Home Blog Page 1724

விக்னேஸ்வரன் கடுமையான இனவாதியாகக் காணப்படுகிறார்;அவருக்கு எதிராகவும் நடவடிக்கை தேவை

இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ரியல் அட்மிரல் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்திற்கு எதிராக போராடி, யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். நாம் நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் அன்று போரிட்டோம். எனவே, இனியும் நாட்டில் சமஷ்டிக்கு இடம் கிடையாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் ஒன்றே.

கருணா அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அரசியல் ரீதியாக நாம் இவரது கருத்தை முற்றாக நிராகரிக்கிறோம். அதேபோல், விக்னேஸ்வரனை எடுத்துக் கொண்டால் அவர் கடுமையான இனவாதியாகவே காணப்படுகிறார். கொழும்பில் பிறந்து, சிங்கள மக்களுடன் வாழ்ந்து, நீதியரசராக இங்கு கடமையாற்றி, வடக்கிற்கு சென்று சிங்கள மக்களுடன் வாழ முடியாதென்று கூறுகிறார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்கள் தொடர்பான வெறுப்புணர்வையே அவர் விதைத்து வருகிறார்.

இவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் புலிகளின் உறுப்பினர்களை கொலை செய்தோம் எனக்கூறி என்றும் வாக்கு கேட்கவில்லை. நாம் போரிட்டது பயங்கரவாதத்திற்கு எதிராக. நாம் அன்று போரிட்டு, யுத்தத்தை வெற்றி பெற்றதன் காரணத்தினால்தான் இன்று அனைவரும் ஐக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்துவருகிறோம். இதனை அனைத்து மக்களும் உணர்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

 

 தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

தமிழர் தாயகப்பகுதிகள்  ஆயுத போராட்டம்   மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. சர்வதே சமூகம் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளை மீளமைப்பதற்கு பல்லாயிரம் கோடிகளை வழங்கியது.ஆனால் அவை தமிழர் பகுதிக்கு சென்றடைந்ததா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தமது இருப்பை தக்கவைக்க,இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிபெற,தமது உரிமைகளை நிலைநிறுத்த தமிழர்கள் பல்வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டு இன்றும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருக்கிறார்கள். அதேவேளை அவர்களின் வாழ்வில் சோதனைகள் இவேதனைகள்,துன்பங்கள் இன்னும் என்பன தொடர்கதையாகவே உள்ளன.

குறிப்பாக விடுதலைப்போராட்டத்தில் எல்லைக் கிராமங்கள் மற்றும்  காடுகள் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் அர்ப்பணிப்பினை நாம் மறந்துவாழும் சமூகமாக  மாறிவிட்டோமா என என்னத்த தோன்றுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை,மினுமினுத்தவெளி,அக்குரானை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய முறுத்தானை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் கிட்டத்தட்ட வெளியுலக தொடரப்பட்ட கைவிடப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது.

மட்டக்களப்பின் நகரின் வடக்கே திருகோணமலை வீதியின் சுமார் 28 கிலோமீற்றர் தொலைவில் கிரான் பிரதேசம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்தின் மேற்குப்புறத்திலே சுமார் 41கிலோமீற்றர் தொலைவில் அக்குறாணை என்னும் கிராமம் உள்ளன.IMG 4436  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில் ஒன்றான கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவும் ஒன்றாகும்.இதில் 18 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளது. எனினும் இப்பிரிவில் 11 பிரதேச செயலகப்பிரிவு கடந்த கால யுத்தத்தினாலும் கடும் வரட்சியினாலும் பாதிக்கப்பட்டுவரும் கிராம சேவகர் பிரிவுகளாகும்.

இக்கிராமத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் பூர்வடி மக்களில் ஒருசாராரான  வேடுவர் பரம்பரையினை சேர்ந்தவர்கள்.

வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், குளங்களில் மீன் பிடித்தல், விறகு வெட்டுதல்,வயல் கூலி, காவல் வேலைகளுக்குச் செல்லல்,பருவகாலச் சேனைச்செய்கை என்பனவே இவர்களின் பிரதானதொழில்களாகும்.

