Home Blog Page 1950

முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றம்

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரில் முனை வீதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் அனுமதியற்ற பகுதிகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

17-11-2015ஆம் ஆண்டு குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகரசபையின் அனுமதிபெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.IMG 0195 e1578395354315 முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றம்

அதற்கு அமைய கடந்த 18-02-2019ஆம் ஆண்டு குறித்த கட்டிட பகுதிகளை அகற்றுவதற்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கியது.இருந்தபோதிலும் அந்த கட்டிட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக மேற்கொண்டிருந்தார்.எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த கட்டிடத்தின் பகுதிகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் மாநகரசபையினால் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்தவாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு அதற்கும் அவர்கள் நடவடிககையெடுக்காத காரணத்தினால் குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைககள் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தெரிவித்தார்.

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது.

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை – உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உகண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் இன்று நடைபெறவுள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ்களை பெற வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது குறித்த மருத்துவர், மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 14, 17 மற்றும் 18 வயதான மாணவிகளே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

ss 2 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
625.0.560.350.390.830.053.800.670.160.91 4 ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் தற்போதுவரை பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பசறை பகுதியிலிருந்து நேற்று மாலை எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் விரைவில் உதயமாகவுள்ள புதிய பல்கலைக்கழகம்!

இலங்கையிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (6) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

வவுனியா ஏ9 வீதியில் தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முன்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து சிலாபம் நேக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர்பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் வண்டியும் மோதி விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
DSC03333 வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

DSC03335 வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

DSC03340 1 வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

DSC03342 வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

DSC03343 வவுனியாவில் விபத்து பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பு.

தண்டனைபெற்றோரை விடுவிப்பது தவறான முன்னுதாரணம்; வலிந்து நீதிமன்றம் வந்த மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில், நளினியின் சார்பில் புதிதாக ஒரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், தன்னை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசு 2018 டிசம்பரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டதாகவும் ஆனால், அந்தப் பரிந்துரையின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறியிருந்த நளினி, தான் தற்போது சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். ஆகவே, தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அதன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதி அனுமதி கேட்டதாகவும் அதற்கு பதிலளித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மத்திய அரசு அனுப்பிய பதிலில், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த முடிவு எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் கூறினார்.

இதனை நளினி தரப்பு வழக்கறிஞர் எதிர்த்தார். இந்த வழக்கில் மத்திய அரசு மனுதாரராக இல்லாத நிலையில், தானாக முன்வந்து மனு தாக்கல் செய்திருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, மத்திய அரசை மனுதாரராக இணைத்த நீதிமன்றம், ஜனவரி 28ஆம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

தந்தையின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும்-மகள் செய்னப்

ஈரான் இராணுவத் தளபதியைக் கொலை செய்த அமெரிக்கா இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கொல்லப்பட்ட இராணுவத் தளபதியின் மகள் செய்னப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்லாயிரக்கக்கான மக்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டுபேசிய சோலைமானியின் மகள் தனது தந்தையின் படுகொலைக்கு பழிவாங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியும் தளபதி சுலைமானின் கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்குவதாக கூறியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி சுலைமானின் இறுதிக் கிரியைகள் இன்று (06) தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பல்லாயிரம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்

மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா 19 ஆவது திருத்தச் சட்டத்தை அகற்றுவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்துவருவதாகவும், அதற்காகவே தன்னை முன்னைய அரசதலைவர்களில் இருந்து வேறுபட்ட அரசியல்தலைவராகவும், தூய பௌத்த சிங்களவராகவும் காண்பிக்க முற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரச தலைவராக பதவியேற்றபின்னர் மிகவும் வினைத்திறன் உள்ளஅரசாக தமது அரசைக் காண்பிப்பதில்கோத்தபாயா அதிக அக்கறை காண்பித்துவருகின்றார்.ஊழல்களைஇல்லாது செய்யப்போவதாக தெரிவித்துள்ள அவர் முன்னறிவித்தல்கள் இன்றிஅரச அலுவலகங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு பயணம்மேற்கொண்ட அவர் பாதுகாப்பு வாகனங்கள்இன்றி தனது குண்டு துளைக்காதகாரில் பயணம் செய்திருந்தார்.இந்த முயற்சிகள் எல்லாம் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதுசெய்வதற்கான முயற்சிகள் ஆகும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2015 ஆம்ஆண்டு மகிந்த ராஜபக்சாவை அரசதலைவர் பதவியில் இருந்து அகற்றியபின்னர் மேற்குலகத்தின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சிஅரசு கொண்டுவந்ததே 19 ஆவது திருத்தச்சட்டம்.

