அமெரிக்க இராஜாங்க செயலாளர் நவம்பரில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்

200 Views

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணமானது பெரும்பாலும்  நவம்பரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு நாடுகளிடம் கூடுதல் ஒத்துழைப்புகளை கோரி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் நெருக்கடி குறித்து அமெரிக்கா கூடுதல் அவதானம் கொண்டுள்ளமையை பிரதிபளிக்கும் வகையில் நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply