ஒரே நாளில் 214 பேர் மரணம்: இலங்கையில் நேற்று வியாழக்கிழமை 214 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதி செய்தார். நாட்டில் நாளொன்றில் உறுதி செய்யப்பட்ட மிக அதிக கொரோனா மரணங்கள் இதுவாகும்.
ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்
வியாழக்கிழமை உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட 5 பேரும், 30 முதல் 59 வயது வரையான 58 பேரும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 151 பேரும் அடங்குகின்றனர். இவற்றுடன் இலங்கையில் கொரோனா பலியெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.