இந்த சட்டத்தில் உள்ள பலவீனங்களை பரீட்சித்துப்பார்ப்பதற்காக 2018 ஆம் ஆண்டு மகிந்தாராஜபக்சா மூலம் இந்தியா மேற்கொண்டமுயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அதனைஅகற்றுவதற்கான முழு முயற்சிகளையும் புதியஅரசு மேற்கொண்டு வருகின்றது.கடந்த அரச தலைவர் தேர்தலில்கோத்தபாயா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைஅளவு வாக்குகளை அவரின் கட்சி எதிர்வரும்ஏப்பிரலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பெறுமாக இருந்தால் அவர்கள் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடியும்.

DSCF2855 மேற்குலகத்திற்கு கோத்தபாயா வழங்கப்போகும் அடுத்த தோல்வி225 நாடாளுமன்றஉறுப்பினர்களைக் கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகள் இருந்தால் மட்டுமேமூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும். எனவேதான் தற்போதைய அரசுமிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதுஎன்பது மேற்குலகம் சார்ந்த கொள்கைகளைக் கொண்டசிங்களக் கட்சிகளுக்கு கோத்தபாயா அரசு வழங்கும் தோல்வியாகும்என கொழும்பைத் தளமாகக்கொண்ட அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயாவைஎதிர்க்கும் அளவுக்கு பலமாக ஐக்கியதேசியக் கட்சி இல்லை எனவும், ரணில் விக்கிரமசிங்காவின் பதவி மோகத்தால் கட்சிமிகப்பெரும் உள்ளக பிரச்சனைகளில் சிக்கித்தவிப்பதாகவும். அந்த கட்சி தலையற்றகோழி போல ஓடுவதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பெரும்பான்மையை பெறும் சிங்களக் கட்சிகளின்வரலாறுகள் நேர்த்தியாக இருந்தது இல்லை. மிகப்பெரும்பெரும்பான்மையை பெற்ற சிறீமாவோ பண்டாரநாயக்கா, அதன் பின்னர் சரிவையே சந்தித்தார்இ ஜே.ஆர் ஜெயவர்த்தானாவும்தேர்தல்களை நிறுத்தி திருத்தச்சட்டங்களை கொண்டுவருவதில் தீவிரமாகச் செயற்பட்டார், மகிந்த 2010 இல் பெற்ற பெரும்பான்மையும் அவருக்கு சரிவைத் தான் பின்னர் கொடுத்தது.

எனவே கோத்தபாயா மற்றுமொரு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவாகமாறுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தீர்மானித்ததையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்படவிருப்பதால் கட்சிக்கிடையே குழப்பம் நிலவுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமந்திரனை தலைவராக நியமிப்பதனால், கூட்டமைப்பு பிளவுபடும் நிலை தோன்றியுள்ளதாகவும் இதனாலேயே கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை சேர்த்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று(06) முல்லைத்தீவில் தமிழர் ஐக்கிய முன்னணி அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை இணைத்தே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் அவர்கள் 1977ஆம் ஆண்டிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அத்துடன் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். அத்துடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் அ.அமிர்தலிங்கத்திற்கு பின்னர் இரா. சம்பந்தன் அவர்களே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த தமிழர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரான காசிவிஸ்வநாதன் சண்முகம் நேற்று(06) சிறிலங்கா வந்துள்ளார்.

ஐந்து பேர் அடங்கிய குழுவினருடன், நேற்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் இந்திய வம்சாவழித் தமிழராவார்.