சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த ஒரு தசாப்தமாகிய போதும், சர்வதேச சமூகம் குறிப்பாக ஐக்கிய நாடுகள் யுத்தத்தம் முடிவிற்கு வரும் சமயத்தில் தமிழ் பொது மக்களை படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு உண்மையான முயற்சியை மேற்கொண்டது மட்டுமல்லாது, இந்த முயற்சியில் தோல்வியை அடைந்தது.

இவர்களின் தோல்வியானது, சிறிலங்காவிற்கு சுதந்திரமான ஆட்சியை வழங்கியது. போரின் இறுதிக் காலத்தில் சர்வதேச அமைப்புகள், ஐ.நா. சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் போன்றவற்றை நாட்டை விட்டு வெளியேற்றியது. இதன் மூலம் தனது பொய்யான பிரசாரத்தை மறுப்பதற்கு எவரும் இல்லாததால், தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

Mulli 2009 சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும்மனிதாபிமான அமைப்புகளின் உதவியினைக் குறைப்பதற்காக அரசாங்கம் உண்மையான எண்ணிக்கையை விட குறைவான பொது மக்கள் இருப்பதாகவே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. இதன் மூலம் போதிய மருத்துவ பராமரிப்பு மற்றும் உணவு போன்ற வசதிகள் இல்லாமையால், ஆயிரக்கணக்கான பொது மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, சிவிலியன்கள் மீது இராணுவத்தினர் குண்டு வீசுவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கவில்லை. ஐந்து மாத காலத்திற்குள் குறைந்தபட்சம் 30 தடவைகள் மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் பொது மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பி இராணுவ எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்கு சென்றனர்.

2009 பெப்ரவரியில், தாக்குதல் பிரதேசத்திற்கு ஐ.நா. உறுப்பினர் ஒருவர் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரின் பெயர் விபரம் குறிப்பிடப்படவில்லை. அவர் தனது அறிக்கையில் அங்கு பொதுமக்களின் இழப்புகள் பெருமளவில் உள்ளதாகவும், இதனை கவனத்தில் கொள்ளாது விட்டால் நாங்களும் இந்த செயலிற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட போதும், இன்னும் துல்லியமான இறப்பு எண்ணிக்கை ஐ.நா.வால் மதிப்பிடப்படவில்லை. ஐ.நா. அமைப்பின் அறிவிப்பின்படி இறுதி யுத்தத்தின் போது, 40,000 மற்றும் 70,000 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் உண்மையாக இந்தப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை 140,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஐந்து நாட்களிற்கு பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்.கீ.மூன் சிறிலங்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமை தீர்மானங்களை தாம் மேற்கொள்வதாக ஐ.நா. சபைக்குத் தெரிவித்திருந்த போதும், இதில் சம்பந்தப்பட்ட படை வீரர்கள் சிலரை இராணுவ நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் உயர்மட்ட பதவிகளில் நியமனம் செய்தது

இன்று வரை இவர்கள் மீதான குற்றங்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கையில், மனித உரிமை மீறல் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள், கண்காணிப்பு போன்றவை இன்றும் தொடர்வதால், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இறந்தவர்களின் நினைவு நிகழ்வுகளைக்கூட நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே குற்றவாளிகளை இனங்காண உதவும். சிறிலங்காவில் ஐ.நா. உயர் ஸ்தானிகரான நவி. பிள்ளையின் 2011 அறிக்கையில் குழப்பமான புதிய தகவல்கள் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குட்படுத்தும் என்று கூறியிருந்தார்.