அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹைட்டியின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு

000 9FG3CN 1 அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹைட்டியின் புதிய பிரதமராக Ariel Henry பதவியேற்பு

ஹைட்டி(Haiti) நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவி யேற்றுள்ளார்.

அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிபர் ஜோவனெல் மொய்ஸ், பிரதமராக பதவி யேற்குமாறு ஏரியல் ஹென்ரியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராக இருந்த Claude Joseph உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (19) Claude Joseph தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, ஹைட்டியின் புதிய பிரதமராக Ariel Henry இன்று (21) பதவி யேற்றுள்ளார்.

ஹைட்டி நாட்டின் அதிபர் Jovenel Moise, கடந்த 07ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply