வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது. இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும். இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு இன்று அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.செல்வகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.



