விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் வனவளத்துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

109 Views

வனவளத் துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கோராவளி கிராமசேவையாளர் பிரிவில் வட்டவான் என்னும் கிராமத்தில் காலாகாலமாக சேனைப்பயிர் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மக்களின் நிலங்களில் மரக்கன்றுகளை வனவளத் துறையினர் திட்டமிட்டுள்ளதைத்  தடுத்து நிறுத்துமாறு வனவளத் துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

குறித்த பகுதிகளில் நீண்டகாலமாக மக்கள் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் மூலமே குறித்த பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வனவளத் துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில் குறித்த பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கை காணிகள் மற்றும் விவசாய காணிகளில் வனவளத்துறையினரால் மரங்கள் நடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தி தமது விவசாய காணிகளை பாதுகாக்குமாறு அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் யாரும் கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே போராட்டத்தில் குதித்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வனவளத் துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

இதன்போது தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரிடம் மகஜனர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் வனவளத்துறையினருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Leave a Reply