பாகிஸ்தானில் நில நடுக்கம்-6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 6 குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாகத் தெரியவந்திருக்கிறது.

பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவாகப் பதிவாகி இருக்கிறது.

நிலநடுக்கம் குறித்து பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் ஜெனரல் நசீர் அஹமது நசீர் கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப் பாங்கான பகுதி. அதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுளது. ஹர்னாய் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புக் குழுவினர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன” என்றார்.