Home Blog Page 1951

யாழில் பட்டிமன்ற நடுவராக களமிறங்கிய சுமந்திரன்!

உடுவில் றோஸ்வில்லாவில் இன்றையதினம் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொண்டார்

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சியடைந்தனவா? அல்லது தற்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளனவா எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் இந்தநிகழ்வில் பறை இசை, குழலிசை ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் நாடாளுமுன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே பார்வையால் இன்பம் காணலாகும்.

ஒருவன் பிறரது நிர்வாண உடலையும் பிறப்புறுப்புக்களையும், பிறரது பாலியல் நடத்தைகளையும் பார்ப்பதன் மூலம் பாலியல் ரீதியான இன்பத்தையும் மன நிறைவையும் பெற்றுக்கொள்ளுகின்றமை ஒரு பாலியல் கோளாறு ஆகும். ஆங்கிலத்தில் இது Voyeurism எனப்படும்.

இதில் Voyeur எப்பொழுதும் ஏனையவரது பார்வையிலிருந்து மறைந்தே இருப்பார். வொயரிசம் ஒரு வகையான அதீத பாலுணர்வு. வொயரிசத்தின் மாறுபட்ட வடிவமானது சிற்றின்ப உரையாடல்களை கேட்டல் மற்றும்ää தொலைபேசி மூலமான பாலியல் உறவையும் குறிக்கின்றது.

பார்வையால் இன்பம் காணலில் உடைகளை மாற்றும் போது, பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மற்றும் நிர்வாணமாக உள்ள நபர்களை பார்த்து சுயஇன்பம் அடைவதைக் குறிக்கும். பார்க்கின்ற,எட்டிப் பார்க்கின்ற செயற்பாடானது பாலியல் ரீதியான புத்துணர்ச்சியை பெறும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படும். பொதுவாக பார்ப்பவர் பார்க்கப்படும் நபருடன் பாலியல் ரீதியான தொடர்புகளையோ செயற்பாடுகளையோ வைத்திருக்க முனைவதில்லை.

பல அரசுகள் பார்வையால் இன்பம் காணலை ஒரு குற்றமாக கூறும் விதிகளை கொண்டிருக்கின்றன. பெரும்பாலான அரசுகள் ஒரு நபர் அவரது வீட்டில் தனிமையில் இருக்கும் போதும்,வேறு சில தனியார் இடங்களில் இருக்கும் போதும், அவரது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்தையோ வீடியோ எடுப்பதையோ தடுக்கிறது.

Langstram மற்றும் seto என்போரின் ஆய்வில் 18-60 வயது உடையவர்களில் 2450 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். 12% ஆண்களும், 41% பெண்களும் குறைந்தது ஒரு தடவையாவது அடுத்தவர் உடல் உறவு கொள்வதை பார்த்து இன்பமடைந்ததாக கூறி உள்ளனர். அமெரிக்காவிலுள்ள கிராமத்திலுள்ள கல்லூரியை சேர்ந்த 60 ஆண் மாணவர்களில் மேற்கொண்ட ஆய்வில் 42மூ மாணவர்கள் அடுத்தவரது பாலியல் உறவினை இரகசியமாக பார்ப்பதாகக் கூறினர்.

பார்வையால் இன்பம் காணலுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான காரணமும் இல்லை. அனேகமான நிபுணர்கள் எதிர்பாராமல் ஒரு நபர் ஆடைகளை களையும் போது- பாலியல் நடத்தைகளில் ஈடுபடும் போது- நிர்வாணமாக உள்ளதை தற்செயலாக காணும் போது அந்த நடத்தையை கற்றுக் கொள்கிறார். மீண்டும் மீண்டும் அந்த செயலை வெற்றிகரமாக செய்யும் போது பார்வையால் இன்பம் காணபதற்கு உறுதியாக தள்ளப்படுகிறார்.

இக் கோளாறு ஏற்படுவதற்கான ஏதுவான காரணிகள் எவை என்று இதுவரை சரியாக அறியப்படவில்லை ஆயினும் இந்தக் கோளாறுகள் ஏற்படுவதற்கு சில காரணிகள்; கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாக பரம்பரை மூலம் கடத்தப்படும் நிறமூர்த்தங்கள் மூலம் இந்த கோளாறு கடத்தப்படுகின்றதாக கூறப்படுகின்றது அந்த வகையில் நிறமூர்த்தங்களில் ஏற்படும் மாற்றங்கள் நிறமூர்த்தத் திரிபுகள் என்பவை காரணமாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது. குழந்தைப் பருவத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களும் ஒரு காரணியாகக் கொள்ளப் படுகின்றது. குழந்தைப் பருவத்தில் ஒரு பிள்ளை தனது நடத்தையை குடும்ப மற்றும் சமூகத்தில் இருந்து அவதானிப்பின் மூலம் கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு கற்றுக் கொள்ளுகின்ற சந்தர்பத்தில் அப்பிள்ளை நேரான பண்புகளையும் கற்றுக் கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் எதிரான சில பண்புகளையும் கற்றுக் கொள்கின்றது. எதிரான பண்பாக பார்வையால் இன்பம் அடைவதை கற்க ஆரம்பிக்கின்றது.

ஒரு நபர் சிறுவயதிலோ அல்லது கட்டிளமைப் பருவத்திலோ பாலியல் சார் துஸ்பிரயோக்த்திற்குள்ளான சந்தர்ப்பங்கள் காணப்ப்படுமாயினும் அப்பிள்ளை பாலியல் சார் விலகல் நடத்தைகளை மேற்கொள்ளத் திட்டமிடும். அதாவது பாலியல் சார் துஸ்பிரயோகம் காரணமாக அப் பிள்ளை பாலியலில் அதிக ஆர்வம் கொண்டவராகவோ அல்லது மாறாக பாலியல் சார் ஆர்வமின்மை கொண்டவராகவோ மாறுகின்றார். இவ்வாறு பாலியல் சார் ஆர்வமின்மை காணப்படுமாயின் குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்தவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தினை அடைகின்ற தன்மை ஏற்படுகின்றது.

மேலும் ஒரு நபர் தன்னைப் பற்றி தாழ்வான சுய மதிப்பீட்டினை ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் தான் அழகில்லாதவர் என்றும், தன்னால் எந்தப் பெண்ணையும் பாலியல் ரீதியாக சந்தோசபடுத்த முடியாது என்றும்ää தன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள், தான் பாலியல் செயற்பாட்டுக்கு பொருத்தமில்லாதவன் என்ற தாழ்வான சுயமதிப்பீடுகளும் ஒரு நபரை பாலியல் நெறிபிறழ்வுக்கு இட்டுச் செல்கின்றன.

இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் தனது பாலியல் சார் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உயிரற்ற பொருட்களை மணத்தல், தொடுதல் என்பவற்றின் மூலம் சுய இன்பத்தினை அனுபவிக்கின்றார்கள்.

ஒருவருக்கு பாலியல் நடத்தையை மேற்கொள்வதில் உடலியல் சார் குறைபாடுகள் காணப்படுமாயின் அந்த நபர் தனது பாலியல் இன்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக மாற்று வழியில் இன்பத்தை பெற எத்தனிக்கின்றார். ஆண்குறி விறைப்பின்மை, பாலியல் உறவின் போதான வலி போன்ற குறைபாடுகள் காணப்படும் போது குறித்த நபர் தனது பாலியல் இன்பத்தினை அனுபவிக்கும் பொருட்டு ஏனையோர் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைப் பார்த்து தனது பாலியல் இன்பத்தை அனுபவித்து தனக்கு ஏற்படும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றார் .

பாலியல் சார் இன்பத்தினை அனுபவிக்கின்ற போது ஏற்படுகின்ற உளவியல் சார் தடைகளும் முக்கியமான காரணியாக உள்ளன. பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் அதிக வெட்க உணர்வு, தாழ்வு மனப்பான்மை,ஆர்வமின்மை, பயம் போன்ற உளவியல் ரீதியான வெளிப்பாடுகள் காணப்படுமாயின் குறித்த நபரால் பாலியல் இன்பத்தினை அனுபவிப்பதற்கு வேறு வழிமுறை நாட்ப்படுகின்றது. மேலும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு பாலியல் சார் அடிப்படை அறிவின்மை என்பதும் ஒரு காரணியாக உள்ளது. அதாவது பாலியல் சார் அறிவின்மை என்பது நமது சமுதாயத்தில் இன்று அதிகரித்து வரும் ஒன்றாகும்.

பார்வையால் இன்பம் காணும் பாலியல் நெறிபிறழ்வை கொண்டிருப்பவரை அடையாளம் காண்பதற்கு அவர்கள் பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டுவர். எதிர்பாராத ஒரு நபர் ஆடை மாற்றும் போது அல்லது பாலியல் நடத்தையில் ஈடுபடும் போது பார்த்தல்- மீண்டும் மீண்டும் தீவிரமான பாலியல் உணர்வுகளை தூண்டுவதனான கற்பனைகள; பாலியல் தூண்டல்களில் ஈடுபடல்- நீலப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டல்- ஒரு நபரின் மறைவான பகுதிகளை உற்றுப் பார்த்தல் என்பன இனங்காணக்கூடிய அறிகுறிகள். பார்வையால் இன்பம் காண்பது ஒரு முறை மேற்கொள்ளப்படின் பொதுவாக இதைத் தடுக்க முடியாது. காலப்போக்கில் பாலியல் ரீதியான மனநிறைவை பெற்றுக்கொள்வதற்கான பிரதானமான வடிவமாக இது மாறும், இதுவொரு நீண்ட கால நோய்.

பாலியல் நெறிபிறல்வான,பார்வையால் இன்பம் காணும் நடத்தையை உள மருத்துவர்களும், உள ஆற்றுப்படுத்துநர்களும் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளை கையாளுகின்றனர். நடத்தை மாற்றுச் சிகிச்சை,உளக் கல்வியூட்டல், தளர்வுப் பயிற்சிகள், குடும்ப ஆற்றுப்படுத்தல்,அறிகைச் சிகிச்சை,ஆழ்துயில் சிகிச்சை, ஆள்மைய சிகிச்சை என்பவற்றின் மூலம் இச் செயல்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுகின்றன.

 

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள மாற்றம்!

நாடளாவிய ரீதியில் 10 மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு,கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,புத்தளம்,ஹம்பாந்தோட்டை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் செயாளர்களே இடமாற்றப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் ஓய்வுபெறவுள்ளநிலையில் அவரின் இடத்துக்கு தற்போது கிழக்கு மாகாண சபையில் பணியாற்றி வரும் கலாமதி பத்மராஜா நியமிக்கப்படவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக கடமையாற்றும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் செயலாளராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் கொழும்பில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று அனர்த்த முகாமைத்துவபிரிவின் மேலதிக செயலாளராக பணியாற்றிவரும் எஸ்.அமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மாவட்ட செயலாளர்களின் விபரங்கள் தெரியவரவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியை இழந்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக கல்வியை பெற முடியாமலும் பகிடிவதைக்குள்ளாகி பட்டத்தை பெறமுடியாமல் போனவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பத்தை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பத்திரிகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பகிடிவதையின் தன்மை, பல்கலைக்கழக வசதியை பெற்றுக்கொள்ள தயாரான பட்டப்படிப்பு கற்கை நெறி தொடர்பான தகவல்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் இந்த குழுவில் துணை வேந்தர்கள்;, விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெறுவர். நீதியான விசாரணைக்கு பின்னர் தான் விரும்பும் பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்து பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிடிவதையை எதிர்கொள்ள முடியாமல் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்கள் சுமார் 2000 பேர் இருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

கடத்தலுடன் தொடர்புடையவருக்கு பதவி உயர்வு வழங்கிய கோட்டா அரசு

கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமாண்டர் டி.கே.பி.தசநாயக ரியர் அட்மிரல் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2019 டிசம்பர் 11ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரான டி.கே.பி.தசநாயக கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

யாழில் இரவுவேளை இடம்பெற்ற வாள்வெட்டு! பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர் வழங்கிய தகவல்!

யாழ்ப்பாணம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இருவர் மீது நேற்று முந்தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடத்திய கும்பலை கொட்டடி இளைஞர்கள் துரத்திச் சென்ற போது, அவர்கள் 3 மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உரிமையாளரை நேற்றைய தினம் கைது செய்ததுடன் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தப்பட்டனர். 3 மோட்டார் சைக்கிள்களும் சான்றுப்பொருட்களாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் மூவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேக நபர்கள் மூவரையும் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

வவுனியாவில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்படும்

அரச ஊழியர்களுக்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்பட்டு காணியற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் காணி அற்ற 600 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனினும் 600 பேர் வரையில் குறித்த பகுதியில் காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில் வெறும் 80 குடும்பங்கள் மாத்திரமே அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

200 பேர் வரையில் பகுதியளவில் வீடுகளை அமைத்துள்ளதுடன் ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளிற்குள் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தமக்கு காணியில்லை என்று தெரிவித்து பலர் இங்கு காணிகளை பெற்றுக் கொண்ட நிலையில் மிகவும் சொற்ப அளவிலானோரே குறித்த பகுதியில் வசிக்கின்றனர்.

குறிப்பாக 100 இற்கும் மேற்பட்டோருக்கு வீடமைப்பு அதிகாரசபையால் வீடு கட்டுவதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளனவே தவிர அவர்கள் குடியிருக்க வரவில்லை. எனவே அவை பற்றைக்காடுகளாக வளர்ந்து காடாக இருக்கிறது.

இதனால் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாக இது இருப்பதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாகவும், தமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியவசிய உட்கட்டுமான வசதிகள் தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் மாவட்ட அரசஅதிபர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததுடன், கடந்த மாதம் ஓமந்தை பகுதியில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் உத்தியோகத்தர்களின் குறைப்பாடுகள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா வீடமைப்பு அதிகார சபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் கடந்த 2ஆம் திகதி வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமையவே இக்கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த பிரச்சினை தொடர்பாக தமது தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காணிகளில் வதியாதோர் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளோம்.

