12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

212 Views

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply