காபூல் விமான நிலைய தாக்குதல்- அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் ஐஎஸ்-கே முக்கியஸ்தர் பலி

120312104 069906138 1 காபூல் விமான நிலைய தாக்குதல்- அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் ஐஎஸ்-கே முக்கியஸ்தர் பலி

காபூல் விமான நிலைய தாக்குதல்:  காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளியேறி வருகின்றனர். விமான நிலையம் அமெரிக்கப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர், 2 பிரிட்டன் நாட்டவர் மற்றும் பிரிட்டன் நாட்டவரின் குழந்தை ஒன்று உள்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய ஜிஹாதிகளை ‘மறக்கமாட்டோம், மன்னிக்கமாட்டோம். அவர்களை வேட்டையாடுவோம்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில்  தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது  ஆளில்லா விமானம் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply