியங்கள், வாகன உதிரிப்பாகங்கள் உட்பட பெருமளவான பொருட்களின் பட்டியலை சிறீலங்கா அரசு கடந்த வியாழக்கிழமை (19) வெளியிட்டுள்ளது. இந்த தடை எதிர்வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வீடுகளில் இருந்து மக்கள் தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு கணணிகளின் இறக்குமதியை தடைசெய்துள்ளது எதிர்மறையான செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறீலங்கா நாணயத்தின் பெறுமதி 188 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்திருந்தது.