Home Blog Page 135

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி எதிர்வரும் 26 ஆரம்பம்!

யாழ்ப்பாணம்- அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி நடவடிக்கைகளில் 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

இது உள்நாட்டுப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகி வந்த உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க விடயமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா;

யாழ். அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சார்த்த அகழ்விலிருந்து 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார். இந்த மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அகழ்வுப்பணியை மேலும் 45 நாட்களுக்கு நீடித்து, நீதிவான் ஆ.ஆனந்தராஜாவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். நீதிவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26 ஆம் திகதியை நீதிவான் அனுமதித்துள்ளார்.

குறித்த, உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் எனறார்.

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம்: இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிப்பு

யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு  நேற்று (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர் ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம்.

1956ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன்.

மக்கள் தவறாக முடிவெடுப்பதில். என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம்.

ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறோம்.

சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம்.

எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை.

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தய் கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தீயை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை.

தமிழா மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விக்கிறோம் எனத் தெரிவித்தார்.

சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டாதே – யாழில் போராட்டம்

”இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என, காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தபடுவதால் சூழல் மாசடைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகவும், சமாதி கோவில், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியவை அமைந்துள்ள புண்ணிய பூமியில் கழிவுகள் கொட்டப்பட்டு, சேகரிக்கப்படும் இடமாக காணப்படுவதால், குறித்த கழிவகற்றல் நிலையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், இது வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைனுடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை – பூட்டீன்

ரஸ்யாவின் அணுக்குண்டுகளை வீசும் விமானங்களின் வான் படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யாவினதும், அதன் கூட்டணி நாடான பெலாருஸினதும் தலைவர்கள் வடகொரியா மற்றும் சீனாவுக்கு அவசரமாக சென்றுள் ளது எதிர்வரும் நாட்களில் மிகப்பெரும் அனர்த்தங்கள் நிகழவுள் ளதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவின் பாதுகாப்புச் சபையின் தலைவர் Sergei Shoigu  வடகொரியாவிற்கு புதன்
கிழமை(4) அவசரமாக சென்றுள்ளதுடன் வடகொரிய அதிபருடன் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளார்.
அதேசமயம் பெலாரூஸின் அதிபர் Aleksandr Lukashenko சீனாவுக்கு புதன்கிழமை(4) அவசர
மாக சென்று சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இரு தலைவர்களும் தற்போது ஏற்
பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகின் றது.
இதனிடையே தலிபான்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ரஸ்யா முடிவெடுத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தா னின் தூதரகம் ஒன்றை ரஸ்யாவில் திறப்பதற்கும், சங்காய் கூட்டமைப்பில் தலிபான் களை இணைத் துக்கொள்ளவும் ரஸ்யா திட்ட மிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கடந்த முதலாம் நாள் ரஸ்யாவின் நான்கு வான்படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட ஆழஊடுருவும் தாக்குதலில் ரஸ்யாவின் மிகவும் நவீனமானதும், விலை உயர்ந்ததுமான ஏ50 ரக விமானங்கள் அழிக் கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தபோதும் தற்போது அது தவறானது என தெரியவந்துள்ளது.
செய்மதி புகைப்படங்களின் ஆதரங்களின் அடிப்படையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. தாக்குதலுக்கு பின்னர் வெளியாகிய செய்மதிப் படங்களில் ஏ50 ரக விமானங்கள் சேதங்கள் எதுவுமின்றி உள்ளது தெளிவாக காணப்படுகின்றது. இந்த தாக்குதலில் ரஸ்யா வின் 4 ரக TU-95 விமானங்களும், ஒரு TU-22 ரக விமானமும், ஒரு சரக்கு விமானமும் அழி வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையயே பயங்கரவாத நடவடிக் கைக்கு மாறிய உக்ரைனுடன் தான் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை என ரஸ்ய அதிபர் விளடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.ரஸ்யாவின் பொதுமக்கள் வாழும் இடங்களில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் இந்த முடிவை அவர் எடுத்
துள்ளார். இந்த நிலையில் யார் பேசுவார்கள், பயங்கரவாதிகளுடன் யார் பேச்சுக்களை நடத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற 10,000 இராணுவத்தினரை காவல்துறையில் இணைக்க அரசாங்கம் முடிவு

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, காவல்துறையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நபர்களை ஐந்து ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான முன்மொழிவு அமைச்சரவைப் பத்திரம் இன்று (ஜூன் 9) நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-02) – விதுரன் 

இந்தியா, இலங்கைக்கு அயலில் உள்ள நாடாக இருந்தாலும், தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஒருபோதும் பாராட்டியதில்லை. பாராட்டப் போவதுமில்லை.
ஜே.ஆர் முதல் அநுர வரையில் இந்திய எதிர்ப்பு வாதத்தைக் கொண்டிருப்பவர்கள் தான். ஆனால் தங்களின் ஆட்சி அதிகாரங்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காக ‘இந்தியாவுக்கு இசை பவர்களாக’ காட்டிக் கொள்வார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் விடு தலை இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கியமை,  படைகளை அனுப்பியமை, ஒப்பந்தங்கள் செய்தமை பல இராஜதந்திர வழிக ளைக் கையாண்டு இலங்கையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களை தமது கட்டுக்குள் வைத்திருப்பதற்கே தொடர்ச்சியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
அதில் அண்மைக்காலமாக இந்தியா கடைப்பிடித்துவரும் ‘அயல் நாடுகளுக்கு முன் னுரிமை’ என்ற கொள்கையின் கீழ் வரவு செலவுத் திட்டத்திலேயே நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றமை முக்கியமானதொரு விடயம்.
பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளை மேற்படி கொள்கை மூலமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் இந்தியாவின் இப்புதிய கொள்கையின் பிரதான நோக்கமாக உள்ளது.
அந்தவகையில், இலங்கை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் இந்தியாவுக்கு மேற்படி கொள்கை மூலமாக தற்போதைய அநுர அரசாங்கத்துடன் ஊடாட் டங்களைச் செய்வதற்கு வாய்ப்பளித்திருக்கின்றது.
அத்துடன் கொரோனா நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி போராட்ட காலத்தில் 4பில்லியன் டொலர்கள் வரையில் நீடித்த கடன்வசதியை வழங்கியமை, சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு நீடித்த கடன்வசதி கிடைப்பதற்கு சாட்சியாளராக செயற்பட்டமை உள்ளிட்டவை இலங்கை அரசாங்கத்தின் மீதான தனது ‘பிடியை’ நீடிப்பதற்கு வழிசமைத்துள்ளது.
இத்தகைய பின்னணியில், இந்திய எதிர்ப்புவாதத்தையே தமது அரசியல் மூலதனங்க ளில் ஒன்றாகக் கொண்டிருந்த அநுர அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட ஏழு உடன்பாடுகளை பிரதமர் மோடியின் ஏப்ரல் மாத விஜயத்தின் போது மேற்கொள்ளுமளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றது.
பதிலுக்கு இந்தியாவும் மூன்றரை தசாப்தங் களாக வலியுறுத்தி வந்த இந்திய-இங்கை ஒப்பந்த அமுலாக்கம், மாகாண சபைகளுக்கான தேர்தல், உள்ளிட்ட விடயங்களை கைவிட்டுள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர கூட்டறிக்கையில் குறித்த விடயம் காணப்படாமை அதற்கான மிகக் சிறந்த உதாரணமாகும்.
இதனைவிடவும், இந்தியா, ‘இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்து ழைப்பு’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழாக இராணு வம், பொலிஸ், கடற்படை, என்று பெரும் எண்ணிக்கையானவர்களை வருடாந்தம் இந்தியா
வின் பல பாகங்களுக்கும் அழைத்து வதிவிடப் பயிற்சி என்ற பெயரில் மகிழ்ச்சிப் படுத்துகிறது.
அதேபோன்று பௌத்த தேரர்களுக்கும் புத்தகாய உள்ளிட்ட பௌத்த மையங்களை நோக்கிய விஜயங்களுக்கு இலவசமான வாய்ப்புக் களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றது. பௌத்த தேரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்லவர்கள் என்பதாலும் இந்தியாவுக்கு எதிரான நிலைமைகளை கொண்டிருப்பவர்கள் என்பதாலும் அவர்களை கையாள்வதற்கான வழி யாக அதனைக் கருதுகின்றது.
இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் இறுதியாக,
• இந்தியா – இலங்கைக்கு இடையிலான எரி சக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்து ணர்வு உடன்படிக்கை,
• இந்தியா – இலங்கைக்கு இடையில் டிஜிட் டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை,
• இந்தியா – இலங்கை – ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்து ணர்வு உடன்படிக்கை,
• இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுக ளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்து
ணர்வு உடன்படிக்கை, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன் படிக்கை,
• இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடு களுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை,
• இந்தியாவின் மருத்தக நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய மருந்தாக்கல் கூட்டு தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகியன கையொப்ப மிடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஒப்பந்தங்களை அநுரஅரசாங்கம் எவ்வளவு தூரம் ஈடுபாட்டையும், ஒத்துழைப்புக் களையும் கொண்டிருக்கின்றது என்பதை கவனத் தில் கொள்வது அதன் போக்கையும், இந்தியாவின் இராஜதந்திர ‘பிடி’ தளர்ந்து போவதற்கான ஏது நிலைகளையும் வெளிப்படுத்துகின்றது.
இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங் கள் இதுவரையில் வெளிப்படுத்தப் படாத நிலையில் அவற்றுக்கான பாராளுமன்ற அனு மதி பெறப்படவில்லை. ஆகவே அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகக் கடுமையான சிக்கல்கள் உள்ளன.
அடுத்து, முன்னிலை சோஷலிசக் கட்சி, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில, சரத்வீரசேகர, திலித் ஜயவீர போன்ற சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள தேசியவாதத்தையும் நாட்டின் இறைமையையும் மையப்படுத்திய பிரசாரங்களை ஆரம்பித்து விட்டன.
உதாரணமாக கூறுவதாக இருந்தால் திருகோணமலையை மையப்படுத்திய இந்திய பொருளாதார வலயத்துக்கான காணிகளை ஒதுக்குவதற்காக முத்துநகர் கப்பற்துறை உள்ளிட்ட காணிகளை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை துறைமுக அதிகாரசபை விடுத்துள்ள நிலையில் தீவிரமான எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே, மன்னார், பூநகரியில் 484 மெகாவாற் காற்றாலை மின்னுற்பத்திக்கு சுற்றுச் சூழலில் கரிசனை கொண்ட அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் மக்களிடத்தில் காணப்பட்ட எதிர்ப்பினை இலாவகமாக பயன்படுத்தி அநுர அரசாங்கம் அந்த திட்டத்திலிருந்து அதானி குழுமத்தை வெளியேறுவதற்கு வழிவகுத்திருந்தது.
அவ்வாறு தான், பொருளாதார வல யத்தை ஸ்தாபிப்பதை இழுத்தடிப்பதற்கு தற் போதைய எதிர்ப்புக்களை அநுர அரசாங்கம் நிச்சயமாக பயன்படுத்தும். ஏனென்றால் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ரொஷான் அக்மீம போன்றவர்கள் கப்பற்துறை, முத்துநகர் மக்களின் காணி உரித்தை மையப்படுத்தி எதிர்ப்பு அரசியல் செய்தே ஆட்சிக்கு வந்திருக் கின்றார்கள்.
ஆகவே, ‘இந்திய பொருளாதார வலயம்’ முன்னெடுப்பதற்கு இடமளிப்பார்களா என்பது பெருங்கேள்விக்குரிய விடயமாகும். இந்தியா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தால் மட்டுமே ‘கடந்த ஆட்சியில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்’ என்று கூறி ஒதுங்கி நிற்பதற்கு வாய்ப்புக் கள் உள்ளன.
இதேநேரம், அண்மையில் இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், இந்திய முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தது.
அக்குழுவினரின் பயணம் இலங்கையில் உள்ள கனிம வளங்களை இலக்கு வைத்திருந்தது. அதனடிப்படையில், புல்மோட்டையில், 7.5மில்லி யன் மெற்றிக் தொன் இல்மனைட், ரூட்டைல், சிர்கான் போன்ற கனிமங்கள் இருக் கின்றன.
புத்தளத்தில், 45,000  மெற்றிக் தொன் கிராபைட் மற்றும் 60 மில்லியன் மெற்றிக் தொன் அபாடைட் கனிமங்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. ஏற்கனவே மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான முயற்சிகள் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘அவுஸ்ரேலியன் சாண்ட் மைன்ஸ்’ என்ற நிறுவத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த நிறுவனம் கனிய மணல் அகழ்வுக்கு இன்றளவும் கூட வெவ்வேறு நுட்பங்களை பயன்படுத்தி முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதேநேரம், புல்மோட்டைக்கு வடக்காக, முல்லைத்தீவுக்கு தெற்காக தெற்காக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகியபிரதேசங்களில் மணல் அகழ் விற்கான ஆரம்பகட்ட பணிகளை 2006ஆம் ஆண்டு முதல் கனிய வள கூட்டுத்தாபனம் முன்னெடுத் திருந்தது.
இந்த முயற்சிகள் மக்கள் போராட்டங்களால் தடுக்கப்பட்ட நிலையில் தான் இந்தப் பகுதிகளை தற்போது இந்தியா குறிவைத்து நகருகின்றது. இந்த நகர்வின் அங்கமாகத் தான் கடந்தவாரம் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங் கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தார்.
அங்கு சென்ற அவர்,  சந்திரன் நகர் மாதிரி வீட்டுத்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தமையும், கடற்றொழிலாளர்களுக்கான உறைகுளிரூட்டிகளை வழங்கியமையும் இங்கே மீள நினைவுகூருகின்றபோது ‘மக்களுடன் மக்கள்’ இராஜதந்திரத்தின் ஊடாக கனிய வளத்தைப் பெறுவதற்க இந்தியா முயற்சிப்பதை உணர முடிகின்றது.
மேலும் அண்மைக்கால இந்தியாவின் இராஜதந்திரச் செயற்பாடுகள், இலங்கையில் எந்த அரசாங்கம் இருந்தாலும் அந்த அரசாங்கம் முழுமை யாக சீனா பக்கம் சார்ந்துவிடாது கூட்டாண்மையை தொடர்வதும், இலங்கையின் வளங்கள் மற்றும் வருமானங்கள் உள்ளிட்ட தங்களின் நலன்களில் உறுதியாக இருப்பதும் மிகத் தெளிவாகின்றது.
அதுமட்டுமன்றி மேற்படி விடயங்களை முன்னகர்த்துவதாக இருந்தால் தேசிய இனப் பிரச்சினை, இந்திய-இலங்கை ஒப்பந்தம், 13ஆம் திருத்தம் போன்ற ‘இலங்கை அரசுகளுக்கு ஒவ்வாத விடயங்களை’ கைவிடவும் புதுடில்லி தயங்கவில்லை.
அதனை பிரதமர் மோடியின் இலங்கைக்கான இறுதி விஜயத்தின் போது பார்த்துவிட்டோ மல்லவா…..! சீனா, ஐரோப்பாவின் நகர்வுகளை அடுத்தவாரம் பார்க்கலாம்
தொடரும்…..

பிறிக்ஸ் அமைப்பில் இருந்து வெளியேறுகின்றதா இந்தியா

மேற்குலக நாடுகளின் ஜி7 அமைப்புக்கு நிகராக ரஸ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக பிறிக்ஸ் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பு பல்துருவ உலக ஒழுங்கின் மையப்புள்ளியாக உள்ள நிலையில் இந்தியா அதில் இருந்து வெளியேறுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையிலான நெருக்கம் மற்றும் பாகிஸ்தானை இந்த அமைப்புக்குள் கொண்டு வருவதற்கு சீனா முனைப்பாக நிற்பதே இந்தியாவின் முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின் றது.
அண்மையில் இடம்பெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் சீனா நேரிடையாக பாகிஸ்தானுக்கு உதவியிருந்தது. அதேசமயம் இந்தியா சீனாவிற்கு எதிரான நாடுகளுடன் தனது உறவை பலப்படுத்தியும் வந்துள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை பலப்படுத்தி வந்ததுடன், அமெரிக்காவின் தளங் கள் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா 375 மில்லியன் டொலர்களுக்கு பிரம் மோஸ் ஏவுகணைகளையும் கடந்த வருடம் விற்பனை செய்திருந்தது.
மேற்குலக நாடுகளுக்கு எதிரான கருத்துக் களில் இருந்த அண்மைக்காலமாக இந்தியா விலகியே இருந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. அது இஸ்ரேலு டன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியது டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள் கொண்ட குவாட் என்ற அமைப்பிலும் இணைந்திருந்தது.
ஆனால் இந்தியாவின் இந்த முடிவு ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரும் ஒரு அரசியல் மற்றும் படைத்துறை சமநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்தியாவின் பிராந் திய வல்லாதிக்கமும் இழக்கப்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கதிரைகளுக்காக கழுதையுடன் சவாரி செய்ய வேண்டாம்: பா.அரியநேத்திரன்

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியுடன் இணைவதும், மட்டக்களப்பில் ரிம்விபியுடன் இணைவ தும் ஒன்றுதான்.
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானம் உள்ளூராட்சி சபைகளில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிகளை அமைக்க ஈபிடிபி டக்ளஸ் தேவனாந்தாவின் காலடியில் சரணாகியது ஒரு வெட்ககேடான ஏற்க முடியாத கண்டிக்கத்தக்க செயல்.
கதிரைகளை தக்கவைப்பதற்காக கழுதைகளில் எல்லாம் ஏறமுற்படுவது அரசியல் அநாகரிக
மாகும். தமிழ்தேசிய கொள்கைகளை மறப்பதும், கடந்த காலங்களில் தமிழ்தேசியத்தை காட்டிக் கொடுத்தவர்களுடன் கை கோர்பதும் தமிழரசுக்கட்சிக்கு எதிர்காலத்தில் சாபக்கேடாகவே அமையும்.
மட்டக்களப்பில் ரிஎம்விபி பிள்ளையானும் தமிழ்தேசியத்தை காட்டிக்கொடுத்த துரோக அரசியலை செய்த ஒருவர், யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி டக்ளஸும் தமிழ்தேசியத்தை காட்டிக்கொடுத்த துரோக அரசியலை செய்தவர்  என்பதால் இவர்கள் இருவருடனும்  இணை ந்து ஆட்சியமைப்பது எந்த வகையில் நியாயம் ?
ஆட்சியமைக்க ஆசனங்கள் எண்ணிக்கை இல்லை எனில் கௌரவமாக எதிர்கட்சியில் இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆட்சியில் பதவிகளில் இருப்பதால் மலையை புடுங்கி மாமரத்தில் சாத்தவும் முடியாது.
கடந்த காலங்களைப்போன்று நிதி வழங்கல் ஒதுக்கீடுகள் தேசிய மக்கள் சக்தி அரசால் கிடைக்க கூடிய வாய்ப்புகள் மிக அரிதாகவே இம்முறை உண்டு.
தேசியதலைவரை போதை பொருட்கள் கடத்தியவர் என பாராளுமன்றத்தில் வெளிப்படையாக பேசிய டக்ளஸ்தேவானந்தாவுடன் தமிழரசுக்கட்சி கதிரைகளுக்காக சோரம்போக நினைத்திருந்தால் அதனை உடனே நிறுத்தவேண்டும்.
பதில் தலைவர் சிவஞானம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி போன்று தமிழரசுக் கட்சியை வழிநடத்தப்பார்ப்பதை கைவிட்டு கொள்கை அரசியலில் செயற்பட தன்னை மாற்றவேண்டும். இல்லை எனில் ஏற்கனவே பொதுச்சபையால் தலை வராக ஏற்றுக்கொண்ட சிவஞானம் சிறிதரனுக்கு தலைவர் பதவியை கொடுத்து தான் விலகி இருப்பது நல்லது.
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதவிக்கான கட்சி இல்லை. அது தமிழ்தேசிய அரசியல் கொள்கைக்காக இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் உரிமையை வென்றெடுக்கும் வேலைத் திட்டங்களை முன்எடுக்கும் கட்சி என்பதை அனை வரும் புரியவேண்டும்.
கடந்த 2024, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான எட்டு தமிழரசுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மௌனத்தை கலைத்து வெளிப்படையாக ஈபிடிபி கட்சியுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது சரியா தவறா என்பதை கூறவேண்டும். அரசியல் குழு, மத்தியகுழு எல்லாம் தனிநபர் திசைகாட்டலுக்கு தலை அசைக்காமல் இந்த விடயத்தில் வெளிப்படையாக கருத்துக்களை கூறவேண்டும்.
மாவீரர்களின் தியாகம், மண்ணில் இழந்த இழப்புக்கள்,கடந்தகாலங்களில் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் எல்லாவற்றையும் குழிதோண்டி புதைத்துவிட்டு துரோகங்களுடன் கைகோர்த்து எமது உரிமை பயணத்தை உதாசீனம் செய்வது இனத்துரோகமாகும்.

சர்ச்சைக்குரிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முயல்வதாக குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவும் மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ இதனை தெரிவித்தார்.

8 மணிநேர வேலை மணித்தியாலத்தை ரத்து செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதனை ஒரு அடிமைச் சட்டம் என தற்போதைய தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க முன்னதாக தெரிவித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் தற்போதும் பகிரப்படுகின்றன.

குறைந்தது 7 பேரை கொண்டு தொழிற்சங்கமொன்றை ஆரம்பிக்கமுடியும். எனினும், இந்த வரையறையை குறித்த சட்டமூலம் ஊடாக மனுஷ நாணயக்கார 100 பேர் என்றவாறு அதிகரிக்க முயன்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மாற்றம் ஏற்படுமாயின், ஒருபோதும் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது.
தற்போது, ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுமிடத்துக்கு அதற்கு எதிராக உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு இயலுமை உண்டு. எனினும், குறித்த சட்டமூலத்தில், பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதாயின் 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன என்றும் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இதனூடாக தொழிலாளர்களின் உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதுடன். இது முற்றுமுழுதாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும். இதனை அரசாங்கம் கொண்டு வரமுயற்சிக்குமாயின், ஒவ்வொரு நிறுவனமாக சென்று இது குறித்து பிரசாரம் செய்வதற்கும் தங்களது தரப்பு தயாராக உள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.