ஹிஸ்புல்லாவுக்கு மேலும் பதவிகள் வழங்கிய – மைத்திரி அதிரடி

திருமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மாவட்ட இணைப்பு அலுவலகத்தின் இணைத் தலைவராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன நியமித்துள்ளார்.

இந்த மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனத்தைத் தொடர்ந்து திருமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் மாதம் 10 ஆம் நாள் திருமலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துளளன.

திருமலை மாவட்டத்தின் இணைப்பு அலுவலகத்தின் இணைத் தலைவராக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முன்னர் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய குழுவின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அதிகம் பங்கெடுத்த ஹிஸ்புல்லாவின் இந்த நியமனம் சிறீலங்கா அரசுக்கும் குண்டுத் தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதை வெளிப்படுத்துவதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.