யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் யாழ். அரச அதிபர் க.மகேன். யாழ்ப்பாணத்தின் முதலாவது கொரோனா தொற்றாளி வசித்த தாவடிம் கிராமத்தில் சுமா 300 குடும்பங்களை உள்ளடக்கிய பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. உள்ளே வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணாவு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவா மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
“யாழ். மாவட்டத்தில் மக்கள் தமக்கு தேவையான உதவிகளை தமது பிரதேச செயலாளர் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய நேற்றுக் காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவாகளுக்கு உலா உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
மேலும் அனாத்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக 10 இலட்சம் ரூபா நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. பிரதமா ஊடாக மாவட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கும் திட்டம் இன்று (23) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
உணவுப் பொருட்கள் கொள்வனவு, மருத்துவத் தேவை, அதியாவசிய வேலை என்பவற்றை தவிர மக்கள் வெளியில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அஞ்சல் அலுவலகம், வங்கிகள் மற்றும் மருத்துவ மனைகள் தவிர்ந்த ஏனையவற்றை மூடுமாறு பிரித்தானியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது பிரித்தானியா காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பிரித்தானியா பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளர்.
கடந்த வாரம் பிரதமர் வெளியிட்ட ஆலோசனையை மக்கள் பின்பற்றவில்லை என்பதுடன், பூங்கா, கடற்கரை மற்றும் கடைகளில் அதிகளவு மக்கள் கூடியது பிரித்தானியா அரசை கடும் சீற்றம் கொள்ள வைத்துள்ளது.
இன்று வரை பிரித்தானியாவில் 335 பேர் கொரோனா வைரஸ் நோயினால் இறந்துள்ளதுடன், ஏறத்தாள 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பான மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாரளமாக உள்ளது என தெரிவித்துள்ள யாழ்.வணிகர் கழக உப தலைவர் ஜெயசேகரம் வர்த்தக நிலையங்களுக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பான மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே மக்கள் வீணாக குழப்பங்கள் அடைய வேண்டாம். மேலும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் காலையில் எடுக்கப்பட்டவுடனேயே அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூட வேண்டாம். குடும்பத்தில் இருந்து ஒருவர் வீதம் வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். அத்துடன் வர்த்தக நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் தனி நபர் சுகாதாரத்தை பேணிக் கொள்ளுங்கள்.
குறிப்பாக மக்கள் பொருட்களை வாங்கும் போது நெருக்கமாக நிற்காது இடைவெளி விட்டு நில்லுங்கள். தேவையான பொருட்கள் தாரளமாக இருப்பதால் மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம்.
யாழ்ப்பான வர்த்தகர்கள் கொழும்புக்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வர அவர்களுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரவூர்த்திகளுக்கு பாஸ் நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள் தேவையான பொருட்களை எடுத்து வருகின்றனர். மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கதில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் – “நாளைக்கே உலகம் அழிஞ்சிருங்க” என கையை உதறும் டாக்டர்களைப் போல அன்றி தெளிவாக நிதானமாகப் பேசுகிறார்.
பவித்ரா அமெரிக்காவில் பலவருடங்களாக கொரோனா வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கியவர். அவரிடம் சமூகவலைதளங்கள் வழி மக்களிடம் பரவி வரும் பல குழப்பங்கள் குறித்து கேள்விகள் பல கேட்டார்கள். அவற்றில் ஒன்று கொரோனா எந்தளவுக்கு ஆபத்தானது என்பது. அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமாகப் பட்டது:
1) கொரோனா என்பது ஒரு புதிய வைரஸ் அல்ல. Covid-19 (Corona Virus Disease-2019) எனும் இந்த வைரஸானது ஏற்கனவே (70 வருடங்களாக) மனிதர்களிடம் இருந்து வரும் கொரோனாவின் ஒரு புதிய ஜென்மம் மட்டுமே. இது நுரையீரலை பாதிக்கும்; அதனால் சளி, ஜுரம் போன்ற நோய்க்குறிகள் ஏற்படும். இதே காரணத்தாலே இது பரவுவது எளிது. கொரோனாவின் ஒரே ஆபத்து அது சுலபத்தில் வேகமாய் பரவும் என்பது மட்டுமே. அதைத் தாண்டிப் பார்த்தால் அது மற்றொரு சளி / ஜுரம் ஏற்படுத்தும் வைரல் தொற்று மட்டுமே.
