கொரோனாவால் இந்தியாவில் 40 இலட்சம் பேர் பலி

371 Views

AP 20272491663618 1 கொரோனாவால் இந்தியாவில் 40 இலட்சம் பேர் பலி

இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று அரசின் அலுவல் பூர்வ தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், 40 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க நிறுவன ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் சென்டர் ஃபார் க்ளோபல் டெவலப்மென்ட் எனும் அமைப்பின் ஆய்வாளர்கள், இந்தியாவில் அனைத்து காரணங்களாலும் கூடுதலாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் திகதி வரை கணக்கிட்டுள்ளனர்.

அதில் இந்தியாவில் இந்த பெருந் தொற்று காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்திலிருந்து 47 இலட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கோவிட்-19 தொற்று காரணமாக இறந்தவர்களின் அலுவல் பூர்வ எண்ணிக்கையை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply