Home Blog Page 1949

கோட்டாவின் சிம்மாசன உரையின் பின் மஹிந்தவுடன் பேசிய மாவை! நாளை நடக்கப்போவது என்ன?

நாடாளுமன்றத்தின் நாளைய கூட்டத்தில் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாட முடியும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக கூறினார்.

இது தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாட முடியுமென தம்மிடம் பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிம்மாசன உரையையடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போதே மேற்படி கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் அது தொடர்பில் எமது முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளோம்.

மேலும் பலாலி விமான நிலையத்திற்கு கிழக்குப் பிரதேசம் மற்றும் மயிலிட்டி பகுதிகளில் இன்னும் 2500 குடும்பங்களை மீள் குடியேற்ற வேண்டியுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அம் மக்கள் வீடில்லாமலும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்காகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் அதனையடுத்து நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அது தொடர்பில் விளக்கியதாகவும் மாவை சேனாதிராஜா எம். பி. மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெற உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற இருப்பதாக அறிய வருகிறது.

ஏ9 வீதியில் சோகம்! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

முல்லைதீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த விபத்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என்னையும் கைது செய்யுங்கள்: அரசாங்கத்திடம் கோரும் மனோ

அரசால் கைது செய்யப்படுபவர்களின் வாக்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசு கைது செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் எதிரணியினரை வேட்டையாடும் நடவடிக்கையைக் கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றுமாறு அவர் அரசைக் கேட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணையை நடத்துமாறும் அர்ஜூன மகேந்திரனைச் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வருமாறும் தெரிவித்த அவர், அவ்வாறு விசாரணை செய்யுமிடத்தில் நல்லாட்சி அரசில் இருந்த அழுக்கை விட அதற்கு முன்னைய அரசில் இருந்த பெருமளவான அழுக்குகளும் வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வழக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழக்கப்படுவதாகத் தெரிவித்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசைக் கோரியுள்ளார்.

கையறு நிலையில் மாவை! அடுத்த தலைவர் சுமந்திரனா? சுரேஷ் கேள்வி

தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என ஈ.பி.ஆர்.எல் எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய இன்னும் பலர் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு -தண்ணீரூற்று பகுதியில் நேற்று கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்-

“இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, தான் சிங்களமக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்றும், எனவே அதற்குத்தான் கடமைப்பட்டுள்ளார் என்றும் , ஆகையால் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆணைகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

சில வேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருக்கலாம். ஆனால் அதே சமயம் வடக்கு- கிழக்கிலுள்ள மற்றொரு தேசிய இனமான, தமிழ்த் தேசிய இனம் என்பது இன்னுமொரு ஆணையைக் கொடுத்திருக்கின்றது.

எமது இனம், மொழி, நிலம் என்பன காப்பாற்றப்பட வேண்டும், எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும், அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆகவே ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனாதிபதி எனச் சொல்லக்கூடிய ஒருவர், வெறுமனே சிங்கள மக்கள் கொடுத்த ஆணையை மாத்திரமல்ல, அவருக்கு எதிராகவே இருந் தாலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் பரிசீலிக்க வேண்டும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்குமான ஜனாதிபதியாக அவர் இருந்தால், அவர் இவ்வாறான விடயங்களை நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் வருகின்ற அரசுகள், இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றன.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காகக் குழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், எந்தச் சிங்களத் தலைமைக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திராணியோ, பக்குவமோ கிடையாது. அதனைப் போட்டு மிதித்து இல்லாமல் செய்கின்ற போக்கைத்தான் நாம் தொடர்ச்சியாகப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

தற்போது வந்திருக்கக்கூடிய கோட்டாபயவின் தலைமை என்பது எல்லாவற்றையும் நிராகரித்ததுடன், தற்போது பிரச்சினை என்று எதுவும் கிடையாது எனவும் அபிவிருத்தி செய்தால் போதுமானது என்றும் கூறுகிற” என்றார்.

விமான விபத்து குறித்து ஆராய சீன நிபுணர் குழு கொழும்பு வருகின்றது

ஹப்புத்தளைப் பிரதேசத்தில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வை – 12 ரக விமானம் விபத்துக்குள்ளாகியமை குறித்து ஆராய்வதற்காக சீனாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இந்த விமானமானது சீனாவின் யஹபின் நிறுவனத்தால் தயாரிக் கப்பட்டது. சுமார் 30 லட்சம் டொலர்கள் பெறுமதியானது. விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக இந்த விமானத்தைத் தயாரித்த சீனாவின் யஹபின் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளனர் .

இதேவேளை, சீனாவால் தயாரிக்கப்பட்டு இலங்கை விமானப் படையால் கொள்வனவு செய்யப்பட்ட வை-08 ரக விமானம் கடந்த 2002ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளானதில் 5 படையினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் – சிறீலங்காவையும் தாக்கும் அபாயம்

மிகவும் ஆபத்தான வைரஸ் கிருமிகள் சீனாவில் பரவி வருவதுடன், அதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குபே மாநிலத்தில் உள்ள வூகான் பகுதியில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் கிருமிகள் வேறு நாடுகளுக்கும் பரவும் ஆபத்துக்கள் உள்ளபோதும், சிறீலங்கா மக்களை பெருமளவில் தாக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் நூறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனா மக்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவதால் இந்த ஆபத்துக்கள் அதிகம் என நம்பப்படுகின்றது.

இந்த வைரஸ் கிருமிகள் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றாது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும் அது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என கொங் கொங் நாட்டின் நுண்ணுயிர் ஆராட்சியாளர்கள்

தெரிவித்துள்ளனர். இதுவரையில் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவையே இதன் அறிகுறிகளாகும். 2003 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் 37 நாடுகளுக்கு பரவியதுடன், 774 பேர் பலியாகியிருந்தனர், 8000 பேர் பதிக்கப்பட்டிருந்தனர். கொங்கொங் நாட்டில் மட்டும் 299 பேர் பலியாகியும், 1755 பேர் பாதிக்கப்பட்டும் இருந்தனர்.

அதனைப் போலவே இந்த வைரஸ் கிருமியும் மக்களைத் தாக்கலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

 

தரமற்ற சிறீலங்கா வான்படை விமானங்கள் – பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து

கடந்த வெள்ளிக்கிழமை (03) சிறீலங்காவின் கப்புத்தளை பகுதியில் சிறீலங்கான வான்படையின் வை-12 விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவமானது சிறீலங்கா வான்படை மற்றும் தனியார் வானூர்தி சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கெர்பியன் வை-12 மற்றும் சியான் எம்.ஏ-60 ரக விமானங்களை சிறீலங்கா வான்படையினர் பயன்படுத்தும் போதும், அவற்றை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளாது பொதுமக்களுக்கான சேவைகளுக்கும் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ந்து நெருங்கிய விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்துள்ளதாக சிறீலங்கா வான்படை தெரிவித்தாலும், அது பறப்பதற்கு தகுதியற்ற விமானம் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

2015 ஆம் ஆண்டே இந்த விமானங்களின் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் கேள்விகளை எழுப்பிய போதும் சிறீலங்கா அரசும் அதன் வான்படையும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா வான்படையினரிடம் தற்போது இரண்டு வை-12 விமானங்கள் உள்ளன. எனினும் அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானத்தை பெறுவதற்காக Helitours என்ற நிறுவனத்தின் இணையத்தளத்தின் மூலம் தற்போதும் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பலாலி, திருமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளுக்கு சேவைகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனத்தில் மக்கள் தற்போதும் ஆசனங்களைப் பதிவுசெய்து வருவது மிகவும் கவலை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா தயாரிப்பான கெர்பியன் வை-12 விமானம் மற்றும் சியான் எம்.ஏ-60 ஆகிய விமானங்களுக்கு Certificates of Airworthiness (COA) என்னும் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி இன்று வரை போராடி வந்த ஒரு தந்தை மன்னாரில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்னும் 73 வயதுடையவரே இவ்வாறு மரணத்தைத் தழுவியவராவார்.

இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் என்பவர் 2008ஆம் ஆண்டு மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் காணாமல் போயிருந்தார். இவர் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை தனது மருமகளுடன் தனது மகனைத் தேடி தொடர்ந்து நீதிகோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளராக செயற்பட்டு வரும் ஜெயக்குமாரி என்பவரின் கணவனே காணாமல் ஆக்கப்பட்டவர் என்பதுடன், அவரின் தந்தையாரே மரணத்தை தழுவியுள்ளார்.

 

 

அமெரிக்க படையினரை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே  இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5000 இராணுவத்தினர் உள்ளனர்.

இதேவளை ஜெனரல் குவாசிம் சுலைமான் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு)

1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்தார். அவருடைய தந்தை சீவல் தொழில் செய்பவராக இருந்த போதும் அவரால் அத்தொழிலை செய்ய முடியாதிருந்தது. இதனால் அவர் குடும்பம் ஏழ்மையிலேயே வாழ்ந்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் எண்ணத்துடன் குடும்பம் வந்தாறுமூலைக்கு இடம்பெயர்ந்தது.

ஏழ்மை காரணமாக மகேந்திரனை தவிர ஏனைய பிள்ளைகள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை. மகேந்திரன் பத்து வயதுவரை பள்ளிக்கூடம் சென்றார். இருந்தும் அவருடைய எழுத்தறிவும் குறைவாகவே இருந்துள்ளது. மேலே குறிப்பிட்ட வாக்குமூலத்தில் தான் படித்த பள்ளிக்கூடத்தின் பெயர் நினைவில்லை என்றே அவர் சொன்னார். அவர் பிறந்த திகதியையும் அவர் தவறாகவே அதில் சொல்லியிருக்கிறார்.

போர் காரணமாகவும் சிறிலங்கா இராணுவத்தின் கெடுபிடிகள் காரணமாகவும் குடும்பங்கள் இளையோரை வீட்டினுள்ளேயே பூட்டி வைத்திருந்த காலமது. அப்போது மகேந்திரன் பதின்ம வயதினராக இருந்தார். 1990இல் விடுதலைப்புலிகள் அவரை அமைப்பில் இணைத்தார்கள். இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் அவர் தொட்டாட்டு வேலைகள் மட்டுமே செய்தார். இரண்டு வருடங்களில் பாசறையிலிருந்து தப்பியோடிவிட்டார்.625.500.560.350.180.600.608.800.900.160.90 படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தப்பியோடி சில மாதங்களில் ஒரு பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். இப்போது அவருடைய தாய் தந்தையர் குடும்பம் மீண்டும் அவர்களின் சொந்த இடமான மொறக்கொட்டாஞ்சேனைக்கு சென்றுவிட்டார்கள். மகேந்திரன் அவருடைய மனைவியின் குடும்பத்துடன் வந்தாறுமூலையில் தங்கியிருந்தார். அவர்கள் தம்பதிகளாக இணைந்திருந்து மூன்று நாட்கள்தான். அப்போது இராணுவம் நடத்திய ஒரு சுற்றிவளைப்பில் மகேந்திரனும் கைதாகினார்.

அன்றைய காலத்தில் இவ்வாறான கைதுகள் தலையாட்டிகள் அடையாளம் காட்டுவதன் மூலமே நடத்தப்படும். மகேந்திரனும் அவ்வாறுதான் கைதுசெய்யப்பட்டார். இவையெல்லாம் மகேந்திரன் விடுதலைப்புலிகள் பாசறையில் இருந்து தப்பியோடி வந்து நான்கு மாதங்களுக்குள் நடந்தது.

கொடிய சித்திரவதைகள் மூலம் அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தே அவருக்கு ஆயுள் தண்டனையும் மேலதிகமாக 70 ஆண்டுகள் சிறையும் கொடுக்கப்பட்டிருந்தது.

மகேந்திரனின் குடும்பத்திடம் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட ஒரு குறிப்புபுத்தகம் இருக்கிறது. அதில் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன குற்றத்திற்காக அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று எதுவும் பதியப்படவில்லை.DSC 1257 3 படுகொலைகளின் சாட்சி ஆகையால் சாகடிக்கப்பட்டார் மகேந்திரன்;ஆவணங்கள் தரும் ஆதாரம்

சில மாதங்களுக்கு முன்னர் மகேந்திரனின் குடும்பத்தினுடைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் மகேந்திரனின் நிலமையை பற்றி எழுதச்சொல்லி பிபிசி தமிழ் ஊடகவியலாளரை கேட்டார். பிபிசியும் குடும்பத்தை விசாரித்து மகேந்திரனின் கதையை செய்தியாக வெளியிட்டது.

மகேந்திரனின் நிலமை பற்றி நாடாளுமன்றத்திலும் வியாழேந்திரன் உரையாற்றினார். தொடர்ந்து மட்டக்களப்பு பொலிசார் மகேந்திரனின் குடும்பத்திடம் சென்று கதைத்தார்கள். மகேந்திரன் விடுதலை செய்யப்பட்டால் அவர் தங்குவதற்கு இடமுண்டா என்று விசாரித்ததாக குடும்பத்தவர் சொன்னார்கள். அப்போதைய சனாதிபதி சிரிசேனா 100 கைதிகளுக்கு விடுதலை கொடுக்க எண்ணுவதாகவும் மகேந்திரனும் அதில் ஒருவர் என்றும் பொலிசார் குடும்பத்திற்கு சொன்னார்கள்.

2006ம் ஆண்டு மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் வாக்குமூலத்தை இரகசியமாக எழுத்தில் பதிவுசெய்து அன்று நடாளுமனற உறுப்பினராக இருந்த கிட்டினன் சிவநேசனிடம் கொடுத்தார்கள்.
ஒரு சிடியில் பதிவு செய்யப்பட்ட இவ் வாக்குமூலங்களை சிவநேசன் ஐயா 2006ம் ஆண்டு வன்னியில் இருந்த மனிதவுரிமை ஆர்வலர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்.

(சிவநேசன் ஐயா 2008 மார்ச் மாதம் சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)

சிவநேசன் ஐயாவுக்கு கொடுக்கப்ட்ட 2006ம் ஆண்டு வாக்குமூலத்தில் எவ்வாறு அவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை அவர் விபரித்திருக்கிறார்.

சிறையில் மகேந்திரன் பூட்ஸ் காலால் உதைக்கப்பட்டதால் அவருடைய முகம் வீங்கியிருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு அவர் தலையை தண்ணீருக்குள் பல நிமிடங்கள் அழுத்தி வைத்தார்கள். அவர் தலை பொலித்தீன் பையால் மூடப்பட்டு அது அவருடைய கழுத்தை சுற்றி இறுக்கப்பட்டது. அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவருடைய நெஞ்சில் கொட்டாந்தடியால் அடித்தார்கள்.இராணுவத்தினரின் உடைகளை சுத்தம் செய்யவும் அவர்களுடைய பூட்சுகளை மினுக்கவும் அவருக்கு கட்டளை கொடுக்கப்பட்டது.

அத்துடன்,

அவர் மட்டக்களப்பில் ஒரு வருடம்(1993)தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை 15 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை தான் பார்த்ததாக சொல்லியிருந்தார். அவர்களின் உடல்கள் அங்கிருந்த ஒரு கிணற்றினுள் போட்ப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

19 வயதில் எந்த குற்றமும் செய்யாமல் கைதுசெய்யப்பட்ட மகேந்திரன் பலரின் முயற்சியின் பின்னரும் படுகொலைகளின் சாட்சி என்ற ஒரே காரணத்திற்காக 25 ஆண்டுகள் சிறையில் இருந்தே காலமானார்.

இன்று சிறிலங்காவின் சிறைகளில் வாடும் அதிகமாக தமிழ் அரசியல் கைதிகள் மகேந்திரன் போன்று படுகொலைகளின் சாட்சி என்பதற்காகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

செல்லப்பிள்ளை மகேந்திரன் இரகசியமாக வழங்கியிருந்த வாக்குமூலத்தை இங்கு முழுமையாகப் பார்க்கலாம் http://www.ilakku.org/wp-content/uploads/2020/01/0003-Sellapillai-Mahendran.pdf