Home Blog Page 2275

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது.

ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது.

“நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் வெளிநாட்டு நிதியுதவியுடன் குறித்த பள்ளிவாசலை அமைத்திருந்திருந்தனர். இந்தநிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிவாசலை உடைத்து அகற்றியுள்ளோம்” என்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.61811315 2253286661383583 4950707071503826944 n தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் உடைப்பு

இலக்கு – 27 (26-05-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 27 26-5-2019

எமது துன்பமான நிலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் – சம்பந்தனுக்கு மடல்

அரசியல் கைதிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை விடுத்ததாக வெளிவந்த  செய்திகளையடுத்து, அரசியல் கைதிகள் சம்பந்தனுக்கு பகிரங்க மடல் ஒன்றை விடுத்துள்ளனர்.

சம்பந்தன் ஐயா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் என்பவர்கள் தமிழர் விடுதலைக்கு  தங்கள் வாழ்வை தந்தவர்கள். மற்றவர்கள் அப்பாவிகள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள். இன்று அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பொறுப்புள்ள பதவியில் உள்ள நீங்கள் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தாங்கள் எங்களின் விடுதலை தொடர்பில் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் அரசிற்கு ஆதரவு வழங்கியமையே அரசியல் கைதிகளின் இந்த சிக்கலான நிலைக்கு காரணமாகும்.

இனிவரும் காலங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்யாது, தமிழ் அரசியல் கைதிகளின் துன்பமான நிலையை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் நடத்தாது, விடுதலை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிற்கு நீங்கள் வழங்கும் ஆதரவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். என்று அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மொத்தமாக அழிந்து விடும் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ட்

ஈரான் – அமெரிக்காவிடையே போர் ஏற்படுமாயின் ஈரான் மொத்தமாக அழிந்து விடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தகவலை ட்ரம்ட் தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் “இது போன்ற மிரட்டல்களை விடுத்து ஈரானை ஒன்றும் செய்ய முடியாது“ என்று பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் வளைகுடாப் பகுதியில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.

கடந்த ஞாயிறு அன்று செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ட், ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடமாட்டாம் என்றும், அந்நாட்டுடன் எந்த சண்டையையும் விரும்பவில்லை என்றும் போர் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையே பதற்றங்களை தணிக்கும் விதமாக, அமெரிக்காவுடன் போர் நடத்தும் எண்ணம் தமக்கும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ட் இன் ருவிட்டர் இற்கு பதிலளித்த சாரிஃப், “அலெக்ஸான்டர், செங்கிஸ்கான் போன்ற மற்ற படையெடுப்பாளர்கள் செய்ய முடியாததை ட்ரம்ப்ட் செய்ய முடியுமென நினைக்கிறார்“  என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமரின் யாழ். விஜயம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சமுர்த்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாநகரசபை வளாகம் மற்றும் மணியந்தோட்டப் பகுதி உட்பட யாழ். மாநகரசபை பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளின் குடும்பங்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, பிரதமரின் வருகையை அடுத்து, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஹிஸ்புல்லாவுக்கு மேலும் பதவிகள் வழங்கிய – மைத்திரி அதிரடி

திருமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மாவட்ட இணைப்பு அலுவலகத்தின் இணைத் தலைவராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன நியமித்துள்ளார்.

இந்த மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனத்தைத் தொடர்ந்து திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் மாதம் 10 ஆம் நாள் திருமலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துளளன.

திருமலை மாவட்டத்தின் இணைப்பு அலுவலகத்தின் இணைத் தலைவராக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முன்னர் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய குழுவின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அதிகம் பங்கெடுத்த ஹிஸ்புல்லாவின் இந்த நியமனம் சிறீலங்கா அரசுக்கும் குண்டுத் தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதை வெளிப்படுத்துவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திருமலையில் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை   – இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

கன்னியா வெந்நீரூற்று புராதன விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் செயற்பாட்டிற்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக ஆட்சிகள் பல மாறினாலும் இந்நாட்டில் வாழும் இந்துக்கள் மீதான மதரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இந்த வகையில் அடக்கு முறைகளும், துன்புறுத்தல்களும் அதர்மமான செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்கி, சமாதான சகவாழ்வை மலர்விக்கும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு இருந்தது.

ஆனால் அரசோ, அரச நிறுவனங்களோ இதற்கு மாறாகவே செயற்படுகின்றது. அது தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாமற் செய்துள்ளது.

இந்து மதச் சின்னங்கள் பல எமது தமிழர்கள் பிரதேசத்தில் காணப்படுவது முந்தய காலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. இருந்தும் இவற்றை பௌத்த மத சின்னமாக மாற்றி திரிபுபடுத்துவதில் தொல்லியல் திணைக்களம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

திருகோணமலை சிவன் ஆலயம் மட்டுமல்ல, வடக்கிலுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம், செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் போன்ற தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்க தொல்லியல் திணைக்களம் முயன்று வருகின்றது.

இதற்கமைவாக கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய திருத்த வேலைகளுக்கு தடை போடுவதோடு, ஆலயத்தின் அருகில் உள்ள வில்கம் விகாராதிபதி தலைமையில் அங்கு விகாரை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

 

 

 

 

அமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க கூட்டமைப்பிற்கு 5 பில்லியன் நிதி

நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவளிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 5 பில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் விசேட இணைப்பாளர் சமிந்த வாசல தெரிவித்துள்ளார்.

நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண பனை அபிவிருத்திக்கு என 5 பில்லியன் ரூபா நிதியினை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 2.5 பில்லியன் நிதி தற்சமயம் வழங்கப்பட்டுள்ளதுடன் மிகுதி பணமும் வழங்கப்படும்.

ஆனால் வடமாகாண குடிநீர் வசதிகளுக்கு வெறும் 5 மில்லியன் ரூபா பணத்தையே ஒதுக்கியுள்ளார். வடமாகாணத்தில் பாரிய ஓர் பிரச்சினை மக்களின் குடிநீர் பிரச்சினையே. இதற்கு வெறும் 5 மில்லியன் பணம் போதுமாக இருக்குமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியானது எதிர்வரும் தினங்களில் நாடாளுமன்றில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்த்து அமைச்சருக்கு ஆதரவ ளிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று பிழையை செய்தவர் யார்? – மு. களஞ்சியம்.

இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள்.

அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை இந்துத்துவா அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம். ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற போது எங்கே போனது இந்த இந்துத்துவா சக்திகள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகத்தின் சினிமா இயக்குனரும் தமிழ் ஆவலருமான இயக்குனர் மு. களஞ்சியம்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழர்களே வணக்கம்.

தமிழீழத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள், பத்துபேர் கொண்ட தனது பரிவாரங்களோடு கிராமம் கிராமகாக தற்பொழுது இந்துத்துவா பரப்புரை மேற்கொண்டு வருகிறாராம். எனக்கு ஒரு ஈழத்தமிழர் வேதனையோடு பகிர்ந்தார்.

நான் என்ன செய்து விட முடியும்?

போருக்குப் பின் ஏது மற்று,வாழ்க்கை நிலைகுலைந்து போய் நிற்கிற மக்கள் மத்தியில் பல்வேறு பொருளாதார ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.

இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம்.

அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை இந்துத்துவா அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம்.

ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற போது எங்கே போனது இந்த இந்துத்துவா சக்திகள்.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க இந்தியாஆயுதங்கள் கொடுத்து உதவிய போது ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

எங்கிருந்து வந்தது இந்த புதிய கரிசனம்?
புதிய அக்கறை?
இதற்கு யார் காரணம்?
இந்த வரலாற்று பிழையை செய்தவர் யார்?
வேறு யாருமல்ல…அர்ஜூன் சம்பத்தின் இந்த முயற்சிக்கு வித்திட்டவர் உணர்ச்சிப் பாவலர் ஐயா காசி ஆனந்தன் அவர்கள் தான்.

ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்பது ஐயா காசி ஆனந்தன் அவர்களுக்கு தெரியாதா?

இந்தனை ஆண்டு காலமாக சைவர்களாக வாழ்ந்த தமிழர்களை இந்துக்களாக மாற்றுகிற அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிப்பது?

சக்திகளை யார் தடுத்து நிறுத்துவது? என தெரிவித்துள்ளார்.

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பியனுப்புகிறது அந்தநாடு

பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மலேசியா உருவாவதைத் தடுக்க, மறுசுழற்சி செய்ய முடியாத 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக மலேசியா சுற்றுச்சூழல் அமைச்சர் யோ பீ இன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து கடந்த 2013-14ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு சட்ட விரோதமாக பிலிப்பைன்சில் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் மீண்டும் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டி கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் யோ பீ இன் வெளிநாடுகளில் இருந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அந்நாடுகளுக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய கடந்தாண்டு சீனா தடை விதித்தது முதல், மலேசியா போன்ற வளரும் நாடுகளை குறிவைத்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கோலாலம்பூர் துறைமுகத்திற்கு 10 கண்டெய்னர்களில் வந்தன. அவற்றில் இங்கிலாந்து கேபிள்கள், காலாவதியான ஆஸ்திரேலியா பால் பவுடர்கள், வங்கதேச சிடிக்கள், அமெரிக்கா, கனடா, ஜப்பான், சவுதி அரேபியா, சீனாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் கழிவுகள் இருந்தன. மறுசுழற்சி செய்ய முடியாத இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும்.

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல. இதனை எதிர்த்து போரிடுவோம். சிறிய நாடாக இருப்பதனால் வளர்ச்சியடைந்த நாடுகள் எங்களை உதாசீனப்படுத்த அனுமதிக்க மாட்டோம். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு சீன தடை விதித்திருப்பது உலக நாடுகளின் கண்களை திறந்துள்ளது. இதனால் நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்ட 150 பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இம்மாத தொடக்கத்தில் 5 கண்டெய்னர் கழிவுகள் ஸ்பெயினுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் தங்களது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்து மறுஆய்வு செய்து, வளரும் நாடுகளை தங்களது குப்பைத் தொட்டியாக கருதி கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டாமென கேட்டு கொள்கிறேன். அப்படி ஏற்றுமதி செய்வது நியாயமற்றது; அநாகரீகமானது. இவ்வாறு அவர் கூறினார்.