பெலாரூஸ் மீதான தடையை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

பெலாரூஸ் மீதான தடை

பெலாரூஸ் மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையிலான குடியேறிகள் பிரச்சினையை பெலாரூஸ் தீவிரப்படுத்தி வருவதால், பெலாரூஸ் மீதான தடையை  ஐரோப்பிய ஒன்றியம் விரிவுபடுத்த உள்ளது.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜீய அதிகாரிகளில் ஒருவரான ஜோசஃப் போரெல் இத்தடை விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குடியேறிகள் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாகவும், பாதிக்கப்படும் நிலையில் உள்ள குடியேறிகள் இப்போரில் சுரண்டப்படுவதாகவும் கூறினார்.

பெலாரூஸ் மீது, தன் நாட்டுக்குள் இருக்கும் குடியேறிகளை, எல்லையை நோக்கி வெளியேற்றி பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் அதை பெலாரூஸ் மறுக்கிறது. குடியேறிகள் ஒரு பக்கம் பெலாரூஸ் நாட்டுப் படை மறுபக்கம் போலாந்து நாட்டுப் படைக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

பெலாரூஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் குடியேறிகள் போலாந்து நாட்டுக்குள் நுழைய முடியவில்லை, அதே நேரம் பெலாரூஸ் நாட்டுக்குள் மீண்டும் நுழைவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.

நன்றி – பிபிசி