மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் பேச்சுசுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கைகள்-CPA

அடிப்படைஉரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஆட்சியை அற்றுப்போகச்செய்யும்இலங்கையின் பலவீனமான  அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவிர்க்கவேண்டும் என  மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மாற்றுக்கொள்கைகளிற்கான  நிலையம்  மேலும் தெரிவித்துள்ளதாவது

சர்வதேச  ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரிய சமீபத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்து மாற்றுக்கொள்கைகளி;ற்கான நிலையம்  ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது – மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் கருத்துசுதந்திரத்தை முடக்குவதற்கான மிகச்சமீபத்தைய நடவடிக்கை இதுவாகும்.

ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது இதுவே முதல்தடவையல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மத தேசிய மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கருத்துக்களிற்காக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எதிரிசூரியாவின் நிகழ்வில் கலந்துகொண்டவர்களை  விசாரணை செய்வதற்கான திட்டங்கள் காணப்படுகின்றன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது கருத்துச்சுதந்திரத்திற்கான தளம் குறைவடைவது ,இலங்கையில் மாற்றுக்கருத்தின் மீதான அச்சம்தரும் தாக்கம் என்பவை குறித்த ஏற்கனவே காணப்படும் கரிசனைகைள மீண்டும்  அதிகரித்துள்ளது.

இனமத ஐக்கியத்த்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்துக்கள் பேச்சுக்களை கட்டுப்படுத்துதல் என்ற போர்வையில் கைதுகள் இடம்பெறுகின்றன -ஆனால்இந்த பேச்சுக்கள் கருத்துக்கள்  தூண்டுதல் பாரபட்சம் வன்முறை போன்றவற்றை உள்ளடக்கியவையா என்பதை தீவிரமாக ஆராயாமல்  கைதுகளை மேற்கொள்வது அரசமைப்பின் 14 வது பிரிவின்மூலமும் ஐசிசிபிஆரின் 19வது பிரிவின் மூலமும் உறுதிசெய்யப்பட்ட பேச்சுசுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.

இந்த ஏற்பாடுகள் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன, சிறுபான்மை குழுக்களை சேர்ந்த தனிநபர்களை இலக்குவைப்பதற்காக  மாற்றுக்குரல்களை ஒடுக்குவதற்காக சுதந்திர பேச்சை குற்றமாக்குவதற்காக ஆயுதமாக்கப்படுகின்றன என்பதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் முன்னரும் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் மிகவும் சவாலான சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளில் இருந்து  கவனத்தை திசை திருப்ப இவை பயன்படுகின்றன.

மதஐக்கியத்தை பாதுகாப்பதற்கும் உறுதிசெய்வதற்குமான புதிய சட்டங்கள் குறித்த ஊடக தகவல்களை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கருத்தில் கொண்டுள்ளது.

இலங்கையில் பல சட்டங்கள் காணப்படுகின்றன எனினும் உண்மையான சவால் என்பது போதியளவு சட்டங்கள் இன்மையில்லை மாறாக அந்த சட்டங்களை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தாமையும்,வன்முறைகளை தூண்டியவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமையும் ஆகும்.

இலங்கையின் சமீபத்தைய அனுபவங்கள் இதனை உறுதிசெய்கின்றன-ஆதாரங்கள் உள்ளபோதிலும் குற்றவாளிகளிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சில சந்தர்ப்பங்களில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு பதில் தூண்டுதல்களில் ஈடுபட்டவர்களை அரசபொறிமுறைகளிற்கு நியமித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அதிகாரிகள் அடிப்படைஉரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஆட்சியை அற்றுப்போகச்செய்யும்இலங்கையின் பலவீனமான  அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவிர்க்கவேண்டும் என  மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் விடுக்கின்றது.