ஈரான் போரை நிறுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்   ஈரானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க முற்படும் நகர்வுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

பெப்ரவரியில் தொடங்கிய இந்தப் போருக்கு, பொதுவெளியில் ஏற்பட்ட அரிதான எதிர்ப்பாக 4 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர். 215 – 208 என்கிற கணக்கில் இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் நான்காவது முயற்சி இது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. ஒருவேளை செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினாலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவே.

இந்தத் தீர்மானத்தை டிரம்ப் நிராகரிக்கலாம் (வீட்டோ), டிரம்பின் வீட்டோவை ரத்து செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

கடந்த மே மாதம், ஏழு முறை தோல்வியடைந்த பிறகு இதே போன்றதொரு தீர்மானம் செனட் சபையில் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் முழுமையாக சபை வாக்கெடுப்புக்கு வரவில்லை.

நன்றி-பிபிசி தமிழ்