பலத்த புயல் காற்று, கனமழை என சௌதி அரேபியாவை வானிலை வாட்டி வதைத்து வரும் நிலையில், மெக்கா மற்றும் மதீனா போன்ற புனிதத் தலங்களை முழுமையாக மழைநீர் சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதீனா பகுதியில் 49 மிமீ மழையும், ஜித்தா நகரில் 38 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தால் வாகனங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
இந்தக் கனமழை தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.