‘சீனாவை எதிர்க்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’- அவுஸ்திரேலியா பிரதமர்

சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும், தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்நாட்டைச் சீனா தண்டிக்கும் என முன்னாள் அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்கதயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய புவி அரசியல் பாதையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

“நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருந்தால், தனியாக எதிர்ப்பதை காட்டிலும் பிற நாடுகளுடன் இணைந்து சீனாவை எதிர்ப்பதே சிறந்தது. அப்போதுதான் சீனா அந்த நாட்டுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை செயல்படுத்த இயலாது” என  அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நன்றி பிபிசி