வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி – தங்கத்தின் விலை உயர்வு

199 Views

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடரச்சியாக சரிவடைந்து வரும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த நிலையில் காணப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply