இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி

124 Views

 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று

 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று: புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளார்கள் இனங்காணப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

த.தே.கூட்டமைப்பின் இரட்டையர்களின் போக்கு தமிழர் நிலையில் ஒரு கேள்வி ஏற்படுகின்றது! | ILC

அதே நேரம் மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றுள்ளவர்கள் அடையாம் காணப்படுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார் .

கடந்த சில திங்களுக்கு முன் பரிசோதனைக்காக  அனுப்பப்பட்ட 3 மாதிரிகளில் இருவருக்கு டெல்டா தொற்றும் ஒருவருக்கு அல்பா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்களும்  10 மரணமும் சம்பவித்துள்ளதுடன், மட்டக்களப்பில் சராசரியாக 300 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு  வருவதுடன் மொத்தமாக 211பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply