ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்

இலங்கையில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு ஈடுபடவுள்ளன.

நள்ளிரவு 12 மணிமுதல் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் காலை அலரி மாளிகை வளாகத்தில் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டிருந்த மக்களை தாக்கியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

முன்னதாக, நேற்று நண்பகலில் கொழும்பு காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினருக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு வன்முறை சூழல் நிலவியது.

இதுவரை நடந்த மோதலில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள்  காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

30க்கும்  அரசியல்வாதிகளின் வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளன

அதன் விபரங்கள்….

1-சனத் நிஷாந்தவின் வீடு

2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

3-குருநாகல் மேயர் மாளிகை

4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்

5-மொரட்டுவை மேயர் மாளிகை

6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு

7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு

8-ரமேஷ் பத்திரனவின் வீடு

9-சாந்த பண்டாரவின் வீடு

10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை

11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்

12-அருந்திகாவின் வீடு

13-கனக ஹேரத்தின் வீடு

14-காமினி லொகுகேவின் வீடு

15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு

16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்

17-லான்சாவின்-2 வீடுகள்

18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு

19-யானை சபர் வீடு

20-பந்துல குணவர்தன வீடு

  1. வீரகெட்டிய மெதமுலன வீடு

22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022

23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30

24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40

25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45

26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50

27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி

28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10

29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15

30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40

31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45

32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45

அத்துடன் நாடளாவிய ரீதியில்  அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை (11) புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Tamil News