அதேவேளை வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

காணி வழங்கப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக அறிவித்தல்கள் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளை உரிமையாளருக்கு 1இலட்சம் பெறுமதியான பரிசு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்றன. இதில் 676 காளைகளும் 936 வீரர்களும் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1, 2, 3ஆம் திகதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

அந்த வரிசையில், அவனியாபுரத்தில் தை முதலாம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தை இரண்டாம் நாளன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

முறைப்படி உடற் பரிசோதனை, முன்பதிவு செய்து அனுமதி பெற்று வாடிவாசல் வரிசையில் நின்ற காளைகளுக்கு நடுவில் திடீரென அனுமதி பெறாத காளைகளை அனுப்ப முயன்றோர் மீது பொலிசார் தடியடி நடத்தியதால் போட்டி தொடங்குவதற்குத் தாமதமாகியது.

காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. அமைச்சர், ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் போட்டிக்கான காளைகள் களமிறக்கப்பட்டன. மொத்தம் 700 காளைகள், 936 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 75பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனால், நிறைய காளைகள் களமிறக்கப்படவேண்டியிருந்ததால், போட்டியின் கால நேரம் இரண்டு முறை நிடிக்கப்பட்டு மாலை 5மணிக்கு ஜல்லிக்கட்டு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
535140 பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளை உரிமையாளருக்கு 1இலட்சம் பெறுமதியான பரிசு

ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு சில சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இன்றைய போட்டியில் அனைத்து சமூக பிரதிநிதிகள் சேர்ந்து அமரும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

16 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக மாருதி சுசுகி இக்னிஸ் கார் வழங்கப்பட்டது. 13 காளைகள் அடக்கிய ராஜா என்ற இளைஞருக்கு இரண்டாம் பரிசாக ரிவிஎஸ் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 10 காளைகள் அடக்கிய கார்த்தி என்ற இளைஞர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

இது தவிர போட்டியில் பங்கேற்ற விரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா தொடங்கி வெள்ளிக் காசு, தங்கக்காசு, அலுமாரி என ஏராளமான வரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு 1 இலட்சம் மதிப்புள்ள கன்றுடன் கூடிய நாட்டு பசு மாட்டை விழாக் குழுவினர் முதல் முறையாக வழங்கியது பார்வையாளரைக் கவர்ந்தது.

பிரித்தானியா தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் -ஜெரமி கோர்பைனின் பொங்கல் செய்தி

பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைநிறைவேற்றப்போவதில்லை என சிறீலங்காவின் புதிய அரச தலைவர் தொவித்துள்ளது கவலை தருவதாகவும், ஆனால் தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் எனவும் பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற தைப்பொங்கல்விழாவை முன்னிட்டுஅவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்றைய தினத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், நீதிக்காகவும் அமைதிக்காகவும் செய்த தியாகங்களைநாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தமிழ் மக்களும் அவர்களின்குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மீண்டும் ஏற்பாடாதுஎன்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம்.

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்குஎனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு முக்கிய பல பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதியா…? விக்னேஸ்வரன் காட்டம்

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாரத்துக்கு ஒரு கேள்வி எனும் கேள்வி பதில் அறிக்கை ஒன்று இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு திரைப்பட ரடிகர் ரஜினியை சந்தித்திருந்தார். அங்கு அவர் ரஜினியை சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் பல விடயங்கள் பேசப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் அவ்வாறு ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல விடயங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

ரஜினியை தெலுங்கன், சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்றெல்லாம் கூறுபவர்கள் அவரைச் சென்று ஒருமுறை சந்தித்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். அப்போது அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்.

என்னையும்தான் தெற்கில் தாறுமாறாக விமர்சிக்கின்றார்கள். இனவாதி என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். கலவரத்தை உண்டாக்க எத்தனிக்கும் ஓர் கயவன் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அதைச் சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்த்தான் வெளி உலகம் அவர்களுக்கு தென்படுகின்றது.

சிலர் நான் நீதியரசராக இருந்தவர், ஒரு சினிமாக் காரரைச் சென்று சந்தித்தது தவறு என்று கூறுகின்றார்கள். நாளை ரஜனி அவர்கள் பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரை திரைக் கூத்தாடி என்று தான் கூறுவீர்களா?

ரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அவருடன் எம்முடைய சந்திப்பு முடிந்ததும் தானே என்னுடன் வந்து நான் ஏறியதும் என் கார் கதவைச் சாத்தி வழி அனுப்பி வைத்தார். அந்தச் சிறந்த மனிதரின் அறிமுகத்தை, சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.