இந்த ஆதி தமிழ் சமூகம் போராடடத்திற்கு பல்வேறு வழிகளில் துணைநின்றது.விளைவாக படுகொலைகளை எதிர்கொண்டது.சிறிய தொருசமூகமாக இருந்த போதிலும் அதிகளவான மாவீரர்களை இந்த மண்ணுக்கு அது தந்தது.

இக்கிராமத்தினை பொறுத்தவரையில் இதுவரையில் பொதுப் போக்குவரத்தினை இப்பகுதி மக்கள் கண்டதில்லை. இதுவரையில் சரியான குடிநீரை பெற்றதில்லை,மாணவர்கள் முறையான கல்வியை இதுவரையில் பெற்றதில்லை.இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சமூகம் எதிர்கொண்டுள்ளது.

வறுமை,கல்வியறிவின்மை,மருத்துவ வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாமை,குறைவான குடியிருப்பு வசதிகள் என அந்த மக்களின் துன்பநிலை தொடர்ந்து செல்லும்.IMG 0807  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இக்கிராமத்தில் 267 குடும்பங்களும் 860ற்கு மேற்பட்ட சனத்தொகையும் காணப்படுகின்றது.அதே வேளை கிராம சேவகர் பிரிவில் இக்கிராமத்தை உள்ளடக்கியதாக 02 பாடசாலைகள் காணப்படுகின்றன.

அதில் ஒன்றுதான் அக்குறானை பாரதி வித்தியாலயம். இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் 1 தொடக்கம் தரம் 8 வரைக்கும் 98 மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலுகின்றனர்.அதே சமயம் இப்பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 05 ஆகும்.

இப்பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.ஆனால் இவர்கள் தரம் 08மட்டுமே கற்கமுடியும்.அந்த கல்வியுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பூர்த்தியாவதாக அங்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த இடைவிலகல் காரணமாகஇபெற்றார் பெண்பிள்ளைகளுக்கு    இளவயதில் திருமணம் செய்துவைக்கும் சூழ்நிலை அதிகளவில் காணப்படுகின்றது. அத்துடன் ஆண்பிள்ளைகள்  சிறுவயதிலேயே வேட்டைக்கும் காவலுக்கும் அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலையும்  காணப்படுகின்றதுIMG 0742  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இப்பகுதி மாணவர்கள் சிறந்த உடல் வலிமையும் மனவலிமையும் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் அவர்கள் சிறந்த முறையில் வளப்படுத்தப்படும்போது விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதிக்கும் நிலையேற்படும் எனவும் அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது இங்கு சாதாரண தரம் வரையிலாவது கற்பிப்பதற்காக வளங்கள் ஏற்படுத்தப்படும்போது கல்வி ரீதியான மாற்றம் ஒன்றை கொண்டுவரமுடியும் எனவும் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள பாடசாலைகள் மிகுந்த வளப்பற்றாக்குறையுடன் இயங்குவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதியானது தமிழ் மக்களின் எல்லைப்பகுதியாகவும் காணப்படுவதனால் இப்பகுதியினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.இங்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரசன்னம் என்பது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்துள்ளது.போக்குவரத்து பாதைகள்  மிகவும் மோசமான உள்ளமையால் அரசசார்பற்ற நிறுவனங்கள் இன்று சென்றுவருவது மிகவும் குறைவாகவே உள்ளது.

இப்பகுதியில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை மக்கள் எதிர் நோக்கவருகின்றனர்.அரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக குடிநீர் விநியோக திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டபோதிலும் சில வருடங்களில் நீர் பம்பி பழுதடைந்த காரணத்தினால் நீர்விநியோக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை செய்வதற்கு யாரும் முன்வராத நிலையில் மக்கள் கடந்த சில வருடங்களாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் கட்டு பகுதியினூடாக ஆற்றங்கரைக்கு சென்று நீரைப் பெற்றுக்கொள்ளவேண்டி துர்ப்பாக்கிய நிலை இக்கிராமத்தில் காணப்படுகின்றது.சிலவேளைகளில் யானையின் அச்சுறுத்தலும் உள்ளதாகவும் அண்மையில் கூட யானையினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.IMG 0035  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இப்பிரதேசத்தில் இதுவரையில் ஒரு வைத்தியசாலையில்லை. நோய்வாய்ப்படும் போது சுமார் நூறு கிலோமீற்றர் பயணம் செய்து வாழைச்சேனைக்கு வரவேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.அதிலும் இரவில் நோய்வாய்ப்படும் ஒருவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறு பலதபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களின் வறுமைநிலையை பயன்படுத்தி அவர்களின் உழைப்பை  சுரண்டும் நடவடிக்கைகள் வியாபாரிகள்இமுதலாளிகளால் மேற்கொள்ளப்படுவதும் இங்கு வெளிப்படையது.

இந்த நிலமையைப் போக்க,இந்த மக்களை கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்தும் சரியான திட்டங்கள் விரைந்து அங்கு முன்னெடுக்கப்படுவது காலத்தின் கட்டாய தேவை.இப்படிப்பட்ட நடவடிக்கைகளே இந்த மக்களின் மோசமான வறுமைநிலையை நிரந்தரமாய்ப் போக்க உதவும்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள் என்ன பிரச்சினையென்று கேட்பார்கள் தேர்தல் முடிந்த பின்னர் இப்பகுதிகளை நினைத்தும் பார்க்கமாட்டார்கள் என்று இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகள்இஅரசாங்கம் என்பனவற்றுக்கு அப்பால் எம துதமிழ்  சமூகம் எமது மக்களுக்காக காத்திரமான பணிகளை ஒருங்கிணைத்த முறையில்  செயற்படுத்து  எமது மக்களின் இருப்புக்கு மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.

வவுனியாவில் போராட்டம்;குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளைத் தங்கியிருந்தனர்.

”இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்.”,”சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்.”,”எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்.” போன்ற வாசகங்களுடன் ”சுமந்திரன் , சீறீதரனை எதிர்க்கிறோம்.” என்ற பதாகையும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

சோதனைக்களம் – பி.மாணிக்கவாசகம்

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலில் அது ஒரு புதுமுக அரசியல் கட்சி. பொதுத் தேர்தலில் முதற் தடவையாக இம்முறை களமிறங்கி உள்ளது. அந்தக் கட்சியின் தேர்தல் பிரவேசம் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இடம் பெற்றது. இரண்டாவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அது மிகுந்த நம்பிக்கையோடு குதித்திருந்தது.

உள்ளுராட்சித் தேர்தலில் மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் வேட்பாளர்களை அது மண் கௌவச் செய்திருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இதனால் படுதோல்வி ஏற்பட்டது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆட்சியில் உள்ள அரச கட்சிகளே வெற்றி பெறுவது வழமை. அந்த வழமைக்கு மாறாக பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் 40 வீத வாக்குகளை சுவீகரித்து அமோகமாக வெற்றி பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி 29 வீத வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 12 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றிருந்தன. தொடர்ந்து 2019 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கியிருந்த கோத்தாபாய ராஜபக்ஷ 69 லட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் 51 வீதமான வாக்குகளைப் பெறுபவரே வெற்றியாளராவார். ஆனால் பொதுஜன பெரமுன முதற் தடவையாகப் போட்டியிட்ட இந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 69 லட்ச வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் பொதுஜன பெரமுன தனது மூன்றாவது தேர்தலாக ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெறும் என்று அரசியல் ஆய்வளார்களும் நோக்கர்களும் ஆருடம் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் பொதுஜன பெரமுனவின் தலைவராகிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகோதரராகிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவும் இந்தத் தேர்தலில் தமது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வெற்றி இலக்கை அடைவதற்கான தேர்தல் முயற்சிகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியையும் குறிப்பாக சிங்கள பௌத்த மக்களின் திரட்சியான வாக்கு பலத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திவிட வேண்டும். அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும் என்றதோர் அரசியல் இலக்கை அடைவதற்காகவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.

ஐக்கியம் குலைந்த ஐக்கிய தேசிய கட்சி

நல்லாட்சி அரசாங்கம் என்ற மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 6 மாதங்கள் இருந்த நிலையிலேயே ஜனாதிபதிக்கு உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்தார். மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றி அரசாங்கத்தை முழுiயாக பொதுஜன பெரமுனவின் வசமாக்கிவிட வேண்டும் என்ற அவருடைய அரசியல் நோக்கம் வெளிப்படையாகி இருந்தது.

இதனால்தான் இந்தத் தேர்தல் பொதுஜன பெரமுன கட்சியை மையமாகக் கொண்டிருக்கின்றது என்று கணிக்க வேண்டியதாயிற்று. பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் காட்டில் நல்ல மழை பொழிகின்றது என்றே கூற வேண்டும். எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி அதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. வலிந்து ஏற்படுத்தி உள்ளது என்றுகூடக் கூறலாம்.

ஒரு தீர்க்கமான வெற்றி இலக்கை நோக்கி பொதுஜன பெரமுன இந்தத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்ற தருணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கியமாகவும் உறுதியாகவும் தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.cartoonwasanath சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்தலைமைப் பதவிக்கான அதிகாரப் போட்டியில் அந்தக் கட்சி சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசாவும் இந்தப் போட்டியில் விடாக்கண்டன் கொடாக்கண்டனாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.. இதனால் அந்தக் கட்சிக்குள் ஐக்கியம் குலைந்து போயுள்ளது. யாருடைய தலைமையை ஏற்றுச் செயற்படுவது என்பது தெரியாமல் கட்சியின் முக்கியஸ்தர்களும் முக்கிய உறுப்பினர்களும் குழும்பியுள்ளார்கள்.

அதேவேளை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷுக்குப் பதிலாக வேறு ஒருவரை ரணில் விக்கிரமசிங்க நியமனம் செய்ததையடுத்து, மலையகத் தொழிற்சங்க வட்டாரங்களிலும், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டாக இணைந்திருந்த மலையகம் மற்றும் தமிழ்க்கட்சிகள் மத்தியிலும் ஒரு குழப்ப நிலைமை உருவாகியுள்ளது.
இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயும் குழப்ப நிலைமை. பங்காளிக் கட்சிகளுடனான உறவிலும் ஒரு குழப்ப நிலைமை. இந்த அகப்புற குழப்ப நிலைமைகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி தனது பாரம்பரிய அரசியல் செல்வாக்கை இழந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று உருக்குலைந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

பொதுஜன பெரமுன கட்சி தலையெடுத்ததையடுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி உருக்குலைந்து போயுள்ளது. அதேபோன்ற நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஆளாகியிருப்பதனால் இந்தத் தேர்தலில் ஏறுமுக நிலையில் உள்ள பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக ஆளுமையுள்ளதோர் அரசியல் சக்திக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. இது ஆளும் கட்சிக்கு எதிரான வல்லமையுள்ளதோர் எதிர்க்கட்சிக்கான வெற்றிடமாகக் கூட கருத முடியும்.

வளர்முக போக்கில் பிரகாசமா…?

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட தலைமப்பதவிக்கான போட்டியின் விளைவாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாசாவுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் காண்பபடுவதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் இந்தத் தேரதலில் அவருடைய தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி ஆளும் கட்சியகிய அதிகார பலத்தைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் அரசியல் செல்வாக்கு அலையில் எந்த அளவுக்கு ஈடுகொடுப்பார், எந்த அளவுக்கு ஈடு கொடுக்க முடியும் என்பது தெரியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த சஜித் பிரேமதாசாவின் தந்தை பிரேமதாசா ஐக்கிய தேசிய கட்சியின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார். ஒரு மேதின நாளில் ஆமர் வீதி பொலிஸ் நிலையச் சந்தியில் இடம்பெற்ற தற்கொடை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவருடைய மரணம்கூட சிங்கள மக்கள் மத்தியில் அவர் மீதான அனுதாப அலையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் அவருடைய புதல்வராகிய சஜித் பிரேமதாசா சிங்கள மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒருவராகத் திகழ்கின்றார்.

எனினும் அவர் தன்னுடைய அரசியல் செயற்பாடுகளின் மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கின்றாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து அவருக்கு வாக்களித்திருந்த போதிலும், அந்த மக்களின் மனங்களில் நம்பிக்கைக்குரிய ஓர் அரசியல் தலைவராக இடம்பிடிக்க அவர் தவறிவிட்டார். சிங்கள பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தி மத ரீதியாகவும் இன ரீதியாகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்துச் செயற்படுகின்ற ராஜபக்ஷக்களின் முன்னால் அவர் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கூறுவதற்கில்லை.sajith premadasa e1581381441757 சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்
அதேவேளை, நாட்டின் மூன்றாவது அரசியல் சகிதியாகத் திகழ்கின்ற ஜேவிபியின் வாக்குவங்கியையும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தேர்தலில் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது.

மறுபுறத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பலமிழந்திருக்கின்றது. தலைமைத்துவப் போட்டி காரணமாக ஐக்கிய தேசிய கட்சியும் வலுவிழந்து போயிருக்கின்றது. பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற ஒரு தருணத்தில் நாட்டின் பாரம்பரிய வரலாற்று பெருமையைக் கொண்டிருந்த இரண்டு பெரும் தேசிய கட்சிகளும் இவ்வாறு செயல் வல்லமை இழந்திருப்பது பொதுஜன பெரமுன என்ற வளர்முக போக்கில் திகழ்கின்ற பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்.

ஒரு பொதுநிலை நோக்கில் பொதுஜன பெரமுன தேர்தல்களை வெற்றிகரமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் எதிர்கட்சிகளும் பெரிய சவாலாகக் காணப்படவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்குகின்ற தருணத்தில் அரசாங்கத்தினதும், அரச தரப்பினரதும் சில நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் ஒரு சுமுகமான தேர்தல் வெற்றிக்கு இடையூறு விளைவிக்கக் கூடியவையாகவே தென்படுகின்றன.

பிடிவாதமும் விளைவும்

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்கி ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே அடங்கி இருக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு நாடளாவிய ரீதியில் இயல்பு வாழ்க்கையை முடக்கிய நிலைமையை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ ஓர் அவசர நிலைமையாகக்  கருதுவதற்கு மறுத்துவிட்டார்.

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திகதி குறிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தலை நடத்த முடியாதவாறு கொரோனா நோயிடர் தடையேற்படுத்திவிட்டது. இந்த வைரஸ் நோய்த் தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காக முழு நாட்டையும் முடக்கியதனால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையும், தவிர்க்க முடியாத அவசியமும் ஏற்பட்டிருந்தன. ஆனால் நாடாளுமன்றத்தைத் திரும்பவும் கூட்ட முடியாது என்று திட்டவட்டமாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அதில் பிடிவாதமாகவும் இருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பது சட்ட ரீதியான தேர்தல் கால நிபந்தனை. ஆனால் கொரோனா நோயிடர் காரணமாக இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. இந்த நிலைமை அரசியலமைப்புச் சட்ட ரீதியான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டது.estate7 சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்ஆனாலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நிலைமைகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை. அவருடைய பிடிவாதம் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்த நிலையில் அடிப்படை உரிமை மீறல்களாகச் சுட்டிக்காட்டி இந்த நிலைமைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சிகளும் ஜனநாயகவாதிகளும் உச்ச நீதிமன்றத்தை நாடிய போதிலும், அவர்கள் எதிர்பார்த்தவாறு நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமையவில்லை. நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதியின் கையை ஓங்கச் செய்வதற்கே வழிவகுத்துவிட்டது.

ஆனாலும் நாட்டின் அதி உச்ச சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியான செயல் ஒழுங்கில் ஓர் இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்பதை நாட்டு மக்கள் ஓரளவுக்காவது உணர்ந்து கொண்டார்கள். அறிந்து கொண்டார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒழுக வேண்டிய கடப்பாடு அத்துடன் முடிந்துவிடவில்லை. அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜுன் 2 ஆம் திகதி தான் உருவாக்கியிருந்த இரண்டு ஜனாதிபதி செயலணிகளைப் பற்றிய அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிட்டிருந்தார்.

கோரிக்கைகள்

இவற்றில் கிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து அவற்றைப் பராமரிப்பதற்கான செயலணி ஒன்று. பௌத்த பிக்குகளையும், முக்கிய திணைக்களங்களின் சிங்கள பௌத்த போக்கைக் கொண்ட சிங்கள அதிகாரிகளையும் இந்த செயலணி உறுப்பினர்களாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் இது செயற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான விசேட செயலணி என்பது மற்றொன்று. இந்த செயலணியில் முப்படைத் தளபதிகள், புலனாய்வு நிறுவனங்களின் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, இந்தச் செயலணியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குவதற்காக நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறிய வகையிலேயே இந்த இரண்டு செயலணிகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே இந்த செயலணிகளை உருவாக்கியதன் மூலம் அரசு அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டிருக்கின்றது என சட்டத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்ற தருணத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த செயலணிகளை உருவாக்கி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகிய சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை நிறைவேற்றதிகாரம் தன் கையில் எடுத்துக் கொண்ட அத்துமீறிய செயற்பாடாகும் என்று அந்த நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

அதேவேளை, தனிமனித நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த செயலணிகளை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார் என்றும், அது ஜனநாயக நடைமுறைகளையும் செயல் ஒழுங்கையும் மீறிய செயற்பாடு என்று ஜனநாயகத்துக்கான செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகிய சஜித் பிரேமதாசா, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கத்தைக் கண்டித்திருக்கின்றார்கள். அந்தச் செயற்பாடு ஜனநாயக வழிமுறைகளை மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி கண்டித்திருக்கின்றார்கள்.

நாட்டின் புத்திஜீவிகளும் இந்த செயலணிகளின் உருவாக்கத்தைக் கண்டித்துள்ளதுடன், அதற்கான உத்தரவை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சோதனைக்களமா…..?

தேர்தல் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோன்று தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் பண்பான ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கென்றே ஒரு விசேட செயலணியை உருவாக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தேவையும் ஏற்படவில்லை என்று துறைசார்ந்த பலரும் பல்வேறு அமைப்புக்களின் ஊடாக வலியுறுத்தி உள்ளார்கள்.

வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் தென்பகுதி என்ற பிரதேச ரீதியாக அல்லாமல் நாடெங்கிலும் உள்ளவர்களினால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முறையற்றதாகவும் காலத்திற்கு அவசியமில்லாததாகவும் நோக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் மிகவும் முக்கிய விடயங்களாக தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளினாலும், அவற்றின் வேட்பாளர்களினாலும் கையாளப்படும். பிரசாரம் செய்யப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

சிங்கள மக்களையும் பௌத்தத்தையும் முதன்மைப்படுத்தி இனவாத, மதவாத ரீதியான பிரசாரத்தில் சிங்கள மக்களைத் தம் வசப்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு ஜனநாயக விரோத நடவடிக்கை என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேர்தல் அவதானிகள் கருதுகின்றனர்.ww சோதனைக்களம் - பி.மாணிக்கவாசகம்யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய ராஜபக்ஷக்களின் அரசியல் வியூகம் 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத வகையில் அவர்கள் அப்போது வீழ்ச்சியுற்றார்கள். அந்த வீழ்ச்சியில் இருந்து மீள் எழுந்துள்ள அவர்கள் இப்போது சிங்கள பௌத்தத்தையும், பௌத்த தேசியத்தையும் முதன்மைப்படுத்தி உள்ளனர். சிங்கள பௌத்தத்திற்கே முதலிடம், முன்னுரிமை என்ற கோஷத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த மக்களை மட்டுமே இந்த நாட்டின் அதிகாரபூர்வமான, அதிகாரம் வாய்ந்த குடிமக்கள் என்ற நிலைப்பாட்டை உருவாக்குகின்ற ஓர் அரசியல் மாயையை உருவாக்கி இருக்கின்றார்கள்.

இந்த அரசியல் மாயையில் சிங்கள பௌத்த மக்கள் சிக்கியுள்ள அதேவேளை, ஏனைய மதங்களை, குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் வேறு வேறு பிரிவுகளைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் இந்த பௌத்த மத ரீதியான அரசியல் போக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மத ரீதியான பிளவு சிங்கள மக்களை இருகூராகப் பிரிவடையச் செய்யவும் கூடும். இந்தப் பிரிவு ராஜபக்ஷக்களுக்கு தேர்தல் வெற்றிக்கான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியானாலும், பொதுஜன பெரமுனவை மையமாகக் கொண்டுள்ள இந்தத் தேர்தல் பல தரப்பினருக்கும் பல நிலைமைகளில் ஓர் அரசியல் சோதனைக்களமாகவே அமையும் என்பதை ஊகித்து உணர முடிகின்றது.

நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவோம்

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமக்கு அனைத்தையும் கூறுவதற்கான சுதந்திரத்தை தேர்தல் அலுவலகம் தந்துள்ளது.எதையும் பேசலாம் என்கின்றார் கருணா.

ஆனால் அப்படி யாருக்கும் அனுமதி இல்லை. இந்த நாட்டில் 3000இராணுவ வீரர்களை கொலை கூறும் கருணாவை நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் குறிப்பிட்டார்

பொறுப்பற்ற பதிலை கூறிவரும் பேரினவாத அரசுகள்-சிவாஜி லிங்கம்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்; சம்பந்தமாக சாட்சிகள் உள்ளனர் எனினும் சிங்களப் பேரினவாத அரசுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாக கூறி வருகின்றன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு இருக்கின்ற சாட்சிகள் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தங்களது சாட்சியங்களை முன்வைத்து உள்ளன. எனினும் சிங்களப் பேரினவாத அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
அதிலும் மஹிந்த ராஜபக்சவாஷ ரணில் விக்கிரமசிங்க இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேனவை இருக்கட்டும் விமல் வீரவன்ச இருக்கட்டும் அனைவரும் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி வருகின்றனர் இவர்களின் கருத்து கண்டனத்துக்குரியதாகும்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சாட்சிகள் இருக்கின்றன அதேபோல இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட நாம் வடக்கு மாகாணசபையில் இன அழிப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தோம். இதனாலேயே நாம் இன்றுவரை சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம் எனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் மஹிந்த சந்திப்பு

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில்  மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

 தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த ஒரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளவில்லை- ஸ்ரீ காந்தா

தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த ஒரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளவில்லை. இம்முறை தேர்தல் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைதல் வேண்டும். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கடசியின் தலைவர் ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நேத்ரா விடுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்: முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.  மீன் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சி இம்முறை கூட்டமைப்பிற்கு சவாலாகவே உருவாகி உள்ளது.இத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானதாகும்.

முப்பது வருடங்களாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழர்கள் இம்முறையாவது தீர்வுகளைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமாக மாற்றுவதற்கு திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை, நியாயமான தீர்வு ஒன்றையே வேண்டி நிற்கிறோம்.

 தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த ஒரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளவில்லை. இம்முறை தேர்தல் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைதல் வேண்டும்.
இதுவே எமது எதிர்பார்ப்பு.  ஆனால் தமிம் கூட்டமைப்போ முட்டுக் கொடுக்கும் வேலைத் திட்டம் பற்றியே பேசி வருகிறது.

ரணில் தரப்பு அரசுக்கு முட்டுக்கு கொடுத்தனர். எதிர்க் கட்சியாக இருந்து எதையும் சாதிக்காது மாயாஜாலம் காட்டினர். எனவே இவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாடுகளிலிருந்து 15 பேர் வருகின்றார்கள்

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாடுகளை சேர்ந்த 15 கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாக “பவ்ரல்” அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள பல நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அழைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் “பவ்ரல்’ தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ள “பவ்ரல்” அமைப்பு இலங்கையின் சுகாதார வழிகாட்டுதல்களின் படி இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

வடக்கு-கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்; சிறீலங்கா இராணுவத் தளபதி

வடக்கு-கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

“வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப் படுத்தவேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குப் பொற்காலமாக இருக்கும்.

கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகிறது. எனினும் நாடு இராணுவமயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற – தகுதியான இராணுவ அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது?

இராணுவத்தை அதிகமாகப் பயன்படுத்தி நாட்டின் சேவையைப் பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார். நாட்டை இராணுவ மயமாக்கவேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கவும் இல்லை, இராணுவத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும் நினைக்கமாட்டார்” என்றார்.