அதாவது கொரோனா பீதி தோன்றுவதற்கு முன்பும் நமக்கு சளித்தொல்லை ஏற்பட்டிருக்கும் இல்லையா, அதுவும் மூன்றில் ஒன்று கொரோனாவால் ஏற்பட்டது தான், ஆனால் என்ன அது கோவிட்-19 வகை கொரோனா இல்லை என்பது தான் வித்தியாசம். இப்போது பரவி வருவது சற்று வீரியம் கொண்ட ஒரு தூரத்து உறவு வைரஸ் மட்டுமே அன்றி அது உலகை அழிக்கக் கிளம்பி வந்த ஒரு படுபயங்கர கிருமி அல்ல. ஏற்கனவே நமக்குப் பரிச்சயமான ஒரு கிருமி தற்போது ஒரு முகமூடி போட்டுக்கொண்டு புதிய ஆயுதங்களுடன் வந்திருக்கிறது. அந்த ஆயுதங்களும் ஒன்றும் அணு ஆயுதம் அல்ல. இது தான் அடுத்த முக்கிய கருத்து.
2) மக்களில் 96.5% பேர்களை இந்த கொரோனா வைரஸ் கொல்லாது. 3.5% மக்கள் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். இந்த 3.5% கூட ஏற்கனவே ஆரோக்கியம் இல்லாதவர்கள் தாம். குறிப்பாக வயோதிகர்கள். வயோதிகர்களில் பல வியாதிகள் கொண்ட, சுலபத்தில் பல தொற்றுகள் பெறும் வாய்ப்புள்ள, தொற்று வியாதி வந்தால் அதை சமாளிக்கும் தற்காப்புத்திறன் அற்றவர்கள். அதாவது நூறு பேரில் மூன்று நான்கு பேர்கள் சாவார்கள் எனப் பொருளில்லை – இதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்; நூறு பேரில் ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் இருக்கிற 3.5% பேர் தாம் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள்.
யோசித்தால், இத்தகைய பலவீன உடல்நிலை கொண்டவர்கள் எந்த ஒரு வைரல் தொற்று வந்தாலும் மரணிக்கக் கூடியவர்களே. நீங்களே கவனித்திருப்பீர்கள், மழைக்காலத்தில் வைரல் ஜுரம் பரவும். அப்போது வயதாகி பல பிரச்சனைகளுடன் போராடி படுக்கையில் ஓய்வெடுக்கும் ஆட்கள் திடீரென ஜுரம் வந்து இறந்து போவார்கள். மழை / பனிக்காலத்தில் வயசாளிகள் இறந்து போவது போலத் தான் கொரோனா காலத்தில் அவர்கள் இறக்கப் போகிறார்கள். இப்போது கொரோனா பீதியின் போது இத்தகைய மரணங்கள் காக்காய் அமர்ந்து பனம்பழம் விழுந்ததைப் போல ஆகி விடுகிறது.
கோவிட்-19 வழக்கமான ஒரு வைரஸ் தான் என்றால் ஏன் இப்படி பரபரப்படைகிறோம்? ஏன் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்?
இது ஒரு புதிய வைரஸ் என்பதால் இதற்கான மருந்தோ தடுப்பு மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக, அரசாங்கங்கள் உலகம் முழுக்க பீதி அடைந்து மக்களைத் தனிமைப்படுத்தி வியாதி பரவுவதை தடுக்க முயல்கின்றன. ஊடகங்கள் இதை ஊதிப்பெருக்கி கொரோனா பயத்தை அதிகப்படுத்துகின்றன. வாட்ஸ்-ஆப் பார்வர்டுகள் இந்நிலையை இன்னும் மோசமாக்குறது. ஆக அரசின் நடவடிக்கைகளும் ஊடகங்களும் தாம் கொரோனா பீதிக்கு காரணமே ஒழிய பெருமளவு மக்கள் இதனால் பலியாகியுள்ளதால் அல்ல.
யார் கவலைப்பட வேண்டும்?
ஆஸ்துமா நோயாளிகள், புற்றுநோய் உள்ளவர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பண்ணிக் கொண்டவர்கள், கட்டுப்படுத்தாத ரத்த சர்க்கரை கொண்டவர்கள், வேறுபல தீவிர நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.
யார் அதிகம் கவலைப்பட வேண்டாம்?
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வந்தால் பெரிதும் பாதிக்காது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஏன் கொரோனா அவர்களிடம் மட்டும் கருணையுடன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
யார் கவலைப்பட வேண்டாம்?
நம்மில் ஆரோக்கியமானவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு சில நாட்கள் தும்மல், ஜுரம் என ஏற்பட்டு கொரோனா நம்மிடம் பிரியாவிடை பெற்று அடுத்தவர்களிடம் சென்று விடும்.
அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ்-ஆப்பை அடுத்து வரும் சில வாரங்களுக்கு படித்து மண்டை குழம்ப வேண்டாம்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து நாம் வேலைக்குத் திரும்புவது நல்லது. கொரோனா பீதி நம் பொருளாதாரத்தை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி விடும்.
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும், வெளியில் வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமது அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியில் வருவதுடன் ஏனைய நேரங்களில் வீடுகளிளேயே இருந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி. கலாமதி பத்மராஜாவினால் இன்று (23) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணியின் www.covid19.batticaloa.dist.gov.lk என்ற வலைத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்க அதிபரும் செயலனியின் தலைவருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா கருத்து தெரிவிக்கையில் கொரோனா தடுப்பு செயலணியினையும் பொதுமக்களையும் இணைக்கும் வகையிலேயே இந்த வலைத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப கணணி, சிமாட்போன், ஐபோன்களிலும் பயன்படுத்தக் கூடியவாறும்வெப்பேஜ்,பேஸ்புக், இன்ஸ்டகிராம்,டுவிட்டர்தளம் போன்றவற்றிலூடாகவும் தகவல்களை அனுப்பக்கூடியவாறும் இலகுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இவ்வலைத் தளத்தினூடாக பொதுமக்கள் தமது எவ்வித தேவைகளையும் கோரமுடியும் எனவும்,உதாரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தமக்கு ஏற்படும் நோய் தொடர்பான விபரங்களை கூறி வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும், அம்புலன்ஸ வசதி பெற்றுக் கொள்ளவும், அல்லது தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தனிமையினால் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அதனையும் பெற்றுக் கொள்ளமுடியும்.
இன்னும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் உணவு இல்லாமல் இருப்பவர்கள் கூட அதனைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதுடன் கொரோனா தடுப்பு செயலனிக்கு அல்லது பொதுமக்களுக்கு உலர் உணவு, மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்க விரும்புவோர் கூட இதனூடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவத்தார்.
அதுமாத்திரமின்றி அத்தியவசியப் பொருட்கள்,சேவைகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளையும் இங்கு பதிவிடுவதன் மூலம் அவை உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வலைத்தளத்தில் வரும் கோரிக்கைகளை 24 மணிநேரமும் அவதானித்து அமுல்படுத்தவும், அறிக்கையிடவும் விசேட குழு இயங்குவதாகவும், மேலும் இந்த இணைய வலைத்தளத்தினை தொண்டர் அடிப்படையில் வடிவமைத்துத்தந்த திரு. டானியல் பாக்கியம்ää ஜோயில் ஜெரோசன் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் ஊடகவியலாளர்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலமை தற்போது ஓரளவுக்கு சுமுகமாக இருப்பதுடன் இந்த நிலமை தொடர்ச்சியாக இருப்பதற்கு பொதுமக்களது பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன்ää சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும், வெளியில் வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமது அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியில் வருவதுடன் ஏனைய நேரங்களில் வீடுகளிளேயே இருந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் வந்தவர்கள் வீடுகளிளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன்,அன்றாடக் கூலித் தொழில் புரிபவர்களின் விபரங்கள் சகல பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலருணவு உதவிகளை வழங்க அரச சார்பற்ற நிறுவனங்கள், நலன்விரும்பிகளிடம் உதவிகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் வேல்ட் விசன் நிறுவனம் 650 உலர் உணவுப் பொதிகளையும்ää ஹெல்பிங்கேன்ட் அமைப்பு 100 பொதிகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதிலிருந்து ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாhகவும் மேலும் கிடைக்கப்பெறும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கட்டுப்பாட்டு விலையில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக மூடியிருந்த காத்தான்குடி சதோச நிறுவனம் உட்பட களுவாஞ்சிக்குடி மற்றும் சகல சதோச நிறுவனங்களும் இன்று முதல் திறந்திருக்கும் என்பதுடன் தனியார் வர்த்தகர்களும் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விநியோகிக்கக்கூடியவாறு குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு நகரில் தற்காலிகமாக கள்ளியங்காடு களஞ்சியப்பகுதியில் சதோச நிறுவனம் திறக்க தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நாளை முதல் அவை இயங்குமென்றம் தெரிவித்தார்.
இதன்போது வைத்திய நிபுணர்களான டாக்டர். கே.ஆர். சுந்தரேசன், டாக்டர்.எஸ் விசுகுமார் மற்றும் டாக்டர். கே. மயுரேசன் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation ) செல்லுபடியான காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) செல்லுபடியான காலம் முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் 2020 மார்ச் 31ஆம் திகதி வரையில் செல்லுபடியானதென உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை (Media Accreditation ) இது வரையில் கிடைக்கப்பெறவில்லை.
இருப்பினும் 2019 ஆம் ஆண்டுக்கு செல்லுபடியானதாக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையைக் கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது ஊடக பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு வசதிகளை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில் பொதுமக்கள் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்துகொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்
தற்போதைய அவசர காலநிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்..
பொதுமக்கள் முடிந்த அளவுவைத்தியசாலைக்கு வருவதை தவிர்துக்கொள்ளுங்கள்.குறிப்பாக நாட்பட்ட நோயாளர்கள் கர்பிணிதாய்மார்கள் குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.
குறிப்பாக மாதாந்த மருத்துவபரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்டnவைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களைபெற்றுக்கொண்டபின்னர் வருகைதரவும்.மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை வழமையாக நடாத்துவது போல தற்போது நடாத்த முடியாமல் உள்ளது. அத்துடன் அவர்கள் ஏற்கனவே நோயாளர்களாக இருப்பதால் வைத்தியசாலைக்கு வரும் போது அவர்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும்.எனவே அவர்களது உறவினர்களிடம் சிகிச்சை தொடர்பான பதிவுகளை வழங்கினால் மருந்துகளை வழங்குவதற்கு நாம் தயாராகஇருக்கின்றோம்.
மாதாந்த சிகிச்சைகளை பெறும் நோயாளர்கள் மருந்தினை மாத்திரம் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு வருகைதந்தால் உள்ளேவாராமல் வெளியில் நின்று மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வைரஸ் தாக்கித்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்றுநீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம். என்றார்
வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்தும், வடக்கு மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வடக்குக்கான போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகர சபை தவிசாளர் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6மணிமுதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த 144 தடை உத்தரவு மார்ச் 31ஆம் திகதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகின்றது என்று குறிப்பிட்ட முதல்வர், தடை அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதற்கமைவாக போக்குவரத்துகள் இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மீன், இறைச்சி, மளிகை கடைகள் தவிர ஏனைய கடைகள் இயங்காது
இது போன்ற அத்தியாவசிய தேவைகள் நடைபெறும் ஒழுங்கில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.