Home Blog Page 1308

 காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்- மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”முடிவை நோக்கிய ஒரு பேச்சு வார்த்தைக்கு, சாதகமான சூழலை” உருவாக்குவது அவசியமானது என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று பாகிஸ்தான் தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ழுதிய கடிதத்தில், “ஒரு அண்டை நாடாக, பாகிஸ்தானுடன் சுமுகமான உறுவுகளை  இந்தியா விரும்புகின்றது. இதற்கு பயங்கரவாதமும், பகைமையும் இல்லாத ஒரு நம்பிக்கை அளிக்கும் சூழல் அவசியம்” ன்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் படிதத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதிய பிரதமர் இம்ரான்கான்,“பாகிஸ்தானும், இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, கூட்டுறவு உறவுகளை விரும்புகிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “ தெற்கு ஆசியாவில் நீடித்த அமைதியும் , நிலைத் தன்மையும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லா பிரச்சினைகளையும் , குறிப்பாக ஜம்பு காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதை சார்ந்திருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்  அதில் திருத்தங்கள் அவசியம் –   மாவை

மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது.

என்ன திருத்தம் என்பது தொடர்பான பிரேரணையினை பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கின்றபோது அது தொடர்பில் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பார்கள்.அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படும்போது அது தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சி ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் தீர்மானம் எடுக்கும். தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும். முதலாவதாக மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்ற உறுதிப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில்கூட அது சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் பல பிழைகள் காணப்படுகின்றது. எல்லை நிர்ணயம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எதை அரசாங்கம் முன்வைக்கப்போகின்றது என்பதை அறிந்த பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து எங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவோம்.

ஐ.எஸ்.ஐஎஸ் தாக்குதலினால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.ஒரு நாட்டின் மீது பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  அது தொடர்பில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது சொல்லப்படவில்லையென்பது இன்று விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பல குறைபாடுகளை கண்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உண்மையான விடயங்களை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அதனை நாங்களும் ஏற்றுக்கொண்டு அதில் என்ன தவறு இருக்கின்றது,எது திருத்தப்படவேண்டும், உண்மை என்ன என்பது தொடர்பில் ஆண்டகையின் வேண்டுகோளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கின்றது.

அந்த அறிக்கை முழுமையாகத் தாயாரிக்கப்பட்டுள்ளதா,முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் நாடாளுமன்றத்திலேயே எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பிலான குறைபாடுகளை எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பான விவாதத்தின்போது கருத்துகளை முன்வைப்பார்கள்” என்றார்.

தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றது.

IMG 0036 தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

IMG 0010 1 தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள்,கட்சி மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG 0006 1 தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள்

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தந்தை செல்வா ஜனனதின சிறப்புரை கட்சி தலைவரினால் நிகழ்த்தப்பட்டது.

அதே நேரம், வவுனியாவில் தந்தை செல்வாவின் 123ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது.

IMG 0794 தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள்

நிகழ்வில் தமிழரசுகட்சியின் வவுனியா நகரசபைஉறுப்பினர் நா.சேனாதிராஜா அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதன்பின்னர் ஏனையவர்களால், அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறுத்தும் அளவிற்கு இந்த மண் மாபியாக்கள் செயற்படுகின்றன -கோ.கருணாகரம்

சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா, நாடாளுமன்ற  உறுப்பினர்களையே அச்சுறுத்தும் வகையில் மண் மாபியாக்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் மீண்டும் இராஜாங்க அமைச்சருடன் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். அன்று குளம் போல் காட்சியளித்த பகுதி இன்று நிரப்பப்பட்டிருக்கின்றது.

அதற்கு மண் எங்கிருந்து வந்ததென்றால் அதனைச் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் முகமாக மீண்டும் மீண்டும் இந்த மண் மாபியாக்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி பிரதேசங்களில் தான் கொடுத்த அனுமதியை மீறி மண் அகழ்வு சட்டத்திற்கு விரோதமாக இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணக்கள அதிகாரி கூடச் சொல்லுகிறார். இங்கு களவிஜயம் மேற்கொண்ட எந்த அதிகாரியும் விரும்பத்தக்கதான செயலாக இச்செயல் பார்க்கப்படவில்லை.

அதுமாத்திரமல்லாமல் இந்தப் பிரசேத்து விவசாயிகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலே எடுக்கப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

அத்துடன் மட்டக்களப்பிற்கு சில அமைச்சர்கள் வருகை தந்து கூட்டம் நடாத்த இருக்கின்றார்கள். அதிலும்கூட நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம்.

எதிர்காலத்திலே இவ்வாறான வேலைகள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என்பதே உண்மை. எனவே இதனை அனைவரும் இணைந்து இதற்கான நிரந்தர முடிவினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணை – வலியுறுத்துகிறது கனடிய எதிர்க்கட்சி

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை உடன்செய்யுமாறு அது வலியுறுத்துகிறது. இச்சட்டவிதிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான மேலும் பல நடவடிக்கைகளுக்கும் வலிகோலும் என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

கன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங்கும், சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் கார்னட் ஜீனியசும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அவ்வறிக்கையில், தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவுகூர்ந்துள்ள அவர்கள், ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர், கனடியப் பாராளுமன்றத்தில், ஜக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில், சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை, எனவும் கரிசனை வெளியிட்டுள்ளது கனடிய எதிர்கட்சி.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில், எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ, கொண்டிக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ள கனடிய எதிர்க்கட்சி, இந்நிலையில் அவர் கோரிக்கைகளுக்கு அமைய, அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுளளது.

சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை, மனித உரிமைகளை முன்னேற்ற தொழிற்படும் கனடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை, தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அ;றிக்கையில் குறிப்பிட்டு, அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள கனடிய எதிர்கட்சி, அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

ஜ.நா தீர்மானத்தை கடந்து கனடா உட்பட சர்வதேச சமூகம், தமது அடுத்த கட்ட நடிவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வகையிலான முதல்க் குரலாக கனடிய எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கையை கொள்ளலாம் என்கின்றனர் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள்..

நன்றி: நேரு குணரட்னம்

 

 

 

 “நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்” ராஷெல்லி வலென்ஸ்கி

“நான் மீண்டும் வரவிருக்கும் அழிவைக் குறித்து பேசப் போகிறேன்”  என அமெரிக்க அரசை எச்சரித்துள்ளார் அந்நாட்டு பொது சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி ராஷெல்லி வலென்ஸ்கி.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.87 கோடியைக் கடந்துள்ளது. மேலும், இந்த  வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து அந்நாட்டு அரசை எச்சரித்துள்ளார்   ராஷெல்லி வலென்ஸ்கி.

மேலும் “கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாம் நம்பிக்கையோடு இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இப்போது பயத்தில் இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மாகாணங்களில் அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாகாண அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு “நாம் இப்போது விதிகளைத் தளர்த்திவிட்டால், கொரோனா வைரஸ் இன்னும் மோசமாவதைப் பார்க்கலாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000-ஐத் தொட்டது. இது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் படி 7 சதவீதம் உயர்வு.

இது வரையில் அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 31,097,154 ஆகவும் 564,138 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் புனரமைக்கப்படும் கிட்டு பூங்கா

கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
எமது அடையாளம் எமது வரலாறு என்பதற்கமைவாக தற்போது யாழ்.மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் டக்ளஸ் யோசனை

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலில் ஈடு பட அனுமதிக்கும் யோசனை ஒன்றை இந்தியாவிடம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின்  எல்லைதாண்டும்  பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, அந்தப் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் “இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை  இந்தியாவிடம் முன்வைத்துள்ளேன்.

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க  யோசனை முன்வைத்துள்ளேன்.

இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும்.

இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கவும்  வேண்டும் என்ற யோசனையும் முன்வைத்துள்ளேன்” என்றார்.

ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச  மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புகூற வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கை.

தமிழ் மக்களின் நீதிக்கான இந்த கோரிக்கை – ஏக்கம் – 12 வருடங்களாக தொடர்கின்றது. சிறீலங்காவைப் பொறுப்புகூறச் செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இதுவரை 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2012 மார்ச் மாதம் 22 ஆம் திகதிய 19-2 ஆம் இலக்கம் கொண்ட தீர்மானம், 2013 மார்ச் மாதம் 21 ஆம் திகதிய 22-1 ஆம் இலக்கத்தைக் கொண்ட தீர்மானம், 2014 மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 25-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டு வரப்பட்டட 30-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2017 மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 34-1 ஆம் இலக்கத் தீர்மானம், அதன் பின்னர் 2019 மார்ச் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 40-1 ஆம் இலக்கத் தீர்மானம் ஆகிய இந்த 6 தீர்மானங்களினாலும் சிறீலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

ஏழாவதாக வந்துள்ள 46-1 பிரேரணை முன்னையவற்றைப் போலவே பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசாங்கத்திடமே விட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு வழமைபோலவே கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு அம்சங்களுமே தமிழ்த்தரப்பினருடைய அதிருப்திக்குக் காரணமானவையாக இருக்கின்றன.

அதேவேளை  தமிழ்த்தரப்பினால் கோரப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது சர்வதேச  தீர்ப்பாயம் என்ற விசாரணை பொறி முறையின் கீழ் அரசாங்கம் பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும். அதன் ஊடாக போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தங்களுக்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழ்த்தரப்பின் முக்கிய கோரிக்கையாகும்.

ஐ.நாவின் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு சர்வதேச பொது நிலையில் – பொதுப் பொறிமுறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை.

இது தமிழ்த்தரப்பை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. அதனால் தமிழ்தரப்பில் சிலர் இந்தப் பிரேரணையை ஏற்க முடியாது என்று நிராகரித்திருப்பதைக் காண முடிகின்றது. அது மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தன்னியல்பு சார்ந்த பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து தமது கண்டனங்களையும் கடுந்தொனியில் வெளியிட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்கமும் இந்தப் பிரேரணை குறித்து கடும் வார்த்தைப் பிரயோகத்தில் தனது அதிருப்தியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. மனித உரிமைகள் எதுவுமே மீறப்பட வில்லை. போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. படைத்தரப்பின் இந்த நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டனர். பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை என்று அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது. அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வர முயன்ற பொது மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள் என்றும் அரசு குற்றம் சாட்டியிருக்கின்றது.

அரசாங்கம் மனித உரிமைகளை மீறியிருக்கின்றது என குற்றம் சுமத்துபவர்கள் ஏன் விடுதலப்புலிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பேசவில்லை? அது விடயத்தில் அவர்கள் ஏன் மௌனம் சாதித்திருக்கின்றார்கள்? என்று எரிச்சலுடன் அரசு கேள்விகளை எழுப்பி இருக்கின்றது.

“சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை. உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்வோம். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மூன்று லட்சம் பொதுமக்களை மனிதாபிமான ரீதியில் பாதுகாத்து உயிர்வாழச் செய்த இராணுவத்தின் சேவையை மறந்துவிடக் கூடாது” என அரசு கூறியிருக்கின்றது.

 “இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை சிலர் விரும்பவில்லை. அந்த விருப்பமின்னையின் வெளிப்பாடே 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளாக வெளி வந்திருந்தன” என சுட்டிக்காட்டியுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ரணில் – மைத்திரிபால கூட்டு அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம்” என கூறியுள்ளார்.

 “அந்தப் பிரேரணை நாட்டின் இறையாண்மைக்கு முரணானது. நல்லிணக்கத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்புக்கு மாறானது. அது பல்வேறு நாடுகளிடமிருந்து சிறீலங்காவை துருவப்படுத்தும் செயற்பாட்டைக் கொண்டது. நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இராணுவத்துக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியது. சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை சுயாதீனமானது. அதில் தலையிடவல்ல எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையையும் அனுமதிக்க முடியாது” என்ற காரணங்களுக்காகவே அந்தப் பிரேரணையை கோத்தாபாய அரசு அந்தப் பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

download ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் - பி.மாணிக்கவாசகம்

 

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து  விலகியமைக்காக அவர் வெளியிட்டுள்ள காரணங்கள் உப்புச்சப்பற்றவையாகவே காணப்படுகின்றன. உள்ளக நீதிப்பொறிமுறையின் ஊடாக சர்வதேசமும், தமிழ் மக்களும் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலான விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என்பதையே இந்தக் காரணங்கள் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46-1 பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. 11 நாடுகள் எதிர்த்திருக்கின்றன. இது பிரேரணைக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன நிராகரித்திருக்கின்றார்.

பேரவையின் மொத்த உறுப்பினர்களாகிய 47 நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளைவிட 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இவ்வாறு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த நாடுகளும் சிறீலங்காவிற்கு ஆதரவளித்திருப்பதாகவே தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

 “ஒட்டுமொத்தமாக இந்தப் பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவில்லை” என்று அவர் அறதியிட்டுக் கூறியிருக்கின்றார். அவருடைய இந்தப் பெரும்பான்மை பற்றிய கணக்கு நாட்டு மக்களை ஏளனச் சிரிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

 “இந்தப் பிரேரணை பக்கச்சார்பானது. இதன் பின்னணியில் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. ஆகவே நாங்கள் இந்தப் பிரேரணையை முற்றாக நிராகரிக்கின்றோம்” என்று அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

உண்மையில் இந்தப் பிரேரணையின்மூலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நேர்மையான சர்வதேச தரத்துக்கு அமைவான விசாரணைகளை நடத்தி அதன் ஊடாகத் தனது பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை வழங்கி இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிடுமேயானால், பொறுப்பு கூறலுக்கான விசாரணைகளும், போர்க்குற்றங்களுக்கான நீதி விசாரணைகளும் சிறீலங்காவிடமிருந்து கைநழுவிப் போய்விடும் என்ற இந்தப் பிரேரணையின் உட்கிடக்கையை – யதார்த்தத்தை அரசு உணர மறுத்திருக்கின்றது. போக்கிரித்தனமான தனது கணக்கு வழியில் இந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை ஆதரவு கிட்டவில்லை எனக் கூறியுள்ள தினேஷ் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்தான நிலைமைகளை உணர முடியாமல் போயிருப்பதில் வியப்பில்லை.

போர்க்குற்றச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி, பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்த வேண்டும் என்பது இந்தப் பிரேரணையின் மிக முக்கியமான உள்ளடக்க அம்சமாகும். இந்தப் பொறுப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பொறுப்பேற்றுச் செயற்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான ஆளணி மற்றும் இதர செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடும் வசதிகளும் செய்யப்பட வேண்டும் என இந்தத் தீர்மானம் கூறியிருக்கின்றது.

இவ்வாறு உரிமை மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான ஆவணங்களை ஐ.நா மன்றத்தின் பிரதான பிரிவுப் பொறிமுறையின் ஊடாகத் திரட்டி பாதுகாத்தல் என்பது சிறீலங்கா அரசாங்கத்தின் கழுத்தைச் சுற்றிய பாம்பாகும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் திரட்டிப் பாதுகாக்கப்படுகின்ற ஆதாரங்கள், ஆவணங்கள் என்பவற்றை சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை அல்லது மனித உரிமை மீறல்களை முன்வைத்து, பேரவையின் எந்தவொரு உறுப்பு நாடும் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரேரணையில் கூறப்பட்டிருக்கின்றது.

இது உடனடியாகவோ அல்லது காலம் கடந்த நிலையிலோ சிறீலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கின்ற கூரிய கத்தியாகவே அமையும். அந்தக் கத்தியை எந்த  வேளையிலும் எத்தகையதொரு தருணத்திலும் மனித உரிமைகள் மீது பற்றுகொண்டுள்ள எந்த நாடும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்தப் பிரேரணையின் அடிநாதமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், சிறீலங்கா அரசு உள்ளக விசாரணைகளையோ, கலப்புப் பொறிமுறை சார்ந்த விசாரணைகளையோ அல்லது ஐ.நாவின் உதவியுடனான சர்வதேச விசாரணைகளையோ – ஏதேனும் விசாரணைகளின் மூலம் பொறுப்பு கூறலுக்கான தனது கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விசாரணைப் பொறிமுறையும் விசாரணைகளை நடத்துகின்ற பொறுப்பும் அரசாங்கத்தின் கைகளில் இருந்து சர்வதேச வெளியரங்கில் கைமாறிவிடும்.

அதன் பின்னர் எந்த விசாரணைகளையும் சிறீலங்கா அரசினால் நடத்த முடியாத நிலைமை உருவாகிவிடும். சர்வதேச அரங்கில் பேரவையின் எந்தவோர் உறுப்பு நாடும் தான் விரும்பிய வகையில் தனது உள்ளக விசாரணைகளையோ அல்லது சர்வதேச விசாரணைகளையோ நடத்துவதற்கு அது வழிவகுத்துவிடும்.

இந்த விடயத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான தமிழ்த்தரப்பு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய புரிதலின் அடிப்படையில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை சரியாக இனம் கண்டு, அவர்களை சாட்சியங்களாகத் தாயர்ப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்களைப் பயன்டுத்த வல்ல நாடுகளைக் கண்டறிந்து அவற்றின் ஊடாக உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்காடுவதற்குத் தூண்ட வேண்டும்.

எனவே 46-1 பிரேரணை தொடர்பில், முரண்பாடானதும், பல்வேறு வகைப்பட்டதாகவும் கிளர்ந்து எழுந்துள்ள கருத்துக்கள் எதிர்வினைகளுக்கு மத்தியில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களினாலும் போர்க்குற்றச் செயல்களினாலும் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ்த்தரப்பின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாதகமான அம்சங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி, தமது நீதிக்கான ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் – விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

தமிழ் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் 31 தமிழ்ப் புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று அதிகாலை ஜேர்மனியின் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலாத்காரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

2 1 31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் - விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

நேற்று பகல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரகசியமாக இவர்கள் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இலங்கை நேரம் 1.00 மணியளவில் அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

ஸ்பானிஸ் விமானமான Wamos Air flight PLM / EB 308 விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடுகடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்திவந்தன. ஜேர்மனியிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் நேற்றுப் பகல் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து நூற்றுக்கணக்கான தமிழர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டுள்ளார்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் பலருடைய தொலைபேசிகள் நேற்று மாலையுடன் செயலிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் சிலர் நாடு கடத்தப்படவுள்ளவர்களை விமான நிலையத்தில் சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான அனுமதி இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டது. இதனால், அவர்கள் கடும் ஏமாற்றமடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

1 242 31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் - விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

 டுசில்டோவ் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு ஜேர்மன் நேரம் 9.16 மணியவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.00 மணழயளவில் புறப்பட்ட விமானத்தில் இந்த 31 புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக ஏற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு வரையில் விமான நிலைய சுற்றாடல் தமிழர்களால் நிறைந்திருந்ததுடன், பதற்றமான நிலையும் காணப்பட்டது.