தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

தமிழர் தாயகப்பகுதிகள்  ஆயுத போராட்டம்   மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றது. சர்வதே சமூகம் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளை மீளமைப்பதற்கு பல்லாயிரம் கோடிகளை வழங்கியது.ஆனால் அவை தமிழர் பகுதிக்கு சென்றடைந்ததா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தமது இருப்பை தக்கவைக்க,இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிபெற,தமது உரிமைகளை நிலைநிறுத்த தமிழர்கள் பல்வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டு இன்றும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருக்கிறார்கள். அதேவேளை அவர்களின் வாழ்வில் சோதனைகள் இவேதனைகள்,துன்பங்கள் இன்னும் என்பன தொடர்கதையாகவே உள்ளன.

குறிப்பாக விடுதலைப்போராட்டத்தில் எல்லைக் கிராமங்கள் மற்றும்  காடுகள் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் அர்ப்பணிப்பினை நாம் மறந்துவாழும் சமூகமாக  மாறிவிட்டோமா என என்னத்த தோன்றுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை,மினுமினுத்தவெளி,அக்குரானை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய முறுத்தானை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் கிட்டத்தட்ட வெளியுலக தொடரப்பட்ட கைவிடப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது.

மட்டக்களப்பின் நகரின் வடக்கே திருகோணமலை வீதியின் சுமார் 28 கிலோமீற்றர் தொலைவில் கிரான் பிரதேசம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்தின் மேற்குப்புறத்திலே சுமார் 41கிலோமீற்றர் தொலைவில் அக்குறாணை என்னும் கிராமம் உள்ளன.IMG 4436  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில் ஒன்றான கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவும் ஒன்றாகும்.இதில் 18 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளது. எனினும் இப்பிரிவில் 11 பிரதேச செயலகப்பிரிவு கடந்த கால யுத்தத்தினாலும் கடும் வரட்சியினாலும் பாதிக்கப்பட்டுவரும் கிராம சேவகர் பிரிவுகளாகும்.

இக்கிராமத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் பூர்வடி மக்களில் ஒருசாராரான  வேடுவர் பரம்பரையினை சேர்ந்தவர்கள்.

வேட்டையாடுதல், தேன் சேகரித்தல், குளங்களில் மீன் பிடித்தல், விறகு வெட்டுதல்,வயல் கூலி, காவல் வேலைகளுக்குச் செல்லல்,பருவகாலச் சேனைச்செய்கை என்பனவே இவர்களின் பிரதானதொழில்களாகும்.

இந்த ஆதி தமிழ் சமூகம் போராடடத்திற்கு பல்வேறு வழிகளில் துணைநின்றது.விளைவாக படுகொலைகளை எதிர்கொண்டது.சிறிய தொருசமூகமாக இருந்த போதிலும் அதிகளவான மாவீரர்களை இந்த மண்ணுக்கு அது தந்தது.

இக்கிராமத்தினை பொறுத்தவரையில் இதுவரையில் பொதுப் போக்குவரத்தினை இப்பகுதி மக்கள் கண்டதில்லை. இதுவரையில் சரியான குடிநீரை பெற்றதில்லை,மாணவர்கள் முறையான கல்வியை இதுவரையில் பெற்றதில்லை.இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சமூகம் எதிர்கொண்டுள்ளது.

வறுமை,கல்வியறிவின்மை,மருத்துவ வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாமை,குறைவான குடியிருப்பு வசதிகள் என அந்த மக்களின் துன்பநிலை தொடர்ந்து செல்லும்.IMG 0807  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இக்கிராமத்தில் 267 குடும்பங்களும் 860ற்கு மேற்பட்ட சனத்தொகையும் காணப்படுகின்றது.அதே வேளை கிராம சேவகர் பிரிவில் இக்கிராமத்தை உள்ளடக்கியதாக 02 பாடசாலைகள் காணப்படுகின்றன.

அதில் ஒன்றுதான் அக்குறானை பாரதி வித்தியாலயம். இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தரம் 1 தொடக்கம் தரம் 8 வரைக்கும் 98 மாணவர்கள் பாடசாலையில் கல்வி பயிலுகின்றனர்.அதே சமயம் இப்பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 05 ஆகும்.

இப்பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.ஆனால் இவர்கள் தரம் 08மட்டுமே கற்கமுடியும்.அந்த கல்வியுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பூர்த்தியாவதாக அங்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த இடைவிலகல் காரணமாகஇபெற்றார் பெண்பிள்ளைகளுக்கு    இளவயதில் திருமணம் செய்துவைக்கும் சூழ்நிலை அதிகளவில் காணப்படுகின்றது. அத்துடன் ஆண்பிள்ளைகள்  சிறுவயதிலேயே வேட்டைக்கும் காவலுக்கும் அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலையும்  காணப்படுகின்றதுIMG 0742  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இப்பகுதி மாணவர்கள் சிறந்த உடல் வலிமையும் மனவலிமையும் கொண்டவர்களாக காணப்படுவதாகவும் அவர்கள் சிறந்த முறையில் வளப்படுத்தப்படும்போது விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதிக்கும் நிலையேற்படும் எனவும் அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது இங்கு சாதாரண தரம் வரையிலாவது கற்பிப்பதற்காக வளங்கள் ஏற்படுத்தப்படும்போது கல்வி ரீதியான மாற்றம் ஒன்றை கொண்டுவரமுடியும் எனவும் இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள பாடசாலைகள் மிகுந்த வளப்பற்றாக்குறையுடன் இயங்குவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதியானது தமிழ் மக்களின் எல்லைப்பகுதியாகவும் காணப்படுவதனால் இப்பகுதியினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.இங்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரசன்னம் என்பது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்துள்ளது.போக்குவரத்து பாதைகள்  மிகவும் மோசமான உள்ளமையால் அரசசார்பற்ற நிறுவனங்கள் இன்று சென்றுவருவது மிகவும் குறைவாகவே உள்ளது.

இப்பகுதியில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை மக்கள் எதிர் நோக்கவருகின்றனர்.அரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக குடிநீர் விநியோக திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டபோதிலும் சில வருடங்களில் நீர் பம்பி பழுதடைந்த காரணத்தினால் நீர்விநியோக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனை செய்வதற்கு யாரும் முன்வராத நிலையில் மக்கள் கடந்த சில வருடங்களாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் கட்டு பகுதியினூடாக ஆற்றங்கரைக்கு சென்று நீரைப் பெற்றுக்கொள்ளவேண்டி துர்ப்பாக்கிய நிலை இக்கிராமத்தில் காணப்படுகின்றது.சிலவேளைகளில் யானையின் அச்சுறுத்தலும் உள்ளதாகவும் அண்மையில் கூட யானையினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.IMG 0035  தமிழரின் பூர்வீக குடிகள்,குடிநீருக்கே அல்லல்படும் அவலம்-வ.கிருஸ்ணா

இப்பிரதேசத்தில் இதுவரையில் ஒரு வைத்தியசாலையில்லை. நோய்வாய்ப்படும் போது சுமார் நூறு கிலோமீற்றர் பயணம் செய்து வாழைச்சேனைக்கு வரவேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.அதிலும் இரவில் நோய்வாய்ப்படும் ஒருவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறு பலதபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களின் வறுமைநிலையை பயன்படுத்தி அவர்களின் உழைப்பை  சுரண்டும் நடவடிக்கைகள் வியாபாரிகள்இமுதலாளிகளால் மேற்கொள்ளப்படுவதும் இங்கு வெளிப்படையது.

இந்த நிலமையைப் போக்க,இந்த மக்களை கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்தும் சரியான திட்டங்கள் விரைந்து அங்கு முன்னெடுக்கப்படுவது காலத்தின் கட்டாய தேவை.இப்படிப்பட்ட நடவடிக்கைகளே இந்த மக்களின் மோசமான வறுமைநிலையை நிரந்தரமாய்ப் போக்க உதவும்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள் என்ன பிரச்சினையென்று கேட்பார்கள் தேர்தல் முடிந்த பின்னர் இப்பகுதிகளை நினைத்தும் பார்க்கமாட்டார்கள் என்று இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகள்இஅரசாங்கம் என்பனவற்றுக்கு அப்பால் எம துதமிழ்  சமூகம் எமது மக்களுக்காக காத்திரமான பணிகளை ஒருங்கிணைத்த முறையில்  செயற்படுத்து  எமது மக்களின் இருப்புக்கு மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.