அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – பௌத்த மத தலைவர்கள் கண்டனம்

அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களிற்கு தங்கள் கண்டங்களை தெரிவித்துள்ள முக்கிய பௌத்த மததலைவர்கள் இந்த தாக்குதலிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமான பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோட்டா கோ கிராமத்தின் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்கள் தொடருமானால் அது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அனைவரும் அமைதியாக இருக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

அதே நேரம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tamil News