USA தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சு

சுரங்கத்தொழில் மற்றும் கனியவளங்கள் அகழ்வுகளை கைத்தொழில்துறையில் முதலிடுவதற்காக அமெரிக்காவின் ஒத்துழைப்புக்களை பெறுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடினார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் கடந்த (01) அமெரிக்கத்தூதுவர் ஜூலிசங்குடன் நடாத்திய கலந்துரையாடலில், இருதரப்பு உறவுகள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்தப்பட்ட தாக கூறப்படுகின்றது. இலங்கையின், தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பதன் அவசியத்தையும் இதன்போது அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.