பொறுப்பற்ற பதிலை கூறிவரும் பேரினவாத அரசுகள்-சிவாஜி லிங்கம்

177 Views
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்; சம்பந்தமாக சாட்சிகள் உள்ளனர் எனினும் சிங்களப் பேரினவாத அரசுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாக கூறி வருகின்றன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு இருக்கின்ற சாட்சிகள் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தங்களது சாட்சியங்களை முன்வைத்து உள்ளன. எனினும் சிங்களப் பேரினவாத அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாக கூறி வருகின்றன.
அதிலும் மஹிந்த ராஜபக்சவாஷ ரணில் விக்கிரமசிங்க இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேனவை இருக்கட்டும் விமல் வீரவன்ச இருக்கட்டும் அனைவரும் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி வருகின்றனர் இவர்களின் கருத்து கண்டனத்துக்குரியதாகும்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சாட்சிகள் இருக்கின்றன அதேபோல இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட நாம் வடக்கு மாகாணசபையில் இன அழிப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தோம். இதனாலேயே நாம் இன்றுவரை சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம் எனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Leave a Reply