பூச்சிகளை உணவில் சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பூச்சிகளை புறஊதா கதிர்கள் மூலம் விற்றமின் டி உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் பவுடராக மாற்றி உணவு வகைகளில் சேர்ப் பதன் மூலம் அதிக புரதத்தை பெறமுடியும் என்ற திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பவுடர் பாண், வெண்ணைக்கட்டி, பஸ்ரா உட்பட பல உணவு வகைகளில் சேர்க்கப் படவுள்ளது. உலர்த்தப்பட்ட பூச்சு வகைகள் மீது புறஊதா கதிர்களை பாச்சுவதன் மூலம் மனிதரின் உடலில் உள்ள கலங்கள் விற்றிமின் டி என்ற பொருளை உற்பத்தி செய் வது போன்று விற்றமினை உற்பத்தி செய்ய முடியும். அதன் பின்னர் அது உணவில் சேர்க்கப்படவுள்ளது.
பூச்சிவகைகளில் அதிக புர தம் உள்ளதால் 4 விகித அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மக்க
ளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இந்த நடைமுறை எதிர்வரும் 10 ஆம் நாளில் இருந்து நடை முறைக்கு வரவுள்ளது. இதனை உணவில் சேர்ப்பதற்கான அனுமதியை ஐரோப் பிய ஒன்றியத்தின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு (European Food Safety Authority (EFSA)) வழங்கியுள் ளது. எனினும் இந்த வகை உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அது தொடர்பில் அதிக ஆய்வுகள் தேவை என்பதுடன், உணவுகளின் பெட்டிகளில் இந்த விபரங்கள் எழுதப்படவேண்டும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரி க்க நாடுகளில் மக்கள் இவ்வாறான பூச்சி வகைகளை தமது உணவுக்கு பயன்படுத்தி வருவதுண்டு. தாய்லாந்து மற்றும் மெக்சிக்கோ நாடுகளில் வெட்டுக்கிளிகளை உணவாக பயன்படுத்திவருகின்றனர். 16 வகையான பூச்சிகளை உணவில் சேர்ப்பதற்கு அண்மையில் சிங்கப்பூ ரும் அனுமதி வழங்கியுள்ளது.