பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்படவில்லை – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர்

பொறுப்புக்கூறும் கடமையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும், போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை என பிரித்தானியாவின் தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோபன் நேற்று (18)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டை தமிழ் மக்கள் நினைவுகூரும் இந்த சமயத்தில் கோபனும் தமிழ் மக்களின் துயரத்தில் பங்கெடுத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சிறீலங்காவில் தமிழர்கள் சுய அபிலாசைகளுடனும், உரிமைகளுடனும் வாழவும் பிரித்தானியா தனது உதவிகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.