தெனியாயவில் பரவும் மர்மக் காய்ச்சல்!

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, நான்கு பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் தொற்றுநோயியல் பிரிவின்  விசேட நிபுணர்கள் குழுவினர் தெனியாயவிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட நிபுணர்கள் குழுவினர் தெனியாயவிற்கு செல்லவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள்,

காய்ச்சல் வேகமாகப் பரவினாலும், இது ஒரு தொற்றுநோய்  நோய்  மட்டத்திற்கு இன்னும் தீவிரமடையவில்லை.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படும் எனத் தென் மாகாண கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.