Home Blog Page 2276

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் 40இற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்டதை நினைவு கூரும் வகையிலேயே இவ்வாறு கஞ்சி வழங்கும் நிகழ்வு வழங்கப்பட்டது. கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது 

இலக்கு – 26 (19-05-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 26 (19-05-2019)

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த ஒரு தசாப்தமாகிய போதும், சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் யுத்தத்தம் முடிவிற்கு வரும் சமயத்தில் தமிழ் பொது மக்களை படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு உண்மையான முயற்சியை மேற்கொண்டது மட்டுமல்லாது, இந்த முயற்சியில் தோல்வியை அடைந்தது.

இவர்களின் தோல்வியானது, சிறிலங்காவிற்கு சுதந்திரமான ஆட்சியை வழங்கியது. போரின் இறுதிக் காலத்தில் சர்வதேச அமைப்புகள், ஐ.நா. சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் போன்றவற்றை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதன் மூலம் தனது பொய்யான பிரசாரத்தை மறுப்பதற்கு எவரும் இல்லாததால், தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

Mulli 2009 சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்மனிதாபிமான அமைப்புகளின் உதவியினைக் குறைப்பதற்காக அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை விட குறைவான பொது மக்கள் இருப்பதாகவே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. இதன் மூலம் போதிய மருத்துவ பராமரிப்பு மற்றும் உணவு போன்ற வசதிகள் இல்லாமையால், ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, சிவிலியன்கள் மீது இராணுவத்தினர் குண்டு வீசுவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கவில்லை. ஐந்து மாத காலத்திற்குள் குறைந்தபட்சம் 30 தடவைகள் மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் பொது மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பி இராணுவ எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்கு சென்றனர்.

2009 பெப்ரவரியில், தாக்குதல் பிரதேசத்திற்கு ஐ.நா. உறுப்பினர் ஒருவர் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் பெயர் விபரம் குறிப்பிடப்படவில்லை. அவர் தனது அறிக்கையில் அங்கு பொதுமக்களின் இழப்புகள் பெருமளவில் உள்ளதாகவும், இதனை கவனத்தில் கொள்ளாது விட்டால் நாங்களும் இந்த செயலிற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும், இன்னும் துல்லியமான இறப்பு எண்ணிக்கை ஐ.நா.வால் மதிப்பிடப்படவில்லை. ஐ.நா. அமைப்பின் அறிவிப்பின்படி இறுதி யுத்தத்தின் போது, 40,000 மற்றும் 70,000 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் உண்மையாக இந்தப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 140,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஐந்து நாட்களிற்கு பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்.கீ.மூன் சிறிலங்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமை தீர்மானங்களை தாம் மேற்கொள்வதாக ஐ.நா. சபைக்குத் தெரிவித்திருந்த போதும், இதில் சம்பந்தப்பட்ட படை வீரர்கள் சிலரை இராணுவ நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் உயர்மட்ட பதவிகளில் நியமனம் செய்தது

இன்று வரை இவர்கள் மீதான குற்றங்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கையில், மனித உரிமை மீறல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு போன்றவை இன்றும் தொடர்வதால், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இறந்தவர்களின் நினைவு நிகழ்வுகளைக்கூட நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும். சிறிலங்காவில் ஐ.நா. உயர் ஸ்தானிகரான நவி. பிள்ளையின் 2011 அறிக்கையில் குழப்பமான புதிய தகவல்கள் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குட்படுத்தும் என்று கூறியிருந்தார்.

Talk about Pirapakaran

முள்ளிவாய்கால்10வது ஆண்டு நினைவு நாள்

 

 

பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்படவில்லை – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

பொறுப்புக்கூறும் கடமையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும், போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை என பிரித்தானியாவின் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோபன் நேற்று (18)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை தமிழ் மக்கள் நினைவுகூரும் இந்த சமயத்தில் கோபனும் தமிழ் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சிறீலங்காவில் தமிழர்கள் சுய அபிலாசைகளுடனும், உரிமைகளுடனும் வாழவும் பிரித்தானியா தனது உதவிகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ’26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் கனேடியர்கள் பலரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அவர்களின் வலிகள் வேதனைகளை கேட்டறிந்துகொண்டுள்ளேன்.

தமிழ்க் கனேடியர்களுடான சந்திப்புக்களின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது மிக நீண்ட பயணம் என்பதனை புரிந்து கொண்டேன்.

பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.190228 Mannar FOD protest NE 1 பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்

சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறைமை அமைய வேண்டும்.

யுத்தம் காரணமாக சொந்தங்களை இழந்த, பல்வேறு வழிகளில் இழப்புக்களை எதிர்நோக்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் வெளியிட்டுக் கொள்கின்றேன்.

அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மக்களும் தங்களது நம்பிக்கைகளின் ஊடாக வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.

கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் கனேடியர்கள் வழங்கி வரும் பங்களிப்புக்களை அனைத்து கனேடியர்களும் அங்கீகரிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் கோருகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்திதொடர்பில் கருத்து வெளியிட்ட மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர்
கருத்துத் தெரிவிக்கையில் ‘தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை முற்றாக  நம்பிக்கை அற்ற நிலையிலேயே அனைத்துலக விசாரணையொன்றை கோரிவருகின்றனர். இது கனடாப் பிரதமர் அறியாததல்ல. இந்நிலையில் அனைத்துல விசாரணையொன்றை அவர் வலியுறுத்தியிருக்கவேண்ம். அதைவிடுத்து பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டு எனக் கூறுவது அவர் அனைத்துலக விசாரணையை நிராகரிப்பதற்கு ஒப்பானது’ என்கிறார்.Jaffna Uni Proetst March 1 1 1 பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்