இலங்கை வன்முறை- அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டனம்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ட்விட்டர்  பதிவில், “அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளால் நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிந்து செயற்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கோரியுள்ளது.

22 6279833a7c621 இலங்கை வன்முறை- அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டனம்

முன்தாக அமைதியான போராட்டங்கள் மீது இன்று(09) மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung கண்டனம் வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் “அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கின்றோம்,கருத்துச்சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும் அமைதியான வழியில் முன்னெடுக்கப்படும்போது ஜனநாயகத்தின் தூண்கள்- பொறுமையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.