மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
“டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



