பிரித்தானியா தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் -ஜெரமி கோர்பைனின் பொங்கல் செய்தி

பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைநிறைவேற்றப்போவதில்லை என சிறீலங்காவின் புதிய அரச தலைவர் தொவித்துள்ளது கவலை தருவதாகவும், ஆனால் தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் எனவும் பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற தைப்பொங்கல்விழாவை முன்னிட்டுஅவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்றைய தினத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், நீதிக்காகவும் அமைதிக்காகவும் செய்த தியாகங்களைநாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தமிழ் மக்களும் அவர்களின்குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மீண்டும் ஏற்பாடாதுஎன்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம்.

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்குஎனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு முக்கிய பல பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.