பெண்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் பொது மேடைகளில் தெரிவிக்கப்படும் பாலியல் தன்மையிலான கருத்துகள் வெறுமனே அசௌகரியத்தை ஏற்படுத்தும் பேச்சுகளாக மட்டும் கருதப்பட முடியாது. மாறாக, அவை பெண்களைத் தாழ்த்தி ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநாட்டும் உத்தியாகவும் அமைகின்றன என சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் உடலமைப்பு மற்றும் தோற்றம் குறித்து அமைச்சர் லால் காந்த கருத்து தெரிவித்தாகவும் அவ் இயக்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
வைத்தியசாலைகளில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் முன்னர் அமைச்சர் லால் காந்த பொது மேடையில் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் உடலைப் பாலியல் நோக்கில் அணுகும் இத்தகைய கருத்துகள், அவர்களின் தன்மானத்தையும் தொழில்முறை அடையாளத்தையும் அவமதிப்பதுடன், பாலியல் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன என அவ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.



