அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம்-லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஜுலை 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும் ஜுலை மாதத்துக்குள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜுலை 6 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.  டொலர் பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக கேஸ் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறைந்தளவான சிலிண்டர்களே சந்தைக்கு விநியோகிக்கப்படும் நிலையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் எரிவாயு பெற தொடர்ந்தும் நீண்ட வரிசை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.