மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 162 புலம்பெயர் கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 25ம் திகதி கோலாலம்பூரில் உள்ள Jalan Bukit Kiara எனும் இடத்தில் இருக்கும் ஒரு கட்டுமான தளத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்தது தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட 162 தொழிலாளர்களில் 118 பேர் வங்கதேசிகள், 23 பேர் மியான்மரிகள், 11 பேர் இந்தோனேசியர்கள், 10 பேர் பாகிஸ்தானியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் மலேசிய காவல்துறை, குடிவரவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.