சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடக்கம்-500,000 பேர் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் சிறீலங்காவின் சுற்றுலாத்துறை முற்றாக முடங்கியுள்ளதுடன் 500,000 மக்கள் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடம்பர விடுதிகள் உட்பட 2500 இற்கு மேற்பட்ட விடுதிகள் சிறீலங்காவில் மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் நாள் வரையில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எமது பணி வீட்டில் இருந்து செய்ய முடியாத பணி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வெளியேறி வருவதுடன், பெருமளவான பயணிகள் தமது பயணத்தை நிறுத்தியும் வருகின்றனர் என சிறீலங்கா விடுதிகள் சபையின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்தனர்.