பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துகொள்ளுங்கள். பணிப்பாளர்.

நெருக்கடியான சூழலில் பொதுமக்கள் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்துகொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்

தற்போதைய அவசர காலநிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்..

பொதுமக்கள் முடிந்த அளவுவைத்தியசாலைக்கு வருவதை தவிர்துக்கொள்ளுங்கள்.குறிப்பாக நாட்பட்ட நோயாளர்கள் கர்பிணிதாய்மார்கள் குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.

குறிப்பாக மாதாந்த மருத்துவபரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்டnவைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களைபெற்றுக்கொண்டபின்னர் வருகைதரவும்.மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை வழமையாக நடாத்துவது போல தற்போது நடாத்த முடியாமல் உள்ளது. அத்துடன் அவர்கள் ஏற்கனவே நோயாளர்களாக இருப்பதால் வைத்தியசாலைக்கு வரும் போது அவர்களை பாதுகாப்பது கடினமாக இருக்கும்.எனவே அவர்களது உறவினர்களிடம் சிகிச்சை தொடர்பான பதிவுகளை வழங்கினால் மருந்துகளை வழங்குவதற்கு நாம் தயாராகஇருக்கின்றோம்.

மாதாந்த சிகிச்சைகளை பெறும் நோயாளர்கள் மருந்தினை மாத்திரம் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு வருகைதந்தால் உள்ளேவாராமல் வெளியில் நின்று மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வைரஸ் தாக்கித்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்றுநீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம். என